பதிவு செய்த நாள்
22 அக்2017
04:56
‘மஹிந்திரா டூ – வீலர்ஸ்’ நிறுவனம், தொடரும் நஷ்டம் காரணமாக, இருசக்கர வாகன உற்பத்தியில் இருந்து பின்வாங்கி உள்ள போதும், ஏற்கனவே, ஓரளவு வரவேற்பு பெற்ற, ‘மோஜோ, பி.எஸ்.ஏ.,’ மற்றும், ‘ஜாவா’ போன்ற, சில வாகனங்களை மட்டும் தயாரிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், அதன் எஞ்சியுள்ள சரக்குகளை விற்கும் நடவடிக்கையாக, ‘கஸ்டோ’வில் சில மாற்றங்களை செய்து, ‘கஸ்டோ, ஆர்.எஸ்.,’ 110 ‘சிசி’ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முந்தையதில் இருந்து, பெரியளவில் மாற்றங்கள் இல்லை. இந்த மாடலில், இரு வண்ணங்கள் இருக்கும்படி, ‘டூயல் பெயின்ட்’ செய்யப்பட்டு உள்ளது. சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன், டில்லி ஷோரூம் விலை,48 ஆயிரத்து 180 ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|