இணைய தயார் நிலை; டில்லி முதலிடம்இணைய தயார் நிலை; டில்லி முதலிடம் ... மியூச்­சுவல் பண்­டு­களில் ‘இ – வாலட்’ மூலம் முத­லீடு செய்யும் வசதி விரைவில் அறி­முகம் மியூச்­சுவல் பண்­டு­களில் ‘இ – வாலட்’ மூலம் முத­லீடு செய்யும் வசதி ... ...
ஓட்டல் முன்­ப­திவில் உதவும் செய­லிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:15

சுற்­றுலா பய­ணங்­களை திட்­ட­மி­டவும், தங்­கு­மி­டங்­களை முன் பதிவு செய்­வ­தையும், இணையம் மூலமே மேற்­கொள்­ளலாம். இப்­போது, கடைசி நேரத்தில் ஓட்டல் அறை­களை தள்­ளு­ப­டியில் பதிவு செய்து கொள்ள வழி செய்யும் செயலி உள்­ளிட்ட புது­மை­யான பயண திட்­ட­மிடல் செய­லிகள் அறி­மு­க­மா­கி­யுள்­ளன:
பொது­வாக சுற்­றுலா பய­ணங்­களை பல மாதங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே திட்­ட­மி­டு­வது தான் சரி­யாக இருக்கும். எனினும், சில நேரங்­களில் திடீ­ரென புறப்­பட்டுச் செல்ல வேண்­டிய தேவை ஏற்­ப­டலாம். அல்­லது அலு­வ­லக பணி­யாக வெளியூர் சென்­றி­ருக்கும் போது, திடீ­ரென பய­ணத்தை நீட்­டிக்கும் தேவை உண்­டா­கலாம். இது­போன்ற சூழல்­களில் உட­ன­டி­யாக ஓட்டல் அறை­களை பதிவு செய்து கொள்ளும் வச­தியை, ‘நைட் ஸ்டே’ (www.nightstay.in) செயலி வழங்­கு­கி­றது.
சென்னை உள்­ளிட்ட பல்­வேறு நக­ரங்­களில் உள்ள சொகுசு ஓட்­டல்­களில், கடைசி நேரத்தில் அறை­களை பதிவு செய்து கொள்ள இந்த செயலி வழி செய்­கி­றது. வழக்­க­மான கட்­ட­ணத்தை விட, குறைந்த கட்­ட­ணத்தில் இந்த அறை­களை பதிவு செய்ய வழி செய்­வதே இந்த சேவையின் சிறப்­பம்சம். குறிப்­பிட்ட நாள் அன்று முன்­ப­திவு செய்­யப்­ப­டாமல் இருக்கும் அறைகள் தொடர்­பான விப­ரங்­களை ஓட்­டல்­க­ளிடம் இருந்து திரட்டி, அந்த அறை­களை பய­னா­ளி­க­ளுக்­காக, ‘நைட் ஸ்டே’ செயலி அளிக்­கி­றது.
ஓட்­டல்­களைப் பொறுத்­த­வரை காலி­யாக உள்ள அறைகள் அன்­றைய தினத்­திற்கு வீணாகி விடு­கின்­றன. இத்­த­கைய அறைகள் தொடர்­பான தக­வல்­களை கேட்டுப் பெற்று, அவற்றை தள்­ளு­படி விலையில் பதிவு செய்­வதை இந்த செயலி சாத்­தி­ய­மாக்­கு­கி­றது. ஸ்மார்ட்போன் செய­லிகள் மூலம் உங்கள் பட்­ஜெட்­டிற்கு ஏற்ற ஓட்டல் அறை­களை பதிவு செய்­வதும் சாத்­தியம். ‘பைண்ட் மை ஸ்டே’ (www.findmystay.com) செயலி இதற்கு உத­வு­கி­றது. இந்த செய­லியில் பய­னா­ளிகள் தாங்கள் செலுத்த விரும்பும் கட்­ட­ணத்தை தெரி­விக்­கலாம். அதன் பின், அந்த கட்­ட­ணத்தை ஏற்­றுக்­கொள்ளும் ஓட்­டல்கள் பற்­றிய தகவல் தெரி­விக்­கப்­படும். அவற்றில் இருந்து தேர்வு செய்து கொள்­ளலாம். இதே போல, ‘சவ்­விமாப்’ (savvymob.com) செயலி சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள் தங்கள் தேவைக்­கான தங்­கு­மி­டங்­களை சலுகை விலையில் பெறு­வ­தற்கு உத­வு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)