பதிவு செய்த நாள்
02 மே2016
00:13
புதுடில்லி : ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒன்றான, ரஸ் அல் ஹைமா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும், இந்திய சந்தையில் தன்னை வெளிப்படுத்தவும் சுற்றுலா துறையைச் சேர்ந்த நிறுவனமான காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, ரஸ் அல் ஹைமா, தனது பல்வேறுபட்ட அம்சங்களை வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில் நிலைநிறுத்த முயற்சிக்கும். குறிப்பாக உள் அலங்கார பொருட்களை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும். ஏற்கனவே, ஆண்டுக்கு ஆண்டு, இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எமிரேட்டுக்கு பல புதிய வழித்தடங்களை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் மேலும் அதிக பயணிகள் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புவதாக ரஸ் அல் ஹைமா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|