மின்னணு வணிகத்தில் மூல வரி பிடித்தம்; ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறதுமின்னணு வணிகத்தில் மூல வரி பிடித்தம்; ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது ... பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ...
‘உலக வைர வர்த்தக மையமாக இந்தியா உருவாக வேண்டும்’: பிரதமர் மோடி விருப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2017
01:05

மும்பை : ‘‘இந்­தியா, சர்­வ­தேச வைர வர்த்­தக மைய­மா­க­வும், உல­க­ளா­விய வணி­கர்­க­ளால், பெரி­தும் விரும்­பப்­படும் தயா­ரிப்பு சந்­தை­யா­க­வும் உரு­வாக வேண்­டும்,’’ என, பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார்.
மும்­பை­யில், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு அமைப்­பின், பொன் விழா நிகழ்ச்­சி­யில், பிர­த­மர் மோடி, காணொளி காட்சி மூலம் உரை­யாற்­றி­னார்.
அதன் விப­ரம்: வைரங்­களை நறுக்­கு­வது, பட்டை தீட்­டு­வது ஆகி­ய­வற்­றில், இந்­தியா, சர்­வ­தேச மைய­மாக திகழ்­கிறது. அது போல, வைர வர்த்­த­கத்­தி­லும், இந்­தியா புகழ் பெற வேண்­டும் என்­பதே, நம் விருப்­பம். சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் விருப்­ப­மான வைர நகை தயா­ரிப்பு மைய­மாக, இந்­தியா உரு­வாக வேண்­டும்.
முதலிடம்உல­க­ள­வில், வைர நகை­களை தயா­ரிப்­ப­தி­லும், நறுக்­கப்­பட்ட, பட்டை தீட்­டப்­பட்ட வைரங்­களை ஏற்­று­மதி செய்­வ­தி­லும் முத­லி­டத்தை பிடிப்­ப­தற்கு, இந்­தியா, தீவிர முயற்சி மேற்­கொண்­டுள்­ளது.அதன் விளை­வாக, 1966 – 67ல், 2.80 கோடி டால­ராக இருந்த, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி, 50 ஆண்­டு­களில், மிகச் சிறப்­பான வளர்ச்சி கண்டு, 4,750 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.
இந்­தியா, தங்­கம், வைரம் ஆகி­ய­வற்றை உற்­பத்தி செய்­யாத நிலை­யி­லும், இத்­த­கைய வளர்ச்­சியை பெற்­றுள்­ளது. நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை, 46 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கிறது; அதில், 10 லட்­சம் பேர், வைர தொழி­லில் உள்­ள­னர். இத்­துறை, மிகச் சிறப்­பான முன்­னேற்­றம் கண்­டுள்ள போதி­லும், அதற்­கு­ரிய ஆற்­றலை முழு­மை­யாக பயன்­ப­டுத்­தா­மல், இன்­னும் பின்­தங்­கியே உள்­ளது.
வைரங்­களை நறுக்­கு­வ­தி­லும், பட்டை தீட்­டு­வ­தி­லும், நாம் மிக­வும் வலி­மை­யு­டன் உள்­ளோம். ஆனால், சர்­வ­தேச சந்­தை­யில், நம் பங்­க­ளிப்பு மிகக்­கு­றை­வாக உள்­ளது. நமக்­குள்ள ஆற்­ற­லுக்கு ஏற்ப, நம் பங்­க­ளிப்பு இல்லை. சந்­தையை நன்கு புரிந்து கொண்டு, அதற்­கேற்ப செயல்­களை வகுப்­ப­தன் மூலம், நாம் இத்­து­றை­யில், சர்­வ­தேச மைய­மாக உரு­வெ­டுக்­க­லாம்.மாற வேண்டும்
இந்­தி­யா­வின் வைரங்­கள் ஏற்­று­மதி, அதன் இறக்­கு­ம­தியை சார்ந்தே உள்­ளது. வெளி­நாட்­டி­னர் வழங்­கும் அளவு மற்­றும் வடி­வ­மைப்பு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், நாம் வைர நகை­களை உரு­வாக்கி, ஏற்­று­மதி செய்­கி­றோம். அதா­வது, வெளி­நாட்­டி­ன­ரின் விருப்­பத்­திற்கு ஏற்ப நாம் செயல்­ப­டு­கி­றோம்; இந்­நிலை மாற வேண்­டும். நாம் வழங்­கு­வதை, வெளி­நாட்­டி­னர் ஏற்­கும் நிலையை உரு­வாக்க வேண்­டும். அதற்கு சந்தை குறித்த ஆழ­மான அறிவு தேவை. அத­ன­டிப்­ப­டை­யில், தெளி­வான செயல் திட்­டங்­களை வகுக்க வேண்­டும்.
தற்­போது, மின்­னணு வர்த்­த­கம், தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் நேர­டி­யாக பய­னா­ளி­களை அணுக துணை புரி­கிறது. நாம் நவீன வடி­வ­மைப்­பில், வெளி­நாட்­டி­னரை வசீ­க­ரிக்­கும் வகை­யில், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­களை உரு­வாக்க வேண்­டும். அதற்­கான ஆற்­றல் நமக்கு உள்­ளது. அதன் மூலம், நாம் இத்­து­றை­யில் முத­லி­டத்தை பெற முடி­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்­திய அரசு, கறுப்­புப் பண ஒழிப்பு நட­வ­டிக்­கையை, மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் நோக்­கில், ... மேலும்
business news
மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, நேற்று முதன்­மு­றை­யாக, 35 ஆயி­ரம் புள்­ளி­களை ... மேலும்
business news
புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறையை, ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்­பது குறித்து, இன்று முக்­கிய முடிவு எடுக்­கப்­படும் என, ... மேலும்
business news
புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்­டு­களில், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், 5 லட்­சம் கோடி டால­ராக வளர்ச்சி காணும்,’’ என, ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த, 2017 நவம்­ப­ரில், 178 பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)