உலகளவில் இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்:2030ல் 24.50 கோடி பேர் உபரியாக இருப்பர்உலகளவில் இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்:2030ல் 24.50 கோடி பேர் உபரியாக ... ... ‘மருந்து ஆய்வில் முதலீடு செய்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்’ ‘மருந்து ஆய்வில் முதலீடு செய்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்’ ...
இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக உயரும்: ஐ.நா., கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2018
02:57

நியுயார்க்:‘இந்­தாண்டு, இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.2 சத­வீ­த­மாக உய­ரும்' என, ஐ.நா., ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.ஆசிய பசு­பிக் பிராந்­தி­யத்­திற்­கான, ஐ.நா.,வின், பொரு­ளா­தா­ரம் மற்­றும் சமூக ஆணை­யம், ஆசிய பசு­பிக் நாடு­க­ளின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.
அதில் கூறப்­பட்­டு உள்­ள­தா­வது:ஜி.எஸ்.டி., அம­லாக்­கம், வங்­கி­க­ளின் வாராக் கடன் சுமை, கார்ப்­ப­ரேட் நிறு­வன செயல்­பா­டு­களில் மந்­த­நிலை போன்­ற­வற்­றால், 2017ல், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6.6 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது. இது, 2016ல், 7.1 சத­வீ­த­மாக இருந்­தது.ஆனால், கடந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில், இந்­தியா, பாதிப்­பு­களில் இருந்து மீண்டு வரும் அறி­குறி தென்­பட்­டது. கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., நடை­மு­றைக்கு மாறி வரு­கின்­றன. அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்­கான, அர­சின் ஒதுக்­கீடு அதி­க­ரித்­துள்­ளது. வங்­கி­கள், வாராக் கடனை குறைத்து, நிதி­நி­லையை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன.இது­போன்ற கார­ணங்­களால், இந்­திய பொரு­ளா­தா­ரம், இந்­தாண்டு, 7. 2 சத­வீ­தம்; அடுத்த ஆண்டு, 7.4 சத­வீ­தம் என்ற அள­வில் உய­ரும்.வளர்ந்து வரும், ஆசிய – பசி­பிக் நாடு­க­ளின் ஒட்­டுமொத்த பொரு­ளா­தார வளர்ச்சி, 2017ல், 5.8 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 2016ல், 5.4 சத­வீ­த­மாக இருந்­தது.

இந்­தாண்டு, சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி மித­மான அள­விற்கே இருக்­கும். இந்த தாக்­கத்தை, இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்­ச்சி­யில் ஏற்­பட்­டுள்ள மீட்­சி­யும், இதர நாடு­க­ளின் நிலை­யான வளர்ச்­சி­யும் ஈடு செய்­யும். அத­னால், இந்­தாண்டு, ஆசிய பசி­பிக் நாடு­க­ளின் ஒட்­டு­மொத்த பொருளா­தார வளர்ச்சி, 5.5 சத­வீத அள­விற்கு இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)