கோடை மழை: பால் உற்பத்தி அதிகரிப்பு கோடை மழை: பால் உற்பத்தி அதிகரிப்பு ... பெண்கள் பாதுகாப்பு சாதனம் கண்டுபிடித்து ரூ.6.70 கோடி வென்ற இந்திய நிறுவனம் பெண்கள் பாதுகாப்பு சாதனம் கண்டுபிடித்து ரூ.6.70 கோடி வென்ற இந்திய நிறுவனம் ...
தித்திக்கும் சர்க்கரை; திணறும் ஆலைகள்! ஏற்றுமதி இலக்கில் கிடைக்குமா விலக்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2018
01:21

கோவை:-தமி­ழ­கத்­தில், தொடர்ந்து ஐந்து ஆண்­டு­க­ளாக பரு­வ­மழை பொய்த்­த­தால், சர்க்­கரை ஆலை­கள் கடும் சவால்­களை எதிர்­கொண்­டுள்ளன.
‘சர்க்­கரை ஏற்­று­மதி இலக்­கில் இருந்து, தமி­ழக ஆலை­க­ளுக்கு விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, தென்­னிந்­திய சர்க்­கரை ஆலை­களின் சங்க தலை­வர், பழனி ஜி பெரி­ய­சாமி வலி­யு­றுத்­தி­உள்­ளார்.
விலை சரிவு
மாநி­லம் முழு­வ­தும், 43 சர்க்­கரை ஆலை­கள் உள்ளன. இவற்­றின் மூலம், 2011- – 12ம் ஆண்­டில், 2.54 கோடி டன் கரும்பு அரவை செய்­யப்­பட்டு, சர்க்­கரை உற்­பத்தி செய்­யப்­பட்­டது.தொடர்ந்து, பரு­வ­மழை கார­ண­மாக, 2012 –- 13ல், 2.14 கோடி டன், 2013- – 14ல், 1.57 கோடி டன் என்ற அள­வில் அர­வைக்கு வந்த கரும்பு எண்­ணிக்கை குறைந்­தது. 2016ல் இரண்டு பரு­வ­ம­ழை­யும் பொய்த்­த­தால் வெறும், 65 லட்­சம் டன் கரும்பு மட்­டுமே கிடைத்­து உள்­ளது.
மூலப்­பொ­ருட்­கள் கிடைக்­கா­த­தால், தமி­ழக ஆலை­க­ளுக்கு உற்­பத்தி செலவு அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் சர்க்­கரை விலை, அனைத்து மாநி­லங்­க­ளி­லும் ஒரே மாதி­ரி­யா­கவே உள்­ளது. இந்­தி­யா­வுக்கு ஆண்­டுக்கு, 2.5 கோடி டன் சர்க்­கரை தேவை. ஆனால் தற்­போதே, பிற மாநில உற்­பத்தி பங்­க­ளிப்­பால், 1.10 கோடி டன் உபரி ஏற்­பட்டு, சர்க்­கரை விலை சரிந்­துள்­ளது.
உல­க­ள­வி­லும் சர்க்­கரை விலை சரிவை கண்­டுள்­ள­தால், தமி­ழ­கத்­தி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­வ­தில், ஆலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இழப்பு மட்­டுமே மிஞ்­சும்.தென்­னிந்­திய சர்க்­கரை ஆலை­களின் சங்க தலை­வர், பழனி ஜி பெரி­ய­சாமி கூறி­ய­தா­வது:தமி­ழ­கத்­தில், 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்­தாண்­டு­க­ளாக மழை பொய்த்­த­தால், கரும்பு உற்­பத்தி படிப்­ப­டி­யாக குறைந்­துள்­ளது. 2016ம் ஆண்டு, இரண்டு பரு­வ­ம­ழை­யும் பொய்த்து ஏற்­பட்ட கடும் வறட்சி கார­ண­மாக, 65 லட்­சம் டன் கரும்பு மட்­டுமே, ஆலை­க­ளுக்கு கிடைத்­துள்­ளது.
இத­னால், சர்க்­கரை உற்­பத்தி செலவு, பிற மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­க­மாக உள்­ளது.

அவகாசம்

பணி­யா­ளர்­கள் ஊதி­யம், கொள்­மு­தல், உற்­பத்தி செல­வி­னங்­கள் உயர்வு, சர்க்­கரை விலை சரிவு, வங்கி வட்டி ஆகி­ய­வற்­றால், சர்க்­கரை ஆலை உரி­மை­யா­ளர்­கள் திணறி வரு­கி­ன்றனர்.இதன் கார­ண­மா­கவே, இந்­திய அள­வில் கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிலு­வைத் தொகை, 22 ஆயி­ரம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

மத்­திய அர­சின் தற்­போ­தைய உதவி திட்ட அறி­விப்­பு­கள், தற்­கா­லிக தீர்­வாக மட்­டுமே அமை­யும்.மாறாக, சர்க்­கரை விலை­யில், 75 சத­வீ­தம் மட்­டும் கரும்­பின் விலை­யாக அளித்­தல் மற்­றும் உபரி கரும்பை எத்­த­னால் தயா­ரிப்­புக்கு பயன்­ப­டுத்­தும் விதத்­தில் ஊக்­க­ம­ளித்து, மத்­திய – மாநில அர­சு­கள் நிரந்­தர தீர்வை ஏற்­ப­டுத்த முன்­வர வேண்­டும்.

தமி­ழ­கத்­தில் இந்­தாண்டு உற்­பத்­தி­யா­கி­யுள்ள சர்க்­கரை, 6 லட்­சம் டன் மட்­டுமே. ஆனால், ஓராண்டு தேவை, 15 லட்­சம் டன். இச்­சூ­ழ­லில், சர்க்­கரை ஆலை­க­ளுக்­கான ஏற்­று­மதி இலக்­கில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்.அதிக உற்­பத்தி செய்­துள்ள மாநி­லங்­கள் மூலம், இலக்கை எட்ட அரசு நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும். வங்கி கடன்­களை திரும்ப வழங்க உரிய கால அவ­கா­சம்ஏற்­ப­டுத்தி தர வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)