கறுப்பு பணத்தை கட்­டுப்­ப­டுத்த...‘கிரெடிட், டெபிட்’ கார்டு பரி­வர்த்­த­னையை  ஊக்­கு­விக்க ஆய்­வுக்­குழு அமைப்புகறுப்பு பணத்தை கட்­டுப்­ப­டுத்த...‘கிரெடிட், டெபிட்’ கார்டு ... ... குறைந்த விலைப் பிரிவு வீடுகள் அதிகரிப்பு குறைந்த விலைப் பிரிவு வீடுகள் அதிகரிப்பு ...
உங்கள் நிதித்­தன்மை என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
06:39

பர்­சனல் பைனான்ஸ் என பிர­ப­ல­மாக குறிப்­பி­டப்­படும் தனி­நபர் நிதியில் வழி­காட்டும் புத்­த­கங்கள் ஆயி­ரக்­க­ணக்கில் இருக்­கின்­றன. சேமிப்பு, செல்வம், முத­லீடு மற்றும் அவை தொடர்­பான நிதி கோட்­பா­டு­களை இவை வலி­யு­றுத்­து­கின்­றன.
இந்த புத்­த­கங்­க­ளுக்கு மத்­தியில் தனி­நபர் நிதி என்றால் என்ன என்­பதை தெளி­வாக புரிந்து கொள்ள வழி­காட்­டு­கி­றது பீட்டர் ஜே.சாண்டர் எழு­தி­யுள்ள, ‘தி எவ்­ரிதிங் பர்­சனல் பைனான்ஸ்’ புத்­தகம்: தனி­நபர் நிதி என்­பது, உங்­களைப் பற்றி மற்றும் உங்கள் நிதி தொடர்­பா­னது. தனி­நபர் நிதி என்­பது, காசோ­லை­களை மாற்­று­வது,பில்­களை செலுத்­து­வது மட்டும் அல்ல. ஆரோக்­கி­ய­மான நிதி பழக்­கங்கள் மூலம், உங்கள் குடும்­பத்தின் இலக்கு மற்றும் விருப்­பங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான செல்­வத்தை சேர்ப்­பதே தனி நபர் நிதி.பணம் தொடர்­பான உங்கள் தனிப்­பட்ட உணர்­வுகள் மற்றும் அணு­கு­மு­றையை மீறி, பணம் உங்கள் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­தவும், எளி­மை ­யாக்­கவும் கூடி­யது. பொரு­ளா­தார நோக்கில் பணமும் ஒரு பண்­டகம் தான். இது வினோ­த­மாக தோன்­றலாம். ஆனால் பணமும், அதன் மூலம் நாம் வாங்கும் ஒரு பண்டம் போன்­றது தான். பணம் இருப்­பதால் மட்­டுமே ஒருவர் செல்­வத்­துடன் இருப்­ப­தாக கூற முடி­யாது. நிதி நோக்கில் ஆரோக்­கி­ய­மாக இருப்­பதே தனி­நபர் நிதியின் நோக்கம். தனி­நபர் நிதியில் பொது­வான சில பிரச்­னைகள் இருக்­கின்­றன.
அதிகம் செலவு செய்­வது, எதிர்­பா­ராமல் ஏற்­படும் செல­வு­க­ளுக்கு ஏற்ப திட்­ட­மி­டா­தது, இலக்­கு­க­ளுக்கு ஏற்ப செயல்­ப­டாமல் தள்ளிப் போட்­டுக்­கொண்டே இருப்­பது, உணர்ச்­சி­வசப்­பட்டு முடி­வு­களை மேற்­கொள்­வது ஆகிய பிரச்­னை­களை நாம் எதிர்­கொண்டு சமா­ளிக்க வேண்டும்.இதில் சில முக்­கி­ய­மான கோட்­பா­டு­களும் இருக்­கின்­றன. முதலில் பணம், வரு­மானம் மற்றும் செல்வம் மூன்றும் ஒன்­றல்ல. எவ்­வ­ளவு பணம் சம்­பா­திக்­கி­றீர்கள் என்­பதை விட, எவ்­வ­ளவு பணம் சேமித்து வைத்து முத­லீடு செய்­கி­றீர்கள் என்­பதே முக்­கியம். அதே போல நிதி சாத­னங்­களை விட பழக்­க­வ­ழக்­கங்­களே முக்­கி­ய­மா­னவை. மேலும் தனி­நபர் நிதி என்­பது முழு நேர பணி­யாகும். முக்­கியம் என்ன என்றால், செல்­வத்தை சேர்ப்­ப­தற்­கான, காப்­பாற்­று­வ­தற்­கான வழி­களை அறிந்­தி­ருக்க வேண்டும். செல்­வத்தை இலக்­கு­களை நிறை­வேற்­றிக்­கொள்ள எப்­படி செல­விட வேண்டும் என்றும் அறிந்­தி­ருக்க வேண்டும்.
தனி­நபர் நிதி, பட்ஜெட் போட்டு செலவு செய்­வது, செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது, வங்கி அமைப்­பு­களை அறி­வது, முத­லீட்டு சாத­னங்­களை அறிந்­தி­ருப்­பது மற்றும் ரிஸ்க் நிர்­வாகம் ஆகிய அம்­சங்­களை கொண்­டி­ருக்­கி­றது. அவ­சர கால திட்­ட­மிடல் மற்றும் ஓய்வு கால திட்­ட­மிடல் ஆகிய அம்­சங்­களும் இதில் அடங்கும்.வாழ்க்கை சூழல் மற்றும் நிலை­க­ளுக்கு ஏற்ப இந்த சாத­னங்­களை கொண்டு சிறந்த நிதி திட்­ட­மி­டலை உரு­வாக்க வேண்டும். இதற்கு உங்கள் நிதித்­தன்­மையை அறிந்து கொள்ள வேண்டும். நிதி இலக்கு மற்றும் நிதி வெற்­றியை அடை­வ­தற்­கான அணு­கு­முறை மற்றும் பழக்­கங்­களே இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)