அவ­சர கால நிதி சேமிப்புக்கு பின் செய்ய வேண்டியவைஅவ­சர கால நிதி சேமிப்புக்கு பின் செய்ய வேண்டியவை ... பங்குச் சந்தை நிலவரம் பங்குச் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரி சேமிப்பு முத­லீடு சிறப்­பாக திட்­ட­மி­டு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
00:22

வரி சேமிப்­பிற்­காக மட்டும் முத­லீடு செய்­யாமல், ஒட்­டு­மொத்த நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப திட்­ட­மிட்டு தேர்வு செய்­வதன் மூலம், நிதி சாத­னங்­களின் அதி­க­பட்ச பல­னையும் பெறலாம்.

புத்­தாண்டு உறு­தி­மொ­ழி­யைப்­போல, நிதி­யாண்டு முடி­விலும், வரி சேமிப்பு தொடர்­பாக சிறந்த முறையில் திட்­ட­மிட்டு செயல்­பட வேண்டும் எனும் உறு­தி­மொ­ழியை பலரும் மேற்­கொள்­வ­துண்டு. நிதி வல்­லு­னர்­களும் கூட, வரி சேமிப்­பிற்­கான முத­லீ­டு­களை மார்ச் மாத கடை­சிக்கு கொண்டு செல்­லாமல் துவக்­கத்­தி­லேயே திட்­ட­மிடு­வது சிறந்­தது என, ஆலோ­சனை சொல்­கின்­றனர்.

இருப்­பினும், வரி சேமிப்பை தள்­ளிப்­போ­டு­வதே பல­ரது வழக்­க­மாக இருக்­கி­றது. வரி செலுத்­து­வதை குறைக்கும் வகையில் முத­லீ­டு­களை திட்­ட­மி­டு­வது ஆண்­டு­தோறும் மேற்­கொள்ளும் செய­லாக இருப்­பதால், இதை அவ­சர முடி­வுக்கு விடாமல் சிறந்த முறையில் திட்­ட­மி­டு­வதே சரி­யாக இருக்கும் என, வல்­லு­னர்கள் கரு­து­கி­ன­றனர்.

நோக்கம் என்ன?
வரி சேமிப்­பிற்­காக திட்­ட­மிட்டு முத­லீடு செய்­வது என்­பதை தனி செயல்­பா­டாக பார்க்க கூடாது. அதை ஒட்­டு­மொத்த நிதி திட்­ட­மி­டலின் ஒரு அங்­க­மாக பார்க்க வேண்டும் என்­பதே முக்­கியம். ஒரு­வ­ரு­டைய வரு­மானம், சேமிக்கும் ஆற்றல், இலக்­குகள், ரிஸ்க் தன்மை ஆகி­ய­வற்­றையும் மனதில் கொள்ள வேண்டும். முத­லீடு செய்­ப­வரின் நிதி இலக்­குகள் மற்றும் தேவை­க­ளுக்கு ஏற்­பவும் அமைய வேண்டும்.

உதா­ர­ணத்­திற்கு இளம் வயது முத­லீட்­டாளர் நீண்ட கால இலக்­கிற்­காக தேசிய பென்ஷன் திட்டம் அல்­லது இ.எல்.எஸ்.எஸ்., எனப்­படும் சம­பங்கு அம்சம் கொண்ட திட்­டங்­களில் முத­லீடு செய்­வது பொருத்­த­மாக இருக்கும். வய­தான முத­லீட்­டா­ளர்கள் எனில் தேசிய சேமிப்பு சான்­றிதழ் அல்­லது பி.பி.எப்., போன்ற கடன்சார் முத­லீ­டு­களை நாடு­வது பொருத்­த­மாக அமையும். முத­லீடு மீது வரு­மா­னமும் பெற வேண்டும் என நினைப்­ப­வர்கள் ஐந்­தாண்டு கால வங்கி டிபாசிட் வச­தியை நாடலாம். ஆக, வரி சேமிப்­ப­தற்­காக செய்­யப்­பட்­டாலும் அந்த முத­லீடு, நிதி இலக்கு மற்றும் தேவை­களை நிறை­வேற்றக் கூடி­ய­தா­கவும் இருக்க வேண்டும்.

மேலும், ஒரு­வ­ரது வரு­மானம் மற்றும் சேமிக்கும் திற­னையும் கருத்தில் கொண்டு முடி­வெ­டுக்க வேண்டும். மாதாந்­திர செல­வுகள், அவ­சர கால நிதி, காப்­பீடு போன்­றவை தவிர்க்க இய­லா­தவை. இவற்­றுக்கு பிறகே முத­லீடு வரு­கி­றது. இதற்கு முன்­ன­தா­கவே வரி சேமிப்­பிற்­காக முத­லீடு செய்ய முடி­யாது. செல­வு­களை தீர்­மா­னித்த பின் கையில் உள்ள சேமிப்­பிற்கு ஏற்ப முத­லீட்டு வழி­களை நாடலாம். இல்லை எனில் தேவை­யில்­லாமல் கடன் வாங்கும் சூழல் வரலாம்.

பலன்­களை அறிதல்:
உங்­க­ளுக்கு தேவைப்­படும் முத­லீடு மற்றும் உங்­க­ளுக்கு உகந்த வரி சேமிப்பு பலனை அளிக்கும் முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்­வதே சிறந்­த­தாக இருக்கும். பலன் என்­பது முத­லீட்டு அள­வுக்கு ஏற்ப வரு­மான வரி வரம்பில் அளிக்க கூடிய கழி­வாக அமை­யலாம். பி.பி.எப்., – எஸ்.எஸ்.சி., அல்­லது இ.எல்.எஸ்.எஸ்., திட்­டங்­க­ளாக இவை அமை­யலாம். காப்­பீடு பிரீ­மியம், மருத்­துவ காப்­பீடு, வீட்டுக் கட­னுக்­கான வட்­டித்­தொகை ஆகி­ய­வையும் இவற்றின் கீழ் வரும். ஒரு சில முத­லீ­டுகள் அவற்றின் மீதான வரு­மா­னத்­திற்கும் வரிச்­ச­லுகை கொண்­டி­ருக்கும்.

குறிப்­பிட்ட வகை­யான பத்­தி­ரங்கள் போன்­றவை இதற்­கான உதா­ரணம். இதன் மூலம் வரி பாதிப்பு இல்­லாமல் நிலை­யான வரு­மானம் பெறலாம். வரி சேமிப்பு திட்­ட­மி­ட­லுக்­கான வழிகள் பல இருந்­தாலும், இது தனி­நபர் தேவைக்­கேற்ப மாறு­ப­டக்­கூ­டி­யது. வரி சேமிப்பின் முதல்­ப­டியாக தகுதி வாய்ந்த செல­வு­ களை முதலில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். காப்­பீடு பிரீ­மியம், வீட்­டுக்­கடன் தவணை, கல்வி கட்­டணம் ஆகி­யவை இதில் அடங்கும். பி.எப்., போன்ற கட்­டாய பங்­க­ளிப்பை அடுத்த கட்­ட­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். இதன் பிறகே வரிச்­ச­லுகை அளிக்கும் முத­லீ­டு­களை நாட வேண்டும்.

முத­லீடு தரும் பலன், பணத்தை திருப்பி எடுக்கும் தன்மை, ரிஸ்க் அம்சம் ஆகி­ய­வற்றை மனதில் கொள்ள வேண்டும். இருக்கும் பலன்­களை அதி­க­மாக்கி கொள்ள முயல வேண்டும். உதா­ர­ண­மாக பி.பி.எப்., அல்­லது இ.எல்.எஸ்.எஸ்., முத­லீ­டுகள் நீண்ட கால சேமிப்பை அதி­க­மாக்க உதவும். என்.பி.எஸ்., திட்­டத்தின் மூல­மான கூடுதல் முத­லீடு போன்ற வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். வரி சேமிப்­பிற்­காக மட்­டுமே முத­லீடு செய்­யாமல், எதிர்­பார்க்கும் பல­னுடன் வரி சேமிப்­பையும் சாத்­தி­ய­மாக்கும் முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்­வதன் மூலம் அதிக பலன் பெறலாம். இப்­படி செய்­வதன் மூலம் நிதி இலக்­கு­களை நோக்கி முன்­னே­று­வ­தையும் உறுதி செய்து கொள்­ளலாம்.
வரி சேமிப்பு அரிச்­சு­வடி:
* வரி சேமிப்பை துவக்­கத்­தி­லேயே திட்­ட­மிட வேண்டும்.
* கடைசி நேர தேர்­வுகள் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம்.
* முத­லீட்டின் பல­னோடு வரி சேமிப்பு கூடு­த­லாக அமைய வேண்டும்.
* கட்­டாய கழி­வு­களை முதலில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)