பதிவு செய்த நாள்
06 மே2017
04:28
புதுடில்லி;மொபைல் போன் சேவையில், தகவல்களை அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்வதில், ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருப்பதாக, ‘டிராய்’ என்றழைக்கப்படும், தொலைபேசி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், மொபைல் போன் சேவை நிறுவனங்களின், அதிவேக தகவல், படங்கள் ஆகியவற்றின் பதிவிறக்கம் குறித்த விபரத்தை, ‘டிராய்’ வெளியிட்டு உள்ளது.அதில், ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஏப்., 1 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் தகவல் பதிவிறக்க வேகம், சராசரியாக, வினாடிக்கு, 18.48 ‘மெகாபிட்’ என்றளவில் உள்ளது. இது, முந்தைய, மார்ச், 1ல், 16.48 மெகாபிட் ஆக குறைந்திருந்தது.
இதே காலத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம், 7.66 மெகாபிட் என்றளவில் இருந்து, 6.57 மெகாபிட் ஆக குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வோடபோன் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம், 6.14 மெகாபிட்; ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நெட்வொர்க் வேகம், 5.9 மெகாபிட் என்ற அளவில் உள்ளன. ஐடியாவின் பதிவிறக்க வேகம், 2.34 மெகாபிட் குறைந்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம், 2.01 மெகாபிட் ஆக உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தகவல், படங்கள் ஆகியவற்றின் பதிவிறக்க வேகம், 1.99 மெகாபிட் ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|