விளம்­பரம் செய்ய தவ­றி­யதால்வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் வரு­கையில் மந்த நிலைவிளம்­பரம் செய்ய தவ­றி­யதால்வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் வரு­கையில் ... ... என்.பி.எஸ்., திட்டம்:2 புதிய நிதிகள் அறி­முகம் என்.பி.எஸ்., திட்டம்:2 புதிய நிதிகள் அறி­முகம் ...
தங்கமே தங்கம்:முதலீடு செய்யும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2016
07:31

பூமியில் இருந்து இது­வரை தோண்டி எடுக்­கப்­பட்ட தங்­கத்தில், 40 சத­வீதம், தென்­னாப்­ரிக்­க சுரங்­கங்­களில் இருந்து பெறப்­பட்­டவை.வரலாற்றில் இது­வரை உற்­பத்தி செய்­யப்­பட்ட தங்­கத்தை விட அதிக அள­வி­லான எக்கு, 2015ல், உலகில் ஒவ்­வொரு மணி நேரத்­திலும் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளது.தங்கம், பூமியில் மட்டும் அரி­தா­னது அல்ல. ஒட்­டு­மொத்த பிர­பஞ்­சத்­திலும் தங்கம் மிகவும் அரி­தா­னது. இரும்பு அல்­லது கார்பன் போல தங்கம், நட்­சத்­தி­ரங்­க­ளுக்குள் உரு­வா­வ­தில்லை.தங்கம் மிகவும் அடர்த்­தி­யான உலோகம்.ஈயத்தை விட அதன் அடர்த்தி அதிகம். அதே நேரத்தில், ஒரு கிராம் தங்­கத்தை, 165 மீட்டர் இழை­யாக்­கலாம்.
தங்க நகை வாங்­கும்­போது கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்கள்:ஹால்மார்க் முத்­திரை-, இது தரத்தின் அடை­யாளம். ஒரு கிரா­மிற்­கான தங்­கத்தின் விலை: நக­ரத்­துக்கு நகரம் மாறு­ப­டலாம். செய்­கூலி மற்றும் சேதா­ரத்தின் அளவு, திரும்ப வாங்கிக் கொள்ளும் தன்மை மற்றும் விலை. ‘பில்’ கேட்டு வாங்­கவும்.
அட்­சய திரு­தியை முன்­னிட்டு இன்று, தங்க இ.டி.எப்.,க்களை பரி­வர்த்­தனை செய்­வ­தற்­கான நேரம், இரவு, 7:00 மணி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக, மும்பை பங்­குச்­சந்தை மற்றும் தேசிய பங்­குச்­சந்தை அறி­வித்­துள்­ளன. பங்­குச்­சந்­தையின் வழக்­க­மான வர்த்­தகம், மாலை முடிந்­ததும், தங்க இ.டி.எப்., பரி­வர்த்­தனை, மாலை, 4:30 மணிக்கு துவங்கி இரவு, 7:00 மணி வரை நடை­பெறும்.
தங்கம், சிறந்த முத­லீ­டாக கரு­தப்­ப­டு­கி­றது. பண வீக்­கத்­திற்கு எதி­ராக தங்கம் பாது­காக்க கூடி­ய­தா­கவும் இருக்­கி­றது. ஆனால் தங்கம், எந்த வரு­மா­னத்­தையும் தரா­தது; முத­லீடு நோக்கில் முக்­கிய குறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இதற்கு, தங்க இ.டி.எப்., விதி­வி­லக்கு. இவற்றின் மூலம் டிவிடெண்ட் பெறலாம். அரசின் தங்க பத்­தி­ரங்கள் மீதும் வட்டி அளிக்­கப்­ப­டு­கி­றது. தங்க சேமிப்பு திட்­டத்தில் தங்­கத்தை டிபாசிட் செய்தும் வட்டி வரு­மானம் பெறலாம்.
பொது­வாக, நகை­க­ளாக வாங்­கு­வதே தங்­கத்தில் முத­லீடு செய்­வ­தற்­கான வழி­யாக அமை­கி­றது. இந்­தி­யாவில் திரு­மணம், பண்­டி­கைகள் மற்றும் அக் ஷய திரு­தியை போன்ற முக்­கிய தினங்­களில் தங்கம் வாங்கும் பழக்கம் இருக்­கி­றது.எனினும், நகைகள் தவிர, தங்­கத்தில் முத­லீடு செய்ய பல வழிகள் இருக்­கின்­றன. வங்­கிகள், தங்க நாண­யங்­களை விற்­பனை செய்­கின்­றன. இப்­போது அசோக சக்­கரம் பொறித்த தங்க நாண­யங்கள், அரசால் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இவை தவிர, காதித வடி­விலும் தங்­கத்தில் முத­லீடு செய்­யலாம். இ.டி.எப்., எனப்­படும் பத்­திர வடி­விலும் வாங்­கலாம். இவற்றை பரஸ்­பர நிதிகள் போல் வாங்கி விற்­கலாம். இந்­திய அரசும் இப்­போது, ரிசர்வ் வங்கி மூலம் தங்க பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு வரு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)