எந்த கார­ணங்­க­ளுக்­காக  தங்­கத்­தில் முத­லீடு செய்­ய­லாம்? எந்த கார­ணங்­க­ளுக்­காக தங்­கத்­தில் முத­லீடு செய்­ய­லாம்? ... விவ­சா­யி­களின் வயிறு வாழ்த்­தும்! விவ­சா­யி­களின் வயிறு வாழ்த்­தும்! ...
வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
00:31

வர்த்­த­கப் போர்­களின் காலத்­தில் நம் முத­லீ­டு­களை எப்­படி வழி­ந­டத்­து­வது? இந்­தியா, இந்த வர்த்­தக போர்­களில் பங்­கேற்­கா­மல் தன் நிலையை தக்க வைத்­துக் கொள்ள இய­லுமா? ஒரு­வேளை, இந்­தி­யா­வும் இந்த போருக்­குள் இழுக்­கப்­பட்­டால், நாம் எப்­படி பாதிக்­கப்­ப­டு­வோம்? அத்­த­கைய சூழ்­நி­லை­யில் நம் முத­லீ­டு­களை காப்­பது எப்­படி?
அடிப்­ப­டை­யில், அமெ­ரிக்கா தொடுக்­கும் வர்த்­த­கப் போர்­கள்­தான் அதி­கம். உலக வர்த்­த­கத்­தில், ஒரு நுகர்வு நாடாக மட்­டுமே இருந்த அமெ­ரிக்கா, தன் உற்­பத்தி தொழில்­கள் அழி­யும் சூழ்­நி­லை­யில், அவற்றை மீண்­டும் தூக்கி நிறுத்­தும் முயற்­சியே இந்த போர்­கள்.வெளி­யில் இருந்து வரும் இறக்­கு­ம­தி­கள், உள்­நாட்டு தொழில்­களை நலி­வ­டை­யச் செய்­யும்­பட்­சத்­தில், அந்த இறக்­கு­ம­தி­களின் விலை கூடும்­வண்­ணம் செய்தோ, அல்­லது இறக்­கு­ம­தியை தடுத்தோ, உள்­நாட்டு தொழில்­க­ளுக்கு ஊக்­கம் கொடுக்­கும் கொள்­கை­கள் உல­க­ள­வில் கையில் எடுக்­கப்­ப­டு­கின்றன.
யார் வேண்­டு­மா­னா­லும், எங்கு வேண்­டு­மா­னா­லும், எதை வேண்­டு­மா­னா­லும் ஏற்­று­மதி செய்த, பிரீ­டி­ரேட் உல­கம் மாறி­விட்­டதை முத­லில் ஏற்­போம். அப்­படி செய்து வளர்ந்த நிறு­வ­னங்­கள், இனி­வ­ரும் காலங்­களில் தொடர்ந்து, வளர்ச்சி பெருக புதிய சந்­தை­களை தேட வேண்­டிய தரு­ணம் இது.சீனா போல பெரும் அள­வில் உற்­பத்தி கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­திய நாடு­கள் இந்த போர்­க­ளால் வெகு­வாக பாதிக்­கப்­படும்.
ஆனால், தன் நுகர்வு அள­வில் மட்­டும் உற்­பத்தி செய்­யும் நாடு­கள், இத­னால் அதி­கம் பாதிக்­கப்­ப­டாது. அது­வும், வெளி­யில் இருந்து வரும் இறக்­கு­ம­தி­களை தடுத்து மட்­டுமே, தன் உள்­நாட்டு தொழில்­களை பாது­காக்க முயற்­சிக்­கும் நாடு­கள், இந்த போர்­களை ஓர­ளவு எதிர்­கொள்ள முடி­யும்.இந்­தியா இந்த போர்­களில் இருந்து முழு­வ­தும் தப்­பிக்க முடி­யாது.
உதா­ர­ணத்­திற்கு, ஹார்லி டேவிட்­சன் என்ற உயர்­விலை இரு­சக்­க­ர­வா­க­னத்­தின் மீது, நம்­நாட்­டின் இறக்­கு­மதி வரியை, அமெ­ரிக்க அதி­பர் கடு­மை­யாக எதிர்த்­தார். இதன் நீட்­சி­யாக, அந்த நிறு­வ­னம் அமெ­ரிக்­கா­விற்கு வெளி­யில் உற்­பத்தி செய்­யக்­கூ­டும். ஒரு­வேளை இந்­தி­யா­வில், உற்­பத்தி செய்­தால், அது உள்­நாட்­டில் இதே ரக வாக­னங்­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­களை பாதிக்­க­லாம்.
சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­களை குறைக்க பல நாடு­கள் தீவி­ரம் காட்­டு­கின்றன. பொருள்­வா­ரி­யான, வரி­கள் மற்­றும் தடை­கள் மூலம் சந்தை நுழைவு இறுக்­கப்­ப­டு­கிறது. இது அந்த உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு சாத­க­மாக முடி­ய­லாம்.இதற்கு இந்­திய ஸ்டீல் உற்­பத்தி கொள்­கை­கள் நல்ல உதா­ர­ணம்.
சீனா­வோடு, இந்­தியா தொடர்ந்து இரு­த­ரப்பு வர்த்­தக பேச்சு மூலம் பல சலு­கை­களை பரி­மாறி வரு­கிறது. சீனா தொடர்ந்து நமக்கு ஏற்­று­மதி செய்ய, நம்­நாட்­டில் இருந்­தும் பல பொருட்­களை இறக்­கு­மதி செய்ய சம்­ம­தம் தரு­கிறது.சர்க்­கரை, சீனா­வில் தட்­டுப்­பாட்­டில் இருக்­கும் பொருள். இந்­தி­யா­வில் இருந்து வரும் சர்க்­க­ரையை வாங்க, சீனா ஆர்­வம் காட்­டு­கிறது.
பருத்­தி­யும் இந்த வகை­யில் சேரும். உள்­நாட்டு தொழில்­க­ளுக்கு, இத்­த­கைய முடி­வு­க­ளால் சாதக பாத­கம் இரண்­டும் ஏற்­ப­ட­லாம். சர்க்­கரை ஆலை­கள் பயன் அடை­யும். ஆனால், ஜவு­ளித் துறை பாதிக்­கப்­ப­ட­லாம். ஆனால், விவ­சா­யி­க­ளுக்கு இந்த இரண்டு முயற்­சி­களும் நன்மை பயக்­கும்.வர்த்­தக முடி­வு­களை, ஒவ்­வொன்­றாக சீராய்வு செய்து, முத­லீட்டு பார்­வை­களை வகுத்து பழக வேண்­டிய நேரம் இது. எதை­யும் கண்­மூ­டித்­த­ன­மான அனு­மான அடிப்­ப­டை­யில் பார்ப்­பதை தவிர்ப்­பது நல்­லது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)