பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:17
புதுடில்லி : மோட்டார் வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், டிரக் மற்றும் பஸ்களில் பயன்படுத்தும் ரேடியல் டயர்களை, ஐரோப்பிய சந்தைகளில், இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்துக்கு, சர்வதேச அளவில், நான்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள்; ஆறு தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது, ஐரோப்பிய சந்தையில், இணையதளம் வாயிலாக, டிரக், பஸ்களுக்கான ரேடியல் டயர்களை விற்பனை செய்ய உள்ளோம். முதற்கட்டமாக, சோதனை முறையில், இங்கிலாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் விற்கப்படுகிறது. இதை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும், டயர்கள் விற்பனை செய்யப்படும். நிறுவனத்துக்கு சொந்தமான ஹாம்பர்க் கிடங்கிலிருந்து, ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு, டயர்கள் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|