‘நவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள் துறைக்கு ஆத­ரவு தொடரும்’‘நவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள் துறைக்கு ஆத­ரவு தொடரும்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89 ...
சலுகை திட்­டங்­களால் சூடு பறக்கும் பண்­டிகை கால விற்­பனை; சுறு­சு­றுப்­பாக இயங்கும் ‘மெகா’ மால்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
06:11

புது­டில்லி : பண்­டிகை காலத்­தை­யொட்டி, ‘மெகா’ மால்கள் எனப்­படும், வணிக வளா­கங்­களில் உள்ள அங்­கா­டி­களில், ‘டிவி, ரெப்­ரி­ஜி­ரேட்டர், ஏசி’ உள்­ளிட்ட நுகர்வோர் சாத­னங்கள் விற்­பனை, விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கி­றது.
அதேசமயம், ‘அமேசான், ஸ்நாப்டீல்’ போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், நுகர்வோர் பொருட்­க­ளுக்கு, தாரா­ள­மாக தள்­ளு­படி சலு­கை­களை வழங்­கு­வதால், வணிக வளாக அங்­கா­டிகள், கடு­மை­யான சவாலை சந்­தித்­துள்­ள­தாக, ‘அசோசெம்’ அமைப்பு தெரி­வித்து உள்­ளது. இந்த அமைப்பு, டில்லி, மும்பை, சென்னை, ஆம­தாபாத், சண்­டிகர், ஐத­ராபாத், ஜெய்ப்பூர், பெங்­க­ளூரு அகிய நக­ரங்­களில், வணிக வளாக குத்­த­கை­தா­ரர்கள், நிர்­வாக பிர­தி­நி­திகள், திட்ட வடி­வ­மைப்­பா­ளர்கள், சந்­தைப்­ப­டுத்துவோர், மேற்­பார்­வை­யாளர்கள் உள்­ளிட்ட, 750க்கும் அதி­க­மா­னோ­ரிடம் ஆய்வு மேற்­கொண்­டது.
அதில், வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் போட்­டியை சமா­ளிக்க, வணிக வளாக நிறு­வ­னங்­களும் வரிந்து கட்டி, தீவி­ர­மாக களத்தில் குதித்­துள்­ளது தெரிய வந்­துள்­ளது. அவை, நுகர்வோர் சாத­னங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து, இல­வ­சங்கள், சுலப தவணை திட்­டங்கள், தள்ளுபடி சலு­கைகள் உள்­ளிட்ட கவர்ச்­சி­க­ர­மான அறி­விப்­பு­களை வெளி­யிட்டு, மக்­களை கவர்ந்து இழுத்து வரு­கின்­றன. இதன் விளை­வாக, ஆய்­வுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட எட்டு நக­ரங்­களில், வணிக வளா­கங்­க­ளுக்கு வருவோர் எண்­ணிக்கை, கிடு கிடு­வென அதி­க­ரித்­தி­ருப்­பதும், பொருட்­களின் விற்­பனை, மள மள­வென உயர்ந்­துள்­ளதும் தெரிய வந்­துள்­ளது.
டில்­லியில் உள்ள சில வணிக வளா­கங்­களில், கடந்த வார இறு­தியில், ஆடைகள், நகைகள், அழ­கு­சா­த­னங்கள், உணவுப் பொருட்கள் விற்­பனை, இது­வரை இல்­லாத அள­விற்கு அதி­க­ரித்து உள்­ளது. அது போல, டிவி, மொபைல் போன், வாஷிங் மிஷின் உள்­ளிட்ட நுகர்வோர் சாத­னங்கள் விற்­ப­னையும், சிறப்­பான அள­விற்கு உயர்ந்­துள்­ளது. அதனால், நடப்பு, செப்., – டிச., வரை­யி­லான மூன்­றா­வது காலாண்டில், விற்­பனை வருவாய், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உயரும் என, நுகர்வோர் சாத­னங்கள் தயாரிப்பு மற்றும் சில்­லரை விற்பனை நிறு­வ­னங்கள் மதிப்­பிட்டு உள்ளன.
இதன் கார­ண­மாக, அவை, பண்­டிகை காலத்­திற்கு மட்டும், பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்­கான பட்­ஜெட்டை, 30 – 40 சத­வீதம் அதி­க­ரித்து உள்­ளன. வணிக வளாக நிறு­வ­னங்கள், கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு பண்­டிகை கால விற்­பனை, 45 – 50 சத­வீதம் உயரும் என, மதிப்­பிட்டு உள்­ளன.வணிக வளாக நிர்­வா­கிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு பண்­டிகை கால விற்­பனை, மதிப்பு மற்றும் அளவின் அடிப்­ப­டையில், முறையே, 20 சத­வீதம் மற்றும், 10 – 15 சத­வீதம் உயரும்’ என, தெரிவித்து உள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)