வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்புவியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.49 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்­தி­யாவில் வேலை­வாய்ப்­புகள்: பிர­த­மரின் மூன்று முயற்­சிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
07:42

நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அரசு, மூன்றாம் ஆண்டைத் துவங்­க­வி­ருக்­கி­றது. அவ­ரது அரசு மீது வைக்­கப்­படும் விமர்­ச­னங்­களில் முக்­கி­ய­மா­னது, போதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துதான்.

சமீ­பத்தில் அவர் மேற்­கொண்­டி­ருக்கும் மூன்று விஷ­யங்கள் தொழில்­து­றைக்கு மட்­டு­மல்ல, பொது­மக்­க­ளுக்கும் முக்­கி­ய­மா­ன­வையே. அதற்கு முன்னர் சமீ­பத்தில் வெளி­யா­கி­யி­ருக்கும் ஒரு­சில தக­வல்கள் நம் வயிற்றில் புளியைக் கரைப்­பது உறுதி. அதில், தொழில்­நுட்பத் துறையின் பெரிய நிறு­வ­னங்கள் சுமார் 56,000 பேரை வீட்­டுக்கு அனுப்பப் போகின்­றன என்று வெளி­யான செய்தி முக்­கி­ய­மா­னது. அதனைத் தொடர்ந்து ஹெட் ஹன்டர்ஸ் என்ற மனி­த­வள நிறு­வனம் இன்­னொரு குண்டைத் துாக்கிப் போட்­டது.

இந்­திய ஐ.டி., துறையில் அடுத்த மூன்று ஆண்­டு­களில், ஒவ்­வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் வேலைகள் காலி­யாகப் போகின்­றன. இதற்கு அமெ­ரிக்­காவின் பாது­காப்­பு­வாதம் மட்டும் காரணம் அல்ல. மாறி­வரும் தொழில்­நுட்­பங்­களும், ஆடோ­மே­ஷனும் முக்­கிய கார­ணங்கள் என்­றது ஹெட் ஹன்டர்ஸ். இத­னோடு, பிர­த­மரின் தலைமைப் பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரான அரவிந்த் சுப்­பி­ர­ம­ணியம் தெரி­வித்த கருத்­தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். சுமார் 8 முதல் 10 சத­வி­கித மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி இருந்­தால்தான், வேலை­வாய்ப்­புகள் வேக­மாகப் பெருகும். அதற்கு உள்­கட்­டு­மானத் துறையில் முத­லீடு, தனியார் துறை­யி­னரின் பங்­க­ளிப்பு பெரு­குதல், வங்கித் துறையின் பிரச்­னைகள் தீர்க்­கப்­ப­டுதல் ஆகி­யவை முக்­கியம் என்றும் தெரி­வித்­துள்ளார் அரவிந்த் சுப்­பி­ர­ம­ணியம்.

இந்தப் பின்­ன­ணியில் பிர­தமர் எடுத்­து­வரும் நட­வ­டிக்­கை­களைப் புரிந்­து­கொள்­வது அவ­சியம். முதலில், இந்­தி­யாவில் ஒவ்­வொரு மாதமும் எவ்­வ­ளவு வேலைகள் உற்­பத்தி ஆகின்­றன? எத்­தனை வேலைகள் பறி­போ­கின்­றன? என்­பதைப் பற்­றிய துல்­லி­ய­மான கணக்­கீடே இல்லை. இரண்டு தர­வு­கள்தான் இப்­போ­தைக்குக் கிடைத்­து ­வ­ரு­கின்­றன. ஒன்று, நேஷனல் சாம்பிள் சர்வே அலு­வ­லகம் வெளி­யிடும் விபரம். கடை­சி­யாக 2011_12ம் ஆண்டின் நில­வ­ரங்­களைப் பற்­றியே இதன் அறிக்கை வெளி­யா­னது. இரண்­டா­வது, தொழி­லாளர் துறையின் காலாண்டு அறிக்கை. இது எட்டு முக்­கிய துறை­களில் ஏற்­படும் வேலை மாற்­றங்­களை மட்­டுமே கணக்­கிட்டுச் சொல்­கி­றது. ஆனால், முறை­சாரா தொழி­லா­ளர்­களைப் பற்­றிய விப­ரங்கள் இந்த அறிக்­கையில் தெரி­வ­தில்லை.

இந்­தி­யாவில் சுமார் 90 சத­வி­கித ஊழி­யர்கள் முறை­சாரா தொழில்­க­ளி­லேயே ஈடு­பட்­டி­ருக்கும் நிலையில், அவர்­களைப் பற்­றியும் விப­ரங்கள் தெரி­ய­வேண்டும் அல்­லவா? இந்தச் சூழ்­நி­லை­யில்தான், நிடி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பன­க­ரியா தலை­மையில், முறை­யான வேலை­வாய்ப்புத் தக­வல்­களை நம்­ப­க­மான முறையில் திரட்டி நேரத்­தோடு வெளி­யி­டு­வ­தற்­கான வழி­மு­றை­களை வழங்க குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவில் ஒவ்­வொரு மாதமும் வெளி­வரும் வேலை­வாய்ப்­புக்­கான ஆய்வு அறிக்கை, அந்த நாட்டு பங்குச் சந்­தை­க­ளையே கல­க­லக்க வைக்கும். கூடவே எத்­தனை பேர், அந்த வாரம் அரசின் சமூக பாது­காப்பு சலு­கையைப் பெற மனு செய்­தனர் என்ற விப­ரமும் வெளி­யாகும். இதன்­மூ­லமும், அந்­நாட்டில் ஏற்­பட்­டுள்ள வேலை இழப்பு அல்­லது வேலை உரு­வாக்­கத்தைப் புரிந்­து­கொள்ள முடியும். பிர­தமர் எடுத்­தி­ருக்கும் முயற்சி இந்தத் திசையில் எடுக்­கப்­பட்­டி­ருக்கும் முக்­கிய முயற்சி.

இன்­னொரு முக்­கிய முயற்சி, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் தொடர்­பா­னது. இளை­ஞர்கள் ஆக்­கப்­பூர்­வ­மான சிந்­த­னை­யோடு பல புதிய தொழில்­களைத் தொடங்கி வரு­கி­ன்றனர். அவர்­களை ஊக்­கு­விக்கும் வித­மாக, மத்­திய அரசு பல சலு­கை­களை வழங்க நிதி ஆதா­ரங்­களை ஒதுக்­கி­யுள்­ளது. குறிப்­பாக, முதல் மூன்­றாண்­டு­க­ளுக்கு வரிச் சலுகை வழங்­கப்­ப­டு­கி­றது. புதிய தொழில்­நுட்­பங்­க­ளையோ, சேவை­க­ளையோ கண்­டு­பி­டிப்­பது மட்­டுமே இது­வரை முக்­கி­ய­மாக இருந்­தது. இப்­போது, அர­சாங்­கத்தின் சலு­கை­களைப் பெற வேண்­டு­மானால், அந்த ஸ்டார்ட் அப் நிறு­வனம் எத்­தனை வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வி­ருக்­கி­றது என்­பதைத் தெரி­விக்­க­வேண்டும்.

எண்­ணிக்­கையை எப்­படிச் சொல்­ல­ மு­டியும்? அதை நிறை­வேற்ற முடி­யுமா என்­றெல்லாம் கேள்வி கேட்­கப்­ப­டு­கி­றது. மக்கள் பணத்­தி­லி­ருந்து சலுகை கோரு­ப­வர்கள், அவர்­க­ளுக்குப் பய­னுள்ள வேலை­களை உரு­வாக்­க­வேண்­டி­யதும் அவ­சி­ய­மில்­லையா?

மூன்­றா­வ­தாக, “எந்த ஒரு திட்­டத்தை பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்கு எடுத்­துக்­கொண்டு போனாலும், இதனால் எத்­தனை வேலைகள் உரு­வாகும்?” என்று பிர­தமர் கேட்­ப­தாக வர்த்­தகத் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் சொல்­லி­யி­ருப்­பது கவ­னத்­துக்­கு­ரி­யது. அர­சாங்கம் செலவு செய்யும் ஒவ்­வொரு திட்­டத்­திலும், புதிய வேலைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். அது எத்­தனை வேலை­களை உரு­வாக்கும் என்ற தோரா­ய­மான எண்­ணிக்­கை­யையும் இணைத்தே விண்­ணப்­பங்கள் பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்கு அனுப்­பப்­பட வேண்டும் என்ற நடை­முறை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது முக்­கி­ய­மான முன்­னேற்றம். மேலும், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் விதத்தில் உற்­பத்திக் கொள்­கையை மாற்­றி­ய­மைக்­கவும் பரி­சீ­லனை செய்­து­வ­ரு­கி­றது. இந்­தி­யாதான் மிக இள­மை­யான நாடு. மொத்த மக்­கள்­தொ­கையில், 35 வய­துக்­கு உட்பட்டோர் சுமார் 65 சத­வீதம் பேர். இவர்­களின் எதிர்­காலம் பிர­கா­ச­மா­னால்தான் இந்­தியா ஒளிரும்!
-ஆர்.வெங்கடேஷ், பத்ரிகையாளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)