இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் ஆர்வம்இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் ஆர்வம் ... ‘ஐ பேடு’ விலை குறைப்பு; ஆப்பிள் நிறுவனம் அதிரடி ‘ஐ பேடு’ விலை குறைப்பு; ஆப்பிள் நிறுவனம் அதிரடி ...
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 420 கோடி டாலர் முதலீடு குவியும்: ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2017
05:24

மும்பை : ‘இந்­தியா, முத­லீட்­டா­ளர்­களின் விருப்­ப­மான நாடாக உரு­வெ­டுத்து உள்­ள­தால், இந்­தாண்டு, ரியல் எஸ்­டேட் துறை­யில், 420 கோடி டாலர் அள­விற்கு, புதிய முத­லீ­டு­கள் குவிய வாய்ப்­புள்­ளது’ என,சர்­வ­தேச ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘குஷ்­மன் அண்டு வேக்­பீல்டு’ தெரி­வித்­துள்­ளது.
அதன் விப­ரம்: உல­க­ள­வில், ரியல் எஸ்­டேட் துறை­யில் இந்­தாண்டு, 43,500 கோடி டாலர் அள­விற்கு, புதிய முத­லீ­டு­கள் குவி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதில், இந்­தியா, 420 கோடி டாலரை ஈர்க்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. கடந்த ஆண்டு, சர்­வ­தேச ரியல் எஸ்­டேட் துறை­யில், 44,300 கோடி டாலர் அள­விற்கு, புதிய முத­லீ­டு­கள் குவிந்­தன. இதில், இந்­தாண்டு, 2 சத­வீ­தம் குறை­யும் என, மதிப்­பிட்­டுள்ள போதி­லும், 2009க்கு பின் மேற்­கொள்­ளப்­படும், இரண்­டா­வது அதி­க­பட்ச முத­லீ­டாக இருக்­கும்.
முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கும், அவற்­றின் பாது­காப்­பான வளர்ச்­சிக்­கும், மத்­திய அர­சின் வலு­வான கொள்­கை­கள் துணை நிற்­கின்றன. இதன் கார­ண­மாக, உல­க­ அள­வில், முத­லீ­டு­க­ளுக்கு ஏற்ற முன்­னணி நாடு­களில், இந்­தி­யா­வும் இடம் பிடித்­துள்­ளது. கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, தனி­யார் பங்கு முத­லீ­டு­களை, 2016ல், இந்­தியா ஈர்த்­துள்­ளது. இந்­தி­யா­வில் அலு­வ­லக இடங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தால், முத­லீ­டு­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில், வாடகை வரு­வாய் கிடைக்­கிறது. அத­னால், இத்­து­றை­யில் முத­லீடு செய்ய, சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்­டு­கின்றன. பல நிறு­வ­னங்­களின் முக்­கிய கட்­டு­மான திட்­டங்­கள் கைமாற உள்­ள­தால், இந்­தாண்டு, அலு­வ­லக இடங்­க­ளுக்­கான முத­லீ­டு­ கள், இரு மடங்கு அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
ரியல் எஸ்­டேட் துறையை சீர்­தி­ருத்த, மத்­திய, மாநில அர­சு­கள் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­களும், அறி­மு­க­மாக உள்ள, ரியல் எஸ்­டேட் இன்­வெஸ்ட்­மென்ட் டிரஸ்ட் போன்ற திட்­டங்­களும், அலு­வ­லக இடங்­க­ளுக்­கான முத­லீ­டு­களை ஈர்க்க துணை புரிந்து வரு­கின்றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
ஆசிய பசி­பிக் நாடு­கள்சர்­வ­தேச ரியல் எஸ்­டேட் முத­லீ­டு­களில், ஆசிய பசி­பிக் நாடு­களின் பங்­க­ளிப்பு, 30 சத­வீ­த­மாக உள்­ளது. ரியல் எஸ்­டேட் துறை­யில், முத­லீ­டு­க­ளுக்கு மிக­வும் உகந்த, ‘டாப் – 10’ நாடு­களில், ஆசிய பசி­பிக் பிராந்­தி­யத்­தைச் சேர்ந்த, சீனா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, ஹாங்­காங் ஆகி­யவை இடம் பெற்­று உள்ளன. சிங்­கப்­பூர், 12வது இடத்­தை­யும், 15வது இடத்தை இந்­தி­யா­வும் பிடித்­துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)