தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி?தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி? ... பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம் பிரிட்­டனை மிஞ்சும் இந்­திய பொரு­ளா­தாரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெற்­றிக்­கான பதினோரு வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
04:12

வாய்ப்பை அறிதல் தான், வெற்­றிக்­கான முதல் வழி என்­கிறார், தீப் பட்டேல். ‘ஏ பேப்பர் பாய்ஸ் பேபில்; தி 11 பிரின்­சிபில்ஸ் ஆப் சக்சஸ்’ எனும் புத்­த­கத்தில், வெற்­றிக்­கான, 11 வழி­களை அவர் விவ­ரிக்­கிறார்.
பேப்பர் போடும் இளை­ஞனின் கதை வடிவில், இவற்றை மிகவும் சுவா­ர­சி­ய­மான முறையில் இது அமைந்­துள்­ளது. அந்த இளைஞன், பூங்­காவில் அமர்ந்­தி­ருக்கும் போது, நடுத்­தர வயது மனிதர் ஒருவர், போனில் பேசு­வதை கேட்­டு­விட்டு, அவர் தான் பார்த்துக் கொண்­டி­ருக்கும், பேப்பர் போடும் வேலையில் இருந்து, மறுநாள் முதல் விலகிக் கொள்ள இருப்­பதை அறி­கிறான். உடனே, அவ­ரிடம் அறி­முகம் செய்து கொண்டு பேசு­கிறான். மேற்­ப­டிப்­பிற்­காக, கல்­லுா­ரியில் சேர்­வ­தற்கு முன், விடு­முறை காலம் என்­பதால், அந்த வேலையை தான் தொட­ரலாம் என, விரும்­பு­கிறான். நடுத்­தர வயது மனிதர் அதற்கு ஒப்புக் கொண்­டாலும், இந்த காலத்தில் பலரும் இணையம் மூலமே பேப்பர் படித்து விடு­வதால், காலையில் பேப்பர் போடு­வது வீண் வேலை என்­கிறார். இளை­ஞ­னுக்கும், அது தெரியும்.
ஆனால், அந்த பகு­தியை நன்­க­றிந்­தவன் என்­பதால், அதில் வசிக்கும் பெரும்­பா­லானோர், வய­தான மற்றும் ஓய்வு பெற்­ற­வர்கள் என்­பதால், அவர்­க­ளுக்கு நாளி­தழில் பொறு­மை­யாக படிக்க, பல விஷ­யங்கள் இருக்கும் என, நினைக்­கிறான். எனவே, கொஞ்சம் முயற்சி செய்தால், பெரும்­பா­லான வீடு­களில் இருந்து, நாளிதழ் சந்தா பெற முடியும் என, நம்­பு­கிறான். நடுத்­தர வயது மனிதர் பிரச்­னை­யாக பார்த்­ததை, அவன் வாய்ப்­பாக பார்த்தான்.மறுநாள், அவன் வேலைக்கு தயா­ரானான்.
நாளிதழ் அலு­வ­ல­கத்தில் இருந்து, ஒப்­பந்தம் பெற்ற பின், நேராக சைக்கிள் கடைக்குச் சென்று, தன் பழைய சைக்­கிளை பழுது பார்த்து மேம்­ப­டுத்த ஏற்­பாடு செய்தான். இதற்­கான கட்­ட­ணத்தை குறைத்து பேசும் போது, கடைக்­கா­ர­ரிடம் தனக்கு இல­வ­ச­மாக கிடைக்கும் நாளி­தழை, அவ­ருக்கு தரு­வ­தாகக் கூறி சம்­ம­திக்க வைக்­கிறான். முன்­ன­தாக, தனக்கு தேவைப்­படக் கூடிய தொகையை, வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்­கிறான். இதை, வெற்­றிக்­கான முத­லீ­டாக கரு­தினான்.
அதன்பின், முதல் நாள் பேப்பர் போடும் போது, வாடிக்­கை­யா­ளர்­களிடம் சென்று, தன்னை நேர­டி­யாக அறி­முகம் செய்து கொள்­கிறான்; வாடிக்­கை­யா­ளர்கள் பிரச்­னையை அறிந்து, அவற்றை தீர்த்து வைக்­கிறான். முதற்­கட்­ட­மாக, பேப்பர் வாங்கும் வாடிக்­கை­யா­ளர்கள் மற்றும் ஏற்­க­னவே வாங்கி, பின் நிறுத்­தி­விட்­ட­வர்­களை அணுகி, அவர்­களை கவர முயற்­சிக்­கிறான். வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் பேசும் போது, நாளிதழ் போடப்­படும் பிளாஸ்டிக் பை தரக்­கு­றை­வாக இருப்­பதை அறிந்து, அதை சரி செய்ய முயற்­சிக்­கிறான். அதன்பின், தன் மார்க்­கெட்டிங் முயற்­சியை மேலும் தீவி­ர­மாக்­கு­கிறான். வாடிக்­கை­யா­ளர்­களை சம்­ம­திக்க வைப்­பதில் உள்ள தடைகள் அறிந்து, அவற்றை நீக்­கு­கிறான்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)