பதிவு செய்த நாள்
24 மே2016
08:00
ஹாக்கின்ஸ் குக்கர் நிகர லாபம் ரூ.12 கோடிஹாக்கின்ஸ் குக்கர் நிறுவனம், 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 12.73 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 9.65 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 154.53 கோடி ரூபாயில் இருந்து, 154.99 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 40.34 கோடி ரூபாயாகவும், விற்பனை, 536.65 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.
காபி டே என்டர்பிரைசஸ் விற்பனை ரூ.1,338 கோடிகாபி டே என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், 1,338.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1,230.69 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 14.33 கோடி ரூபாயில் இருந்து, 18.39 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 420.91 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 12.32 கோடி ரூபாயாகவும் உள்ளது.
கிராம்டன் கிரீவ்ஸ் விற்பனை ரூ.1,001 கோடிகிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 1,001.63 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 66.61 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த முழு நிதி ஆண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 105.19 கோடி ரூபாயாகவும், விற்பனை, 1,811.68 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.
லுபின் நிறுவனம் லாபம் ரூ.924 கோடிலுபின் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 924.93 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 407.70 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், விற்பனை, 48.47 சதவீதம் உயர்ந்து, 2,145.90 கோடி ரூபாயில் இருந்து, 3,185.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 2,885.07 கோடி ரூபாயாகவும், விற்பனை, 10 ஆயிரத்து, 810.01 கோடி ரூபாயாகவும் இருந்தது.
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.152 கோடிபிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 152.60 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 80.64 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 18.90 சதவீதம் உயர்ந்து, 1,037.44 கோடி ரூபாயில் இருந்து, 1,233.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|