பதிவு செய்த நாள்
12 செப்2013
00:45
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 64 ரூபாய் குறைந்து, 22,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், ஆபரண தங்கம் விலை, கடந்த இரு தினங்களாக சற்று குறைந்து காணப்பட்டது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,829 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,632 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, எட்டு ரூபாய் குறைந்து, 2,821 ரூபாய்க்கு விற்பனையானது. சவர னுக்கு, 64 ரூபாய் சரிவடைந்து, 22,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 85 ரூபாய் குறைந்து, 30,170 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 56.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 52,470 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|