உங்கள் நிதி காலண்டர்உங்கள் நிதி காலண்டர் ... எங்­கேயும் எப்­போதும் ஷாப்பிங்! எங்­கேயும் எப்­போதும் ஷாப்பிங்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டு கடன் வட்டி குறைப்பின் பலன் எப்­படி இருக்கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
01:28

வீட்டு வசதி கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­பட்­டுள்ள நிலையில், இதனால், பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் கிடைக்க கூடிய பலன்கள், வீட்டுக் கடனை மாற்ற வேண்­டுமா? எனும் கேள்­விக்­கான பதில் பற்றி ஓர் அலசல்.

புதி­தாக வீட்டு வசதி கடன் பெற இருப்­ப­வர்­களை பொறுத்­த­வரை புத்­தாண்டு வட்டி குறைப்பு எனும் நல்ல செய்­தி­யுடன் துவங்­கி­யி­ருக்­கி­றது. ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்­ளிட்ட வங்­கிகள் வீட்டு வசதி கட­னுக்­கான, எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யி­லான வட்டி விகி­தத்தை கணி­ச­மாக குறைப்­ப­தாக அறி­வித்­துள்­ளன. மற்ற முன்­னணி வங்­கி­களும் வட்டி குறைப்பை அறி­வித்து வரு­கின்­றன. இந்த போக்கு தொடரும் என, எதிர்­பார்க்­கப்­படு­கி­றது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை கார­ண­மாக, வங்­கி­களில் டிபா­சிட்கள் குவிந்த நிலையில், கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இந்­நி­லையில், எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யி­லான வட்டி விகிதம், 90 அடிப்­படை புள்­ளிகள் வரை குறைக்­கப்­பட்­டுள்­ளன.
எவ்­வ­ளவு குறையும்?சமீப காலங்­களில் அறி­விக்­கப்­பட்ட அதி­க­பட்ச வட்டி விகித குறைப்­பாக இது கரு­தப்­ப­டு­கி­றது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்­கப்­படும் கடன்கள், இந்த முறை­யி­லேயே வட்டி கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. அதற்கு முன், இருந்த கடன்­க­ளுக்கு, ‘பேஸ் ரேட்’ முறை கடை­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. புதி­தாக கடன் பெற இருப்­ப­வர்­க­ளுக்கு நிச்­சயம் இது நல்ல செய்தி தான். ஆனால் ஒன்று, வங்­கிகள் வட்டி குறைப்பை அறி­வித்­துள்­ள­தோடு, கடன்கள் மீதான, ‘ஸ்பிரெட்’ என, சொல்­லப்­படும் விகி­தத்­தையும் உயர்த்­தி­யுள்­ளன. எம்.சி.எல்.ஆர்., விகிதம் மீது கடன் பெறுப­வர்கள் செலுத்த வேண்­டிய மார்ஜின் தொகையே இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ‘ஸ்பிரெட்’ விகி­தத்தை வங்­கிகள் உயர்த்­தி­உள்­ளதால், வட்டி குறைப்பில் அதை கழித்­துக்­கொள்ள வேண்டும்.
உதா­ர­ண­மாக ஸ்டேட் வங்கி, ஓராண்டு, எம்.சி.எல்.ஆர்., வட்டி விகி­தத்தை, 90 அடிப்­படை புள்­ளி­க­ளாக குறைத்­துள்­ளது. ஆனால், ஸ்பிரெட் விகி­தத்தை, 20 முதல் 25 சத­வீ­தத்தில் இருந்து 60 முதல் 65 சத­வீ­த­மாக உயர்த்­தி­யுள்­ளது. இந்த விகிதம் வங்­கிக்கு வங்கி மாறு­படும். பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில் இது அமை­கி­றது.
கடன் தகுதி உயரும்வங்­கிகள் பொது­வாக, எம்.சி.எல்.ஆர்., வட்டி விகி­தத்தை மாதந்­தோறும் அறி­விக்­கின்­றன. ஏற்­க­னவே கடன் பெற்ற வாடிக்­கை­யா­ளர்­களை பொறுத்­த­வரை புதிய விகிதம் அம­லுக்கு வரு­வது என்­பது, அதற்­கான அம­லாக்க காலத்தை பொறுத்­தது. ஒரு சில கடன்­க­ளுக்கு, 6 மாதங்­க­ளுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்­றப்­படும். ஆண்­டுக்கு ஒரு­முறை மாற்­றப்­ப­டு­வதும் உண்டு. எனவே, இந்த காலம் முடியும் போதே, புதிய விகிதம் பொருந்தும். எனினும், வட்டி விகிதம் குறையும் சூழலில் எப்­ப­டியும் வரும் மாதங்­களில் வட்டி குறைப்பின் பலனை பெற முடியும். புதி­தாக கடன் பெற உள்ள வாடிக்­கை­யா­ளர்­களை பொறுத்­த­வரை குறைந்த வட்டி விகிதம் பெற முடி­வ­தோடு, அவர்­க­ளுக்­கான கடன் தகுதி தொகையும் அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது.
மாற வேண்­டுமா?இந்த பின்­ன­ணியில் பழைய, ‘பேஸ்ரேட்’ முறையில் கடன் பெற்­ற­வர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி எழு­கி­றது. எம்.சி.எல்.ஆர்., முறை கொண்டு வரப்­பட்ட போது, பழைய பேஸ்ரேட் முறை வாடிக்­கை­யா­ளர்கள் அதே முறையில் தொடர அல்­லது புதிய முறைக்கு மாறிக்­கொள்­ளலாம் எனும் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது. இதே போல பழைய, எம்.சி.எல்.ஆர்., முறையில் இருப்­ப­வர்­களும் புதிய விகி­தத்­திற்கு மாறு­வது பற்றி பரி­சீ­லிக்க இது சரி­யான தரு­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது.
புதிய விகி­தத்­திற்கு மாறு­வதன் மூலம் மாதத் தவணை குறையும் என்­றாலும், இதற்­கான கட்­டணம் உண்டு என்­பதை மனதில் கொள்ள வேண்டும். பொது­வாக வங்­கிகள் கடன் மாற்­றத்­திற்கு செலுத்­தப்­பட வேண்­டிய கடன் தொகையில், 0.5 சத­வீதம் முதல் ஒரு சத­வீதம் வரை மாற்­றத்­திற்­கான கட்­ட­ணத்தை வசூ­லிக்­கின்­றன. இவை மீது சேவை வரியும் உண்டு. வேறு வங்­கிக்கு மாற்­று­வது என்றால், இந்த கட்­டணம் இல்லை. ஆனால், செயல்­முறை கட்­டணம் போன்­றவை இருக்கும். எனவே, வட்டி விகித வேறு­பாட்டையும் பொருந்­தக்­கூ­டிய கட்­ட­ணங்­க­ளையும் கணக்­கிட்டு, அதன் பிறகும் கணி­ச­மான அளவு பலன் இருந்தால் மட்­டுமே கடனை மாற்­று­வது லாப­க­ர­மா­ன­தாக இருக்கும் என, வல்­லு­னர்கள் ஆலோ­சனை சொல்­கின்­றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)