பெருகி வரும் தொழில் வாய்ப்பால்... துப்பறியும் துறையில் கால் பதிக்க துடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள்பெருகி வரும் தொழில் வாய்ப்பால்... துப்பறியும் துறையில் கால் பதிக்க ... ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதலீட்டாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய தருணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
00:08

ஒவ்­வொரு ஆண்­டும் தீபா­வளி திரு­நா­ளின் மறு­நாளை, லக்ஷ்மி­பூ­ஜை­யா­க­வும், தங்­கள் நிதி­ ஆண்­டின் துவக்க நாளா­க­வும், ஒரு சம்­பி­ர­தாய அடிப்­ப­டை­யில் பங்­கு­சந்­தை­யின் தர­கர் சமூ­கம் கொண்­டா­டு­கிறது. அந்­த­நா­ளில், தங்­கம் வாங்­கு­வ­தும், புதிய முத­லீடு செய்­வ­தும் தங்­க­ளுக்கு அதிர்ஷ்­ட­மும், லாப­மும் ஈட்­டும் என்ற நம்­பிக்கை நிறைந்­த­வர்­கள்­அ­தி­கம்.

இது ஒரு வட­இந்­திய கலாச்­சார நிகழ்வு என்­றா­லும், சந்­தை­யின் விடு­முறை அமைப்பு இந்த தினங்­களை தெற்­கி­லும் பிர­ப­லப்­ப­டுத்தி விட்­டன. அந்த மாலைப் பொழுது தென்­னாட்டு பங்கு வர்த்­தக நிறு­வ­னங்­க­ளி­லும் விம­ரி­சை­யாக கொண்­டா­டு­வதை பார்க்­க­முடி­கிறது. ஒவ்­வொரு ஆண்­டை­யும் ‘சம்­வட்’ என்று அழைப்­பது வழக்­கம். அப்­படி துவங்­கிய இந்த புதிய ஆண்டை ‘சம்­வட் – 2074’ என்று அழைக்­கி­றோம்.

சாதனை:
ஒவ்­வொரு சம்­வட் ஆண்­டி­லும் சந்­தை­யின் குறி­யீ­டு­கள் எத்­த­கைய லாபம் தரு­கின்­றன என்­பதை சந்தை ஆர்­வத்­தோடு எதிர்­நோக்­கும். சென்ற சம்­வட் துவங்­கிய மறு­நாள், பிர­த­மர் மோடி பண­ம­திப்பு நீக்­கத்தை அறி­வித்­தார். இது சந்­தைக்கு முத­லில் அதிர்ச்­சி­யை­யும், அச்­சத்­தை­யும் தந்­தா­லும் ஆண்­டின் நிறை­வில், சந்­தை­யின் குறி­யீ­டான, ‘சென்­செக்ஸ்’ 16.67 சத­வீ­தம் லாபம் தந்­தது. ஆகவே, சென்ற சம்­வட், வங்கி வட்டி விகி­தத்தை விட கணி­ச­மான அளவு அதிக லாபம் ஈட்டி உள்­ளது என்றே சொல்­ல­லாம். பண­ம­திப்பு நீக்க முடி­வோடு துவங்­கிய சம்­வட் 2073, தொடர்ந்து ஜி.எஸ்.டி., சார்ந்த பல சிக்­கல்­களை சந்­தித்­தும் இந்த சாத­னையை படைத்­துள்­ளது.

சந்­தை­யின்­ லா­பம், ஒரு குறிப்­பிட்ட துறை அல்­லது சில துறை­களை சார்ந்து இருக்­கா­மல், அனைத்து துறை­கள் சார்ந்­தும் அமை­யும்­போது, அதுவே சந்தை முதிர்­நி­லை­யை­யும், மதிப்­பீட்­ட­ள­வில் உச்­சத்­தை­யும் தொட்­ட­தற்­கான அறி­குறி என்று கூற­லாம். ஆனால், முடிந்த சம்­வட் 2073 அத்­த­கைய உச்­சத்தை தொட்­ட­தாக எடுத்­துக் கொள்­ள­மு­டி­யாது. சந்­தை­யின் முக்­கிய துறை­க­ளான, மருந்து உற்­பத்தி, ஐ.டி., போன்­ற­வை­யும்,பொதுத் துறை வங்­கி­களும், மின் உற்­பத்தி நிறு­வ­னங்­களும் சந்தை வளர்ச்­சி­யில் பங்­கேற்­க­வில்லை என்­பதை நாம் முக்­கி­ய­மாக மன­தில் கொள்ள வேண்­டும்.

லாபத்திற்கு வழிவகுக்கும்:
நடப்பு சம்­வட்­டில், சந்தை மேலும் உயர, இது­வரை பங்­கேற்­காத துறை சார்ந்த பங்­கு­கள் தங்­கள், நஷ்­டத்தை குறைத்­தும், லாபத்தை அதி­க­ரித்­தும் இயங்­கு­மே­யா­னால், சந்தை மேலும் உயர வாய்ப்பு அதி­கம். அதே­போல, ஜி.எஸ்.டி., முழு­மை­யாக ஏற்பு அடைந்து, வரி ஏய்ப்பு செய்­யா­மல் அனை­வ­ரும் வரி செலுத்­தும் சூழல் ஏற்­பட்­டால், அது­வும் சந்­தைக்கு பெரும் சாத­க­மாக அமை­யும். சென்ற சம்­வட்­டில், மிகச் சிறப்­பாக மதிப்பு கூடிய பங்­கு­கள், நடப்பு சம்­வட்­டில் மதிப்பை இழக்­கவோ அல்­லது தேங்கி கிடக்­கவோ நேர­லாம். இது ஒவ்­வொரு சம்­வட்­டி­லும் நாம் காணும் நிகழ்வு.

சென்ற ஆண்­டின் பங்கு விலை­யேற்­றம் சார்ந்து மட்­டுமே முத­லீடு செய்­வதை தவிர்ப்­பது அவ­சி­யம். ஒவ்­வொரு பங்­கை­யும், மதிப்­பாய்வு செய்து, கவ­ன­மாக ஆய்வுக்கு உட்­ப­டுத்தி முத­லீ­டு­களை செய்­வது வரும் சம்­வட்­டில், லாபம் அடைய வழி­வ­குக்­கும். ஆக, சந்­தை­யின் தீபா­வளி மற்­றும் சம்­வட் உற்­சா­கத்தை, புறம் தள்ளி விட்டு, மதிப்­பீட்டு ஆய்­வில் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் முழு­க­வ­ன­மும் செலுத்த வேண்­டிய தரு­ணம் இது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)