மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் துவக்க திட்டம் மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் ... ... நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தள்­ளு­படி சலு­கை­களை நாடும் முன் கவ­னிக்க வேண்­டி­யவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
06:16

வர்த்­தக நிறு­வ­னங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க தள்­ளு­படி சலு­கை­களை முக்­கிய உத்­தி­யாக பயன்­ப­டுத்­து­கின்­றன. விழாக்­கா­லம் போன்­ற­வற்­றில் இந்த உத்­தி­கள் கூடு­த­லாக பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. எனி­னும் தள்­ளு­ப­டியை பார்த்த உடன் பொருட்­களை வாங்­கா­மல், நுகர்­வோர் என்ற முறை­யில் விழிப்­பு­ணர்­வு­டன் செயல்­பட வேண்­டும். தள்­ளு­படி தொடர்­பாக பொது­வாக அறிய வேண்­டி­யவை:

ஒரி­ஜி­னல் விலை என்ன?
வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு பொரு­ளின் மதிப்பை அதன் மூல விலை மற்­றும் பட்­டி­யல் விலையை வைத்தே கணக்­கி­டு­கின்­ற­னர். பல நேரங்­களில், மூல விலை உயர்த்­தப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யில் சலுகை விலை அறி­விக்­கப்­ப­டு­வ­தை­யும் அறிய வேண்­டும். 50 சத­வீத தள்­ளு­படி என்­பது ஈர்க்­க­லாம். ஆனால், அதுவே உண்மை விலை­யாக இருக்­க­லாம்.

இரட்டை தள்­ளு­படி உத்தி :
தள்­ளு­படி உத்­தி­கள் பெரும்­பா­லும் உள­வி­யல் அடிப்­ப­டை­யில் செயல்­ப­டு­கின்­றன. இரட்டை தள்­ளு­படி சலுகை இதற்கு உதா­ர­ணம். மொத்­த­மாக 40 சத­வீ­தம் தள்­ளு­படி அளிக்­கும் பொருளை விட 20 சத­வீத தள்­ளு­படி மற்­றும் கூடு­த­லாக 25 சத­வீத தள்­ளு­ப­டியை வாடிக்­கை­யா­ளர்­கள் ஈர்ப்பு மிக்­க­தாக கரு­து­கின்­ற­னர்.

இல­வச ஈர்ப்பு :
வாடிக்­கை­யா­ளர்­கள் மலிவு விலையை விட இல­வ­சத்தை கூடு­தல் ஈர்ப்பு மிக்­க­தாக கரு­து­வதை நிறு­வ­னங்­கள் அறிந்து வைத்­துள்­ளன. எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் 33 சத­வீத விலை குறைப்பை விட, 50 சத­வீத பொருள் இல­வ­சம் என்­பதை அதிக மதிப்­புள்­ள­தாக கரு­து­கின்­ற­னர். வாடிக்­கை­யா­ளர்­கள் பின்­னங்­களை புரிந்து கொள்­வ­தில் பல­வீ­ன­மாக இருக்­கின்­ற­னர்.

இதுவா? அதுவா?
பெரும்­பா­லும் ஒப்­பீடு நோக்­கி­லேயே வாடிக்­கை­யா­ளர்­களை பொருட்­களை தேர்வு செய்ய வைக்­கும் உத்தி கடை­பி­டிக்­கப்­ப­டு­கிறது. உதா­ர­ணத்­திற்கு 3,999 ரூபாய் விலை உள்ள ஷு அருகே 1,999 ரூபாய் விலை கொண்ட ஷூ வைக்­கப்­பட்­டு இ­ருந்­தால், இரண்­டா­வது ஷூவை பல­ரும் தேர்வு செய்­ கின்­ற­னர். முதல் ஷுவை விட இது மலி­வா­கத் ­தோன்­று­கிறது.

பார்த்­த­தும் வாங்­கு­வது :
தள்­ளு­படி அறி­விப்­பு­கள், உடனே வாங்க வேண்­டும் என்ற உந்­து­தலை ஏற்­ப­டுத்­த­லாம். இந்த உணர்வை தான் நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக் ­கொள்­கின்­றன. எனவே, பார்த்­த­தும் வாங்­கு­வதை விட, தேவை­யான பொருள் தள்­ளு­ப­டி­யில் கிடைத்­தால் வாங்­கு­வதே சரி­யாக இருக்­கும். வாங்­கு­வ­தற்கு, முன் உண்­மை­யான பலன் என்ன என, கேட்­டுக் ­கொள்ள வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)