பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:41
கு றைந்த விலை கொண்ட வீடுகள் பிரிவில் புதிய திட்டங்களின் துவக்கம் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில், மும்பை, டில்லி உள்ளிட்ட எட்டு நகரங்களில் புதிய திட்டங்கள் பற்றிய அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் குறைந்த விலைப்பிரிவில் 2016ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 17,000 புதிய வீடுகள் துவங்கப்பட்டுள்ளன. மும்பை மற்றும் டில்லியில், 70 லட்சம் ரூபாய் வரையான வீடுகள் குறைந்த விலைப்பிரிவு அல்லது வாங்கக்கூடிய விலையை கொண்டதாக கருதப்படுகிறது. மற்ற நகரங்களில் 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாயாக இது அமைகிறது.ஒட்டுமொத்த பிரிவில் வீடுகளின் எண்ணிக்கை 60,000 ஆக உள்ளது. எனினும், மத்திய விலைப்பிரிவில் 36,267 புதிய வீடுகள் துவங்கப்பட்டுள்ளன. அதிக விலைப்பிரிவில் புதிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. புனே, பெங்களூருவில் அதிக புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|