பதிவு செய்த நாள்
18 அக்2014
23:35
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,589 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,712 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் குறைந்து, 2,578 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 88 ரூபாய் சரிவடைந்து, 20,624 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 120 ரூபாய் குறைந்து, 27,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளி, 41.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 38,385 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (13ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,563 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாயும், சவரனுக்கு, 120 ரூபாயும் அதிகரித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|