பதிவு செய்த நாள்
22 அக்2017
04:56
மாருதி நிறுவனம் தான், இந்தியாவில், கார் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது என்பது, அனைவரும் அறிந்ததே. ஆனால், நாட்டில் அதிகம் விற்பனையாகும், முதல், 10 கார்களில், ஏழு கார்கள், அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் என்பது, அதன் அசைக்க முடியாத ஆதிக்கத்தை பறைசாற்றுவதாக உள்ளது.அப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து, நாட்டில், அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை, மாருதி, ‘ஆல்டோ’ பெற்றுள்ளது. அது மட்டுமின்றி, ‘டிசையர், பலேனோ, சுவிப்ட், வேகன் ஆர்’ என, முதல் ஐந்து இடங்களில், மாருதி தான் நிரம்பி உள்ளது. ஏழாவது இடத்தில், ‘பிரெஸ்ஸா,’ 10-வது இடத்தில், ‘செலிரியோ’ என, பத்தில், ஏழு இடங்களை, மாருதி பிடித்துள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை, ஹுண்டாய் பிடித்துள்ளது. அதன், ‘கிராண்ட் ஐ10’ 6வது இடத்திலும், ‘எலீட்’ 8வது இடத்திலும், ‘கிரெட்டா’ ஒன்பதாம் இடத்தையும் பிடித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|