அடுத்த 3 மாதங்­களில் வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும்அடுத்த 3 மாதங்­களில் வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.99 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.99 ...
மத்­திய அரசு அதி­ரடி நேரடி விற்­ப­னையை ஒழுங்­கு­ப­டுத்த புதிய விதி­மு­றைகள் வெளி­யீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2016
06:12

புது­டில்லி:நேரடி விற்­பனை மற்றும் பன்­ன­டுக்கு வர்த்­தக நடை­மு­றையை ஒழுங்­கு­ப­டுத்­தவும், ‘பொன்ஸி’ எனப்­படும், மோசடி திட்­டங்­களால் மக்கள் ஏமா­று­வதை தடுக்­கவும், ‘நேரடி விற்­பனை வழி­காட்டு நெறி­மு­றைகள் – 2016’ என்ற மாதிரி விதி­மு­றைகள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. அவற்றை பின்­பற்­று­மாறு, மத்­திய உணவு மற்றும் நுகர்வோர் விவ­கா­ரங்கள் துறை அமைச்சர் ராம்­விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில அர­சு­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ளார். மத்­திய அரசின் இந்த நட­வ­டிக்கை, நேரடி விற்­ப­னையில் நிலவும் பல்­வேறு சட்டப் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்டு, அத்­துறை வளர்ச்சி காண உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மாதிரி விதிமு­றை­களில், சட்­டப்­பூர்­வ­மான நேரடி விற்­ப­னைக்கும், பன்­ன­டுக்கு, ‘பிரமிட்’ வணிகம் மற்றும் பணப்­பு­ழக்க திட்­டங்­க­ளுக்கும் உள்ள வித்­தி­யாசம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இதனால், இது­வரை, சட்­டத்தின் ஓட்­டையில் தப்பி வந்த மோசடி திட்ட நிறு­வ­னங்­களை, புல­னாய்வுத் துறை­யினர் சுல­ப­மாக அடை­யாளம் கண்டு, நட­வ­டிக்கை எடுக்க முடியும்.‘நேரடி விற்­பனை என்­பது, சந்­தைப்­ப­டுத்­து­வது, வினி­யோகம், பொருட்கள் விற்­பனை அல்­லது சேவை­களை வழங்­கு­வதை குறிக்கும்; பன்­ன­டுக்கு வணி­கத்தை குறிக்­காது’ என, விதி­முறை கூறு­கி­றது. ‘புதிய விதி­மு­றைகள், அசல் மற்றும் போலி­யான திட்­டங்­களை, நுகர்வோர் சுல­ப­மாக அறிய உதவும்’ என, இந்­திய நேரடி விற்­பனை கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
முக்­கிய அம்­சங்கள்
* நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள், ஏஜன்­டு­க­ளிடம் நுழைவு கட்­டணம் வசூ­லிக்கக் கூடாது; விற்­ப­னை­யா­காத பொருட்­களை வாங்­கு­மாறு கட்­டா­யப்­ப­டுத்தக் கூடாது* நிறு­வ­னங்கள், நேரடி விற்­ப­னை­யாளர் அல்­லது முக­வ­ருடன், ஒப்­பந்தம் செய்து கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது * ஒப்­பந்­தத்தை ரத்து செய்து, வாங்­கிய பொருட்­களை திரும்ப அளிக்கும் விற்­ப­னை­யாள­ருக்கு, நியா­ய­மான கால அவ­கா­சத்தில், முழுத் தொகையை, நேரடி விற்­பனை நிறுவ­னங்கள் திரும்ப வழங்க வேண்டும்* நுகர்வோர் உரி­மையை காக்க, குறை­தீர்ப்பு குழுவை, நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள் ஏற்­ப­டுத்த வேண்டும்* நேரடி விற்­பனை சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு, மத்­திய, மாநில அரசு அதி­கா­ரிகள் அடங்­கிய கண்­கா­ணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.
ஏமாற்­றாதே... ஏமா­றாதே...* நிதி நிறு­வ­னங்கள், குறு­கிய காலத்தில் அதிக வருவாய் தரும் விளம்­ப­ரங்­களை வெளி­யிட்டும், பரிசு திட்­டங்­களை அறி­வித்தும், மக்­களின் முத­லீ­டு­களை மோசம் செய்­கின்­றன. சட்ட விரோத பணப்­பு­ழக்­கத்­திற்கு வழி­வ­குக்கும் இது­போன்ற பரிசு குலுக்கல் திட்­டங்கள், ‘பொன்ஸி திட்­டங்கள்' என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்­றன* ஒருவர், ஒரு நிறு­வ­னத்தின் பொருளை வாங்கி, உறுப்­பி­ன­ராகி, தனக்கு கீழ் சிலரை சேர்த்து, அவர்கள் மூலம் பலரை உறுப்­பி­ன­ராக்கி, அதன் மூலம், ‘கமிஷன்’ பெறு­வதை, பன்­ன­டுக்கு வர்த்­தகம் அல்­லது, ‘பிரமிட்’ வணிகம் என்­கின்­றனர். இதிலும் பல முறைகே­டு­களால், மக்கள் பணத்தை இழக்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)