‘சென்செக்ஸ் 348 புள்­ளிகள் வீழ்ச்சி‘சென்செக்ஸ் 348 புள்­ளிகள் வீழ்ச்சி ... பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குவியும் முதலீடு: 6 ஆண்டுகளில் காணாத உயர்வு... பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குவியும் முதலீடு: 6 ஆண்டுகளில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்­தையை புரட்டி போட்ட ‘கார்:மத்­திய அரசின் விளக்­கத்தால் நாளை நிமி­ருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2014
00:38

பொது வரி தவிர்ப்பு தடுப்பு சட்டம் (ஜி.ஏ.ஏ.ஆர் –'கார்') குறித்து மத்­திய அரசு அளித்த ஒரு வரி தகவல், வெள்­ளி­யன்று (11ம்தேதி), பங்குச் சந்­தையை புரட்டிப் போட்­டது. அன்று, மும்பை பங்குச் சந்­தையின் ‘சென்செக்ஸ்’, 1.40 சத­வீ­தமும் (348 புள்­ளிகள்), தேசிய பங்குச் சந்­தையின் 'நிப்டி', 1.43 சத­வீ­தமும் சரிவை கண்­டன. ரியல் எஸ்டேட், வங்கி, மின்­சாரம், பொறி­யியல் சாத­னங்கள் உள்­ளிட்ட துறைகள் சார்ந்த நிறு­வ­னங்­களின் பங்­குகள் வீழ்ச்சி கண்­டன.
ஒரு வரி தகவல்:கடந்த 2011ம் ஆண்டு டிசம்­ப­ருக்கு பிறகு, ஒரே வாரத்தில் பங்குச் சந்தை குறி­யீட்டு எண்கள், கிட்­டத்­தட்ட 4 சத­வீத சரிவை, சென்ற வாரம் தான் சந்­தித்­தன. இதற்கு, தொடர்ந்து நான்கு நாட்­க­ளாக, பங்குச் சந்தை சந்­தித்து வந்த வீழ்ச்­சியும் ஒரு காரணம் என்று கூறலாம்.
பங்குச் சந்தை முத­லீட்­டா­ளர்­களை பதம் பார்த்த, ஒரு வரி தகவல் தான் என்ன ?‘வரும் 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் ‘கார்’ சட்டம் அம­லுக்கு வரும்’ என, வெள்­ளி­யன்று, மத்­திய நிதித் துறை இணை அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் பார்­லி­மென்டில் அளித்த பதில்தான், பங்கு வர்த்­தகம் வீழ்ச்சி அடைய காரணம்.வரி குறை­வாக அல்­லது வரி விதிப்பு இல்­லாத, குறிப்­பாக, மொரீ­ஷியஸ், சைப்ரஸ் போன்ற நாடுகள் வழி­யாக, இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீ­டுகள் சார்ந்த வரு­வாயில், வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்­குடன் 'கார்' சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
உண்­மை­யான வர்த்­த­க­மின்றி, வரி செலுத்­து­வதை தவிர்ப்­ப­தற்­காக மட்டும், வெளி­நா­டு­களில் இயங்கும் இந்­திய நிறு­வ­னங்­களின் துணை நிறு­வ­னங்கள், அன்­னிய நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் பரி­வர்த்­த­னை­களை, இச்­சட்­டத்தின் கீழ், வரி அதி­கா­ரிகள் ஆராய முடியும்.
முறைகேடு;மேலும், இச்­சட்ட அம­லாக்கத் தேதியில் இருந்து, முந்­தைய இரண்டு ஆண்­டு­களில் நடை­பெற்ற பரி­வர்த்­த­னை­களை விசா­ரிக்­கலாம்.அதில், முத­லீட்டு நிறு­வ­னங்கள் முறை­கே­டாக வரிச்­ச­லுகை பெற்­றுள்­ளது தெரி­ய­வந்தால், அதை ரத்து செய்து, திரும்ப பெறு­வ­தற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கலாம்.வரி ஏய்ப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்கள் மீது, வழக்கு தொடுக்­கலாம்.
கடந்த 2012–13ம் நிதி­யாண்­டிற்­கான மத்­திய பட்­ஜெட்டில், நிதி­ய­மைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘கார்’ சட்டம் குறித்த அறி­விப்பை வெளி­யிட்டார். இச்­சட்டம், இரண்டு ஆண்­டுகள் கழித்து நடை­மு­றைக்கு வரும் என்று அவர் தெரி­வித்தார்.இதன்­படி, வரும், 2015–16ம் நிதி­யாண்டில், ஏப்ரல் 1ம் தேதி முதல், இச்­சட்டம், நடைமு­றைக்கு வர உள்­ளது. ஆனால், சென்ற 10ம் தேதி, தாக்கல் செய்­யப்­பட்ட, 2014–15ம் நிதி­யாண்­டிற்­கான பட்ஜெட் உரையில், ‘கார்’ சட்ட அம­லாக்கம் குறித்து, மத்­திய நிதி­ய­மைச்சர் அருண்­ஜெட்லி எதுவும் தெரி­விக்­க­வில்லை. அதனால், அன்­னிய முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில், 2016ம் ஆண்டு வரை ‘கார் சட்டம் அம­லா­காது என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.
இந்­நி­லையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இச்­சட்டம் அம­லுக்கு வரும் என, நிர்­மலா சீத்­தா­ராமன் தெரி­வித்­ததால், வெள்­ளி­யன்று, அன்­னிய முத­லீட்­டா­ளர்கள் பீதி அடைந்து, மள மள­வென பங்­கு­களை விற்­பனை செய்­தனர். அன்று, ஒரே நாளில், அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், 700 கோடி ரூபாய்க்கும் அதி­க­மான பங்­கு­களை விற்­பனை செய்து, முத­லீ­டு­களை திரும்ப பெற்­றன.
பரிசீலனை:இந்­நி­லையில், நேற்று ‘கார்’ சட்டம் குறித்து மத்­திய வருவாய் துறை செயலர் சக்­தி­காந்­ததாஸ் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:மத்­திய பட்­ஜெட்டில், ‘கார் சட்ட அம­லாக்கம் குறித்து எதுவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அதே சமயம், முந்­தைய அரசு அறி­வித்­த­படி, இச்­சட்ட அம­லாக்­கத்­திற்­கான இரண்டு ஆண்டு 'கெடு' வரும் 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி­யுடன் முடி­வ­டை­கி­றது. இதை கருத்தில் கொண்­டு­தான, வரும் நிதி­யாண்டில், இச்­சட்டம் அம­லாகும் என, நிர்­மலா சீத்­தா­ராமன் தெரி­வித்­துள்ளார்.
இச்­சட்­டத்தை அமல்­ப­டுத்த இன்னும் எட்டு மாதங்கள் உள்­ளன. அதனால், மத்­திய அரசு, இச்­சட்டம் குறித்து பரி­சீ­லித்து, விரைவில் முடிவு எடுக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.அவ­ரது இந்த விளக்கம், நாளை பங்குச் சந்தை வர்த்­த­கத்தில் அன்­னிய முத­லீட்டை அதி­க­ரிக்க உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது
.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)