பெண்கள் போல முத­லீடு செய்­யுங்கள்!-  இது வாரன் பப்பே வழி!பெண்கள் போல முத­லீடு செய்­யுங்கள்!- இது வாரன் பப்பே வழி! ... இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ. 63.74) இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு (ரூ. 63.74) ...
தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
01:24

நகை­யா­கவோ, நாண­ய­மா­கவோ, நீங்கள், வீட்டில் வாங்கி வைத்­தி­ருக்கும் தங்கம் கொஞ்சம் வரு­மா­னத்­தையும் ஈட்­டித்­தந்தால் எப்­படி இருக்கும்? தங்க டெபாசிட் திட்டம் இதை சாத்­தி­ய­மாக்கும் நோக்­கத்­துடன் தான் சமீபத்தில் அறி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
இந்­தி­யாவில், ஏறத்­தாழ, 20 ஆயிரம் டன் தங்கம் மக்­க­ளிடம் உள்­ளது. இதன் தற்­போ­தைய சந்தை மதிப்பு, 51 லட்சம் கோடி ரூபாய். இவ்­வ­ளவும், நிதி சந்­தைக்கு வராமல், வீடு­களில் முடங்கிக் கிடக்­கி­றது. இதில் ஒரு பகு­தி­யை­யா­வது நிதி சந்­தைக்குள் வர­வ­ழைத்து, தொழில் முத­லீ­டு­க­ளுக்கு கிடைக்கச் செய்­வது இந்த திட்­டத்தின் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்று.அதே போல், வீடு­களில் உள்ள தங்­கத்தை சந்­தைக்கு கொண்டு வந்து, சுழற்சி ஏற்­ப­டுத்­தினால், தங்க இறக்­கு­ம­திக்­கான தேவையும் குறையும் என, மத்­திய அரசு எதிர்­பார்க்­கி­றது.இதில் தங்கம் வைத்­தி­ருப்­போ­ருக்கும் நல்ல லாபம் உள்­ளது. வங்­கி­களில், இந்த திட்­டத்தின்படி, தங்கம் டெபாசிட் செய்­யப்­பட்டால்...= தங்கம் டெபாசிட் செய்­யப்­படும் நாளில் உள்ள அதற்­கான சந்தை மதிப்பின் படி, டெபாசிட் தொகை கணக்­கி­டப்­படும். அதற்கு குறைந்­த­பட்சம் ஒரு சத­வீதம் வட்டி வழங்­கப்­பட வேண்டும் என, மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. ஆனால், இதற்கு மேலும் வங்­கிகள் எவ்­வ­ளவு வேண்­டு­மா­னாலும் வழங்­கலாம். வல்­லு­னர்­களின் கருத்­துப்­படி, இது, 3ல் இருந்து 4 சத­வீ­த­மாக வங்­கிகள் நிர்­ண­யிக்க வாய்ப்பு உள்­ளது.= அதன்­படி, ஒருவர், 10 சவரன் ஆப­ரண தங்­கத்தை (குறைந்­த­பட்சம், 30 கிரா­மா­வது டெபாசிட் செய்­யப்­பட வேண்டும் என்­பது திட்­டத்தின் விதி), சவ­ர­னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் என்ற சந்தை மதிப்பில், இந்த திட்­டத்தின் படி, வங்­கியில் டெபாசிட் செய்தால், அவ­ருக்கு ஆண்­டுக்கு குறைந்­த­பட்சம், 2,000 ரூபாய் வட்டி கிடைக்கும். வங்­கி­களின் வட்டி விகித நிர்­ணயம், 4 சத­வீ­த­மாக இருக்கும் பட்­சத்தில், இது, 8,000 ரூபா­யாக இருக்கும்.= தங்க டெபாசிட் விதிகள் படி, குறைந்­த­பட்சம் ஓராண்­டிற்கு தங்­கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அது முதிர்ச்சி அடையும் போது, அன்­றைய நிலையில் தங்­கத்தின் சந்தை மதிப்பு எவ்­வ­ளவு உள்­ளதோ அதற்­கேற்ப தங்­க­மா­கவோ, ரொக்­க­மா­கவோ திருப்பிப் பெற்­றுக் ­கொள்­ளலாம்.= எப்­படி திருப்­பிப் ­பெற்றுக் கொண்டால் லாபம்? மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட உதா­ர­ணத்தின் படி, முதிர்ச்சி நாளில் தங்­கத்தின் விலை சவ­ர­னுக்கு, 18 ஆயிரம் ரூபாய் என, குறைந்­தி­ருந்தால், ரொக்­க­மாக பெறு­வதில் மூல­தன நஷ்டம் ஏற்­படும். அதனால், அப்­போது தங்­க­மா­கவே பெற்­றுக்­கொண்டால், இந்த திட்­டத்தின் விதிப்­படி, 10 சவரன் தங்­கமும், அதற்கு மேல­தி­க­மாக வட்­டிக்­கான தங்­கமும் திருப்­பிக்­ கி­டைக்கும். இதுவே தங்­கத்தின் விலை சவ­ர­னுக்கு, 22 ஆயிரம் ரூபாய் என, அதி­க­ரித்து இருந்தால், அதை ரொக்­க­மாக பெற்­றுக் ­கொண்டு, தங்­கத்தின் விலை மீண்டும் குறையும் போது, தங்­கத்தை வாங்­கு­வது லாப­க­ர­மாக இருக்கும். எப்­படி பார்த்­தாலும் லாபம் தான்.= ஆனால், இதில் ஒரு கொக்கி இருக்­கி­றது. டெபாசிட் செய்­யப்­பட்ட தங்­கத்தை நாம் எப்­படி திருப்­பிப்­பெற விரும்­பு­கிறோம் என்­பதை டெபாசிட் செய்யும் போதே குறிப்­பிட வேண்டும்! ஆனால், டெபா­சிட்டை நீட்­டித்­துக் ­கொள்ளும் வசதி உள்­ளதால், இதில் உள்ள இழப்­பிற்­கான வாய்ப்பு பெரும்­பாலும் குறைக்­கப்­ப­டு­கி­றது. இந்த திட்­டத்தில் சேர ஆர்­வ­மாக இருந்தால், நீங்கள் தெரிந்­து­ கொள்ள வேண்­டி­யவை;= குறைந்­த­பட்சம், 30 கிராம் தங்கம் டெபாசிட் செய்ய வேண்டும்.= குறிப்­பிட்ட, ‘ஹால்மார்க்’ மையங்­களில் இருந்து உங்கள் தங்­கத்­திற்­கான தர சான்­றி­தழை பெற வேண்டும்.= அசல் மற்றும் வட்டி தங்­கத்­தி­லேயே மதிப்­பீடு செய்­யப்­படும்.= நீங்கள் கொடுக்கும் தங்­கத்தை, வங்­கிகள் உருக்கி, நகைக்­க­டை­க­ளுக்கு விற்­கவோ, லீசுக்கு விடவோ செய்யும். அதனால், நீங்கள் கொடுக்கும் ஆப­ர­ணங்கள் அப்­ப­டியே திருப்பிக் கிடைக்­காது.
நிதி கால்குலேட்டர்நிதி விஷ­யங்கள் என்று வந்­து­விட்டால், கணக்கு போட்டு பார்க்­காமல் இருக்க முடி­யாது. ஒவ்­வொரு திட்­டத்­திலும் என்ன பலன்? எவ்­வ­ளவு வருவாய்? என அறிந்து கொள்ள, கணக்கு போட்டு பார்க்க வேண்டும் அல்­லவா? ஆனால் நிதி திட்­டங்­க­ளுக்கு என்று தனி கால்­கு­லேட்டர் அவ­சியம். உதா­ர­ணத்­திற்கு வங்கி டெபாசிட் என்றால் எத்­தனை ஆயி­ரங்­க­ளுக்கு, எத்­தனை மாதங்­க­ளுக்கு என்ன வட்டி விகிதம் என, தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற தேவை­க­ளுக்கு கை கொடுக்­கி­றது, பைனான்­ஷியல் கால்­கு­லேட்டர் இந்­தியன் செயலி (ஆப்). இந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்­போ­னி­லேயே வங்கி திட்­டங்கள், அஞ்­ச­லக திட்­டங்கள் மற்றும் பரஸ்­பர நிதி திட்­டங்கள் ஆகி­யவை பற்­றிய கணக்­கு­களை போட்­டுப் ­பார்க்கலாம். Financial calculator Indian App என தேடி உங்களுடைய மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)