நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்புநேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்பு ... ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டில்­லி­யில் களை­கட்­டும், ‘ஆட்டோ எக்ஸ்போ’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2018
07:35

இந்­தி­யா­வில், வாகன ரசி­கர்­கள், அத்­து­றை­யைச் சார்ந்­த­வர்­கள் பெரி­தும் எதிர்­பார்த்த, ‘ஆட்டோ எக்ஸ்போ’ துவங்கி, கூட்­டம் அலை­மோ­தும் அரங்­கு­க­ளு­டன், கோலா­க­ல­மாக நடக்­கிறது. டில்­லி­யில், இரு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடக்­கும் இந்த வாகன கண்­காட்சி, வழக்­கம் போல், கிரேட்­டர் நொய்­டா­வில் உள்ள, ‘இந்­தியா எக்ஸ்போ மார்ட்’ திட­லில், பிப்., 14 வரை நடக்­கிறது.

இதில், இந்­திய மற்­றும் சர்­வ­தேச வாகன உற்­பத்தி நிறு­வ­னங்­கள், புதிய வாக­னங்­களை, தொடர்ந்து அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கின்றன. இதற்­கா­கவே, பல நிறு­வ­னங்­கள், புது அறி­மு­கங்­களை பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­தன. மேலும், அடுத்த தயா­ரிப்­பு­கள் குறித்து, டிரெ­யி­லரை வெளி­யி­டு­வது போல், மாதிரி வாக­னங்­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட்டு உள்ளன. இம்­முறை, 100க்கும் மேற்­பட்ட கார் மற்­றும் பைக்­கு­களின் மாதி­ரி­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட உள்ளன.

மேலும், இம்­முறை, ‘எலக்ட்­ரிக்’ வாக­னங்­க­ளுக்கு, கண்­காட்­சி­யில் முக்­கி­யத்­து­வம் தரப்­பட்­டுள்­ளது. இதில் இது­வரை, 10க்கும் மேற்­பட்ட புதிய கார், பைக்­கு­கள் அறி­மு­க­மாகி உள்ளன.

டி.வி.எஸ்.,

என் ­டார்க் ஸ்கூட்­டர்


டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம், ‘என் ­டார்க்’ எனும், அதன் முதல், 125 ‘சிசி’ ஸ்கூட்­டரை
அறி­மு­கம் செய்­துள்­ளது.சென்­னை­யில் நடந்த நிகழ்ச்­சி­யில், அதை, டி.வி.எஸ்., தலை­வர் மற்­றும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான, கே.என்.ராதா­கி­ருஷ்­ணன் அறி­மு­கம் செய்து வைத்­தார்.
இளம் வய­தி­னரை குறி­வைத்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்த ஸ்கூட்­ட­ரில், ‘3 வால்வு, ஏர்­கூல்டு சிங்­கிள் சிலிண்­டர் இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது.

இந்த, ‘என் ­டார்க் 125’ ஸ்கூட்­டர் புறப்­பட்ட, 60 வினா­டி­களில், 60 கி.மீ., வேகத்தை எட்­டு­மாம்.
அதி­க­பட்ச வேகம், 95 கி.மீ., இதன், ‘டிஜிட்­டல் கிளஸ்­ட­ரில், புளூ டூத்’ இணைப்பு உள்­ளது. அது வேகம், எரி­பொ­ருள் அளவை காட்­டு­வ­து­டன், பூஜ்­ஜி­யத்­தில் இருந்து, 60 கி.மீ., வேகத்தை எட்ட ஆன நேரம் மற்­றும் பய­ணத்­தின் போது, வாகன ஓட்டி கடை­பி­டித்த சரா­சரி வேகம் போன்ற பல தக­வல்­களை காண்­பிக்­கிறது. இதில், இருக்­கைக்கு அடி­யில், 22 லி., கொள்­ளிட அள­வுக்கு பொருள் வைக்­கும் இடம், மொபைல் போன் சார்ஜ் செய்­யும் வசதி, ஸ்டீ­ரிங்கை இரு­பு­ற­மும் பூட்­டும், ‘லாக்’ என, பல வச­தி­கள் உள்ளன.இதன் ஷோரூம் விலை, 58,750 ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.


ரெனோ

‘க்விட்’ சூப்­பர் ஹீரோ


ரெனோ நிறு­வ­னத்­தின், ‘ஹேட்ச்­பேக்’ காரான, ‘க்விட்,’ அதன் குறை­வான விலை கார­ண­மாக, நல்ல வர­வேற்பை பெற்­றுள்­ளது. தற்­போது, அதன் சிறப்பு பதிப்­பான, ‘சூப்­பர் ஹீரோ’ காரை அறி­மு­கம் செய்­துள்­ளது.டிஸ்னி நிறு­வ­னத்­து­டன் செய்த ஒப்­பந்­தத்தை அடுத்து, இக்­கா­ரில், அவெஞ்­சர்ஸ் திரைப்­பட கதா­பாத்­தி­ரங்­களை நினை­வு­ப­டுத்­தும், ‘டிசைன், கிரா­பிக்ஸ்’ போன்­றவை, காரின் வெளிப்­ப­கு­தி­யில் இடம் பெற்­றுள்ளன. இதில், அயர்ன் மேன் பதிப்பு சிவப்பு நிறம்; கேப்­டன் அமெ­ரிக்கா பதிப்பு, வெள்ளை மற்­றும் நீலம் என, அசத்­தல் நிறங்­களில் வெளி வந்­துள்ளன. இவற்­றில், அந்­தந்த படத்­தின் சூப்­பர் ஹீரோ மற்­றும் குறி­யீ­டு­களும் இடம் பெற்­றுள்ளன.

இந்த காரை, 10 ஆயி­ரம் ரூபாய் செலுத்தி முன்­ப­திவு செய்­ய­லாம். இதை, ‘அமே­சான்’ வலை­த­ளத்­தி­லும் பிரத்­யே­க­மாக பதிவு செய்­ய­லாம். டில்­லி­யில் நடக்­கும், ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்­காட்­சி­யி­லும், இது பார்­வைக்கு வைக்­கப்­பட்டு உள்­ளது. தொழில்­நுட்ப அம்­சங்­களில் மாற்­றம் இல்லை. 68 எச்.பி., திறன் உரு­வாக்­கும் அதே, ‘1.0 லி., இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது.
இந்த கார்­கள், ஏ.எம்.டி., மற்­றும், ‘மேனு­வல்’ மாடல்­களில் கிடைக்­கின்றன. இவற்­றின் டில்லி ஷோரூம் விலை, 4.34 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.

ஜாகு­வார்

‘ஐ பேஸ்’ பேட்­டரி கார்


டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னம் கைய­கப்­ப­டுத்­திய, ‘ஜாகு­வார் லேண்டு ரோவர்’ சொகுசு கார் தயா­ரிப்பு நிறு­வ­னம், ‘பேட்­டரி’யால் இயங்­கக்­கூ­டிய, அதன் முதல் தயா­ரிப்பை, விரை­வில் அறி­மு­கம் செய்ய உள்­ளது.பெரி­தும் எதிர்­பார்க்­கப்­படும் இந்த பேட்­டரி கார், சுவிட்­சர்­லாந்­தின், ஜெனிவா நக­ரில், அடுத்த மாதம் நடை­பெற உள்ள, ‘சர்­வ­தேச ஆட்டோ எக்ஸ்போ’வில், அறி­மு­க­மா­கும் என, தெரி­கிறது.

இதில், ‘100 கிலோ­வாட் திற­னு­டைய சார்­ஜர்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது. இதை முழு­வ­து­மாக, ‘சார்ஜ்’ செய்ய, 90 நிமி­டங்­கள் ஆகும். சார்ஜ் செய்த பின், 499 கி.மீ., மைலேஜ் தரு­மாம். பேட்­ட­ரியை, 40 நிமி­டம், ‘சார்ஜ்’ செய்­தாலே போதும்; 80 சத­வீ­தம் மைலேஜ் தரும் வகை­யில், அது தயா­ராகி விடு­மாம்.

இந்த, ‘ஐ பேஸ்’ காரில், இரு காந்த விசை மின் மோட்­டார்­கள் பொருத்­தப்­பட்டு உள்ளன. ஒவ்­வொரு மோட்­டா­ரும் தலா, 200 எச்.பி., திறன் என, 400 எச்.பி., திறனை உரு­வாக்க வல்­லவை. அத­னால், புறப்­பட்ட நான்கு வினா­டி­களில், சீறிப்­பாய்ந்து, 97 கி.மீ., வேகத்தை, ‘ஐ பேஸ்’ எட்­டிப் பிடிக்­கும் என, ஜாகு­வார் நிறு­வ­னம் மார்­தட்­டு­கிறது.

ஹோண்டா

புதிய, ‘அமேஸ்’ அறி­மு­கம்


ஹோண்டா மோட்­டார் கம்­பெனி, அதன், ‘அமேஸ்’ செடான் ரக காரின், அடுத்த தலை­முறை காரை காட்­சிப்­ப­டுத்தி உள்­ளது. டில்லி, ‘ஆட்டோ எக்ஸ்போ’வில், நிறு­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர், டகா­ஹிரோ ஹச்­சிகோ, இதை அறி­மு­கம் செய்­தார்.இதில், புது டிசை­னில், உட்­பு­றத்­தில் அழ­கிய மாற்­றங்­கள் மற்­றும் ஏரா­ள­மான பாது­காப்பு அம்­சங்­கள் இடம் பெற்­றுள்ளன.அத்­து­டன், இதன் பெட்­ரோல், எஸ்.யு.வி.,யான, ‘ஹோண்டா சி.ஆர்.வி.,’யின், ஐந்­தா­வது தலை­முறை பதிப்­பும், டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற்­றுள்­ளது.
மேற்­கண்ட இரு புதிய வாக­னங்­களும், 2018 – 19ம் நிதி­யாண்­டின் மத்­தி­யில், சந்­தை­யில் விற்­ப­னைக்கு வர­வுள்ளன.

நிகழ்ச்­சி­யில் பேசிய டகா­ஹிரோ ஹச்­சிகோ, ‘தற்­போது, இங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு உள்ள வாக­னங்­க­ளு­டன், அடுத்த மூன்­றாண்­டு­களில், மேலும் மூன்று புதிய வாக­னங்­களை, இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்ய உள்­ளோம்’ என்­றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)