‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பீம் செய­லிக்கு வழி­காட்டும் இணை­ய­தளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
00:16

டிஜிட்டல் பண பரி­வர்த்­தனையை எளி­தாக்கும் வகையில் அறி­முகம் செய்­யப்­பட்ட பீம் செய­லியின் பயன்­பாடு தொடர்­பான தக­வல்­களை அளித்து வழி­காட்­டு­வ­தற்­காக பிரத்­யேக இணை­ய­தளம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ரொக்க பரி­வர்த்­த­னைக்கு பதி­லாக டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை அரசால் ஊக்­கு­விக்­கப்­படு­கி­றது. இதற்கு உதவும் வகையில், டிஜிட்டல் பரி­வர்த்­த­னைக்­கான பீம் செயலி அறி­முகம் செய்­யப்­பட்­டது. ஸ்மார்ட்போன் மூலம் வங்கி கணக்­கு­க­ளுக்கு இடையே பண பரி­வர்த்­த­னைக்­கான யு.பி.ஐ., இணைய மேடையை அடிப்­படை­யாக கொண்டு பீம் செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செய­லியின் பயன்­பாடு தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் வகையில், தேசிய பேமென்ட் கார்ப்­ப­ரேஷன் தனி இணை­ய­த­ளத்தை அமைத்­துள்­ளது.

பீம் செய­லியை பயன்­ப­டுத்தும் வழி­களை இந்த இணை­ய­தளம் எளிய முறையில் விளக்­கு­கி­றது. எளி­மை­யான, விரை­வான டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை தீர்­வான இந்த செய­லியை வங்கி கணக்கு விப­ரங்­களை பகிர்ந்து கொள்­ளா­மலேயே பயன்­ப­டுத்­தலாம் என்­பது உள்­ளிட்ட சிறப்பு அம்­சங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தொடர்ந்து, பீம் செய­லியை யார் பயன்­ப­டுத்­தலாம்; எப்­போது எல்லாம் பயன்­ப­டுத்­தலாம்; பீம் செயலி மூலம் எப்­படி பணம் அனுப்­பு­வது போன்­ற­வற்றை இந்த தளம் எளி­தாக விளக்­கு­கி­றது. இந்த செய­லியை பயன்­ப­டுத்­து­வதன் அனு­கூ­லங்­களும் விளக்­கப்­பட்­டுள்­ளன.

பீம் செய­லியில் பரி­வர்த்­தனை செய்­வது தொடர்­பான விளக்க வீடி­யோவும் இடம்­பெற்­றுள்­ளது. பீம் செய­லியை தர­வி­றக்கம் செய்து பயன்­ப­டுத்­து­வ­தற்­கான விரி­வான விளக்­கமும் இடம்­பெற்­றுள்­ளது.பீம் செயலி தொடர்­பாக பொது­மக்­களின் கேள்­விகள், சந்­தே­கங்கள் அனைத்தும் பொதுத்­தன்மை கொண்­டி­ருப்­பதை அடுத்து அவற்­றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வழி­காட்டி இணை­ய­த­ளத்தை தேசிய பேமென்ட் கார்ப்­ப­ரேஷன் அமைத்­துள்­ளது.

பீம் செயலி பயன்­பாட்டை ஊக்­கு­விக்கும் வகையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள பரிசு திட்­டங்கள் தொடர்­பான தக­வல்­க­ளையும் இந்த தளத்தின் மூலம் பெறலாம். இந்த தளம் மூலம் பய­னா­ளிகள் பீம் செய­லியை பயன்­ப­டுத்தும் விதம் குறித்து தாங்­க­ளா­கவே எளி­தாக, கற்­றுக்­கொள்­ளலாம். பீம் செயலி 20 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட பய­னா­ளி­களால் தர­வி­றக்கம் செய்­யப்­பட்டு, 832 கோடி ரூபாய்க்கு மேல் பரி­வர்த்­தனை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் மத்­திய அரசு சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)