நிலக்­க­டலை சாகு­படி உரிய விலை இல்லைநிலக்­க­டலை சாகு­படி உரிய விலை இல்லை ... 'டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை' 'டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை' ...
தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக சி.ஐ.ஐ., சிறப்பு திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
00:52

சென்னை:தென் மாநி­லங்­க­ளின் வளர்ச்­சியை துரி­தப்­ப­டுத்­தும் வகை­யில், தொழில் மையங்­களை உரு­வாக்­க­வும், இம்­மா­நி­லங்­களில் உள்ள இரண்­டாம் நிலை நக­ரங்­க­ளின் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும், மாநில அர­சு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற இருப்­ப­தாக, சி.ஐ.ஐ., எனும், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
சிறப்பு கவ­னம்
இது குறித்து, இக்­கூட்­ட­மைப்­பின் தென் பிராந்­திய தலை­வர், ஆர்.தினேஷ் மேலும் தெரி­வித்­த­தா­வது:நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் தென் மாநி­லங்­கள் மிகப் பெரும் பங்­காற்றி வரு­கின்­றன. இந்த வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து பேணும் வகை­யில், இரண்­டாம் நிலை நக­ரங்­க­ளின் வளர்ச்­சிக்­காக மாநில அர­சு­க­ளு­டன் இணைந்து செயல்­பட இருக்­கி­றோம்.
மேலும், குறு, சிறு, மத்­திய தொழில் பிரி­வின் வளர்ச்­சிக்கு தேவை­யான கொள்­கை­க­ளி­லும் சிறப்பு கவ­னம் செலுத்த உள்­ளோம்.இதன் தொடர்ச்­சி­யாக, ‘போட்­டித்­தி­றன் மிக்க துடிப்­பான தென்­னிந்­தியா’ என்­பதை, 2018- – 19ம் ஆண்­டுக்­கான கருப்­பொருளாக எடுத்­துள்­ளோம்.இத்­திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், திறன் மேம்­பாடு, பயிற்சி, பெண்­க­ளுக்கு சம வாய்ப்பு, சிறந்த நிர்­வா­கம், வெளிப்­ப­டைத் தன்மை போன்ற முக்­கி­ய­மான அம்­சங்­களில் சிறப்பு கவ­னம் எடுக்­கப்­படும்.
இக்­கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர்­களில், 65 சத­வீ­தம் பேர், சிறு, மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் ­தான்.தென் மாநி­லங்­களில், சிறு விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­ வ­ளிக்­கும் நோக்­கத்­து­டன், குறிப்­பிட்ட பயிர்­க­ளுக்­கான சிறப்பு முனைப்பு திட்டங்­க­ளை­யும் கூட்­ட­மைப்பு துவக்கி இருக்­கிறது.
செயற்­பணி குழு
மேலும், சிறு தானிய சாகு­ப­டியை ஊக்­கு­விக்­க­வும், அவற்றை முன்­னி­லைப்­ப­டுத்­த­வும் வச­தி­யாக, சிறு தானி­யங்­க­ளுக்­கான ஒரு செயற்­பணி குழு­வும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் தெரிவித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)