பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
01:20
புதுடில்லி:அமெரிக்காவில், இந்தியாவின் அல்போன்சா, கேசர் மாம்பழங்களுக்கு பெரும் வர@வற்பு கிடைத்து உள்ளது.இந்திய மாம்பழங்களில் நுண்கிருமிகள் இருக்கக்கூடும் என்ற கருத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவற்றின் இறக்குமதிக்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தடை விதித்தன.
இதையடுத்து, நாசிக் கதிர்வீச்சுஆய்வகத்தில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவையே அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த வகையில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், அமெரிக்காவிற்கு, 165 கோடி ரூபாய் மதிப்புள்ள, 58,863 டன் மாம்பழம் ஏற்றுமதியானது. இது, 2011-12ம் ஆண்டில், 210 @காடி ரூபாயாகவும் (63,441 டன்), 2012-13ம் நிதியாண்டில், 265 கோடி ரூபாயாகவும் (55,413 டன்) அதிகரித்துள்ளது.
இதர நாடுகளை விட, இந்திய மாம்பழங்கள் தனிச் சுவையுடன், சிறந்த தரத்தில் உள்ளதால், அவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக விலை கிடைக்கிறது.உதாரணமாக, அமெரிக்காவில், இந்திய மாம்பழத்தின் விலை, 25-29 டாலராக உள்ள நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் மாம்பழத்தின் விலை, 5 - 5.50 டாலர் என்ற அளவில் குறைவாக உள்ளது.இந்திய மாம்பழத்திற்கு அதிக விலை கிடைத்து உள்ளதால், சென்ற நிதியாண்டில், அமெரிக்காவிற்கான மாம்பழ ஏற்றுமதி, அளவில் குறைவாக உள்ள@பாதிலும், மதிப்பின் அடிப்படையில் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|