பதிவு செய்த நாள்
12 ஆக2017
00:46
புதுடில்லி:இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜூலையில், 15.12 சதவீதம் அதிகரித்து, 2.99 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2.60 லட்சமாக இருந்தது.இதே காலத்தில், கார் விற்பனை,
8.52 சதவீதம் ஏற்றம் கண்டு, 1.78 லட்சத்திலிருந்து, 1.93 லட்சமாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை, 16.9 சதவீதம் அதிகரித்து, 10.49 லட்சமாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், மொத்த இருசக்கர வாகன விற்பனை, 13.73 சதவீதம் உயர்ந்து, 16.79 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 14.76 லட்சமாக இருந்தது.அனைத்து பிரிவுகளிலும், ஒட்டுமொத்த வாகன விற்பனை, 13.3 சதவீதம் அதிகரித்து, 20.78 லட்சமாக வளர்ச்சியடைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|