‘இ – வே’ பில்: இந்திய தொழிலக கூட்டமைப்பு வரவேற்பு ‘இ – வே’ பில்: இந்திய தொழிலக கூட்டமைப்பு வரவேற்பு ... பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள் பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள் ...
உங்கள் ஷாப்பிங் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
00:52

ஷாப்பிங் பழக்கம், ஷாப்பிங் மோகம் பற்றி எல்லாம் பேசப்­ப­டு­வது குறித்து, நீங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கலாம். பொருட்­களை வாங்­கு­வது என்­பது, தேவையின் அடிப்­ப­டையில் அமை­யாமல், மிகை­யான பழக்­க­மாக மாறும் போது, வீண் செல­வுகள் ஏற்­பட்டு, பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது. இத்­த­கைய மிகை ஷாப்பிங் பழக்கம் இருந்தால், அதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழிகள் இதோ:
செலவு செய்யும் முன்: வர­வுக்குள் செல­வுகள் அடங்க வேண்டும் என்­பது மட்டும் அல்ல, கையில் இல்­லாத பணத்தை செலவு செய்யும் பழக்­கமும், தவிர்க்­கப்­பட வேண்டும். அதா­வது எதிர்­கா­லத்தில் வரக்­கூ­டிய பணத்தை மனதில் கொண்டு, செலவு செய்­வது கூடாது. அடுத்த சில மாதங்­களில் ஊதிய உயர்வு அல்­லது போனஸ் வரும் என தெரிந்தால், அதனால் உற்­சா­க­மாகி கூடு­த­லாக செல­விட தோன்­றலாம். முதலில் பணம் கைக்கு வரட்டும் அதன் பின் செல­வு­களை திட்­ட­மி­டலாம்.

சேமிப்பு எவ்­வ­ளவு: தள்­ளு­படி சலு­கை­களை விரும்­பா­த­வர்கள் யார்... ஆனால் தள்­ளு­ப­டியில் என்ன பிரச்னை என்றால், நாம் விலையை ஒப்­பிட்டு பார்த்து கிடைக்கும் சலு­கையை நினைத்து மகிழ்­கி­றோமே தவிர, ஒட்­டு­மொத்த நோக்கில் செலவை கருத்தில் கொள்­வ­தில்லை. 100 ரூபாய் பொருளில், 25 ரூபாய் தள்­ளு­படி என பார்ப்­பதை விட்டு, அந்த செலவு முதலில் தேவை­யா­னதா என, யோசிக்க வேண்டும்.

எப்­போது தேவை: தேவைக்கு அதி­க­மாக செலவு செய்ய வைப்­பதில், தள்­ளு­படி முக்­கிய பங்கு இருக்­கி­றது. ஒரு பொருள் குறைந்த விலையில் கிடைப்­ப­தாக சொல்­லப்­ப­டு­வதை பார்த்­த­துமே, அதை வாங்கி விடு­கிறோம். ஆனால் அந்த பொருள் தேவை­யா­னதா... என்­பதை பார்ப்­ப­தே­யில்லை. எனவே, வாங்க வேண்­டிய பொருட்­களின் பட்­டி­யலை தயார் செய்து, அதில் உள்ள பொருள் தள்­ளு­ப­டியில் கிடைத்தால் வாங்­கலாம்.

கடன் வலை: கையில் கிரெடிட் கார்டு இருக்கும் போது, இயல்­பா­கவே அதி­க­மாக வாங்கத் தோன்­றலாம். உபரி பணம் பற்றி ஏற்­படும் மிகை நம்­பிக்­கையே, இதற்கு காரணம். அதிலும் குறைந்­த­பட்ச தொகையை செலுத்தி, பின் பார்த்துக் கொள்­ளலாம் எனும் அணு­கு­முறை கடன் வலையில் சிக்க வைக்கும். கிரெடிட் கார்டை பயன்­ப­டுத்­தி­னாலும், அத்­தி­யா­வ­சி­ய­மான பொருளை தான் வாங்­கு­கி­றோமா... என, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சலுகைகள் கவனம்: பல நிறு­வ­னங்கள் உறுப்­பி­னர்­க­ளுக்­கான சலுகை திட்­டங்கள் மற்றும் போனஸ் புள்­ளி­களை வழங்­கு­கின்­றன. இவற்றை கூட்­டிக்­க­ழித்துப் பார்த்தால் செலவு கணக்கு தான் அதிகம் இருக்கும். நீங்கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பொருட்­க­ளாக இருந்தால் மட்­டுமே, உறுப்­பினர் சலு­கைகள் பற்றி யோசிக்க வேண்டும். அப்­போது கூட, ஒட்­டு­மொத்த செல­வு­களை கணக்கு போட்டு லாபம் இருக்­கி­றதா என, பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)