பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தம் மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
07:05

கச்சா எண்ணெய்:
அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து ஏழா­வது வார­மாக சரி­வி­லும் மற்­றும் ஐரோப்­பாவை மையப்­ப­டுத்தி வர்த்­த­க­மா­கும், பிரென்ட் கச்சா எண்­ணெய், மூன்­றா­வது வார­மா­க­வும் சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது.இவ்­விலை சரி­வுக்கு, தேவைக்கு அதி­க­மான உற்­பத்தி கார­ண­மா­கும். அமெ­ரிக்க சந்­தை­யில் ஏற்­பட்­டுள்ள தேக்­கம் மற்­றும் நில­வி­வ­ரும் வர்த்­தக மோதலால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மந்த வளர்ச்­சி­யும் கார­ணம் ஆகும்.

ஆசிய சந்­தை­யில், சீனா மற்­றும் இந்­தியா அதிக அள­வில் கச்சா எண்­ணெய் மற்­றும் பெட்­ரோ­லிய பொருட்­களை இறக்­கு­மதி செய்­யும் நாடு­கள் ஆகும். உல­கின் மக்­கள் தொகை மிகுந்த இந்த இரண்டு நாடு­களும், எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில் பெரும்­பங்கு வகிக்­கின்றன.

அதி­கப்­ப­டி­யான தொழில் துறை வளர்ச்சி மற்­றும் ஏற்­று­மதி மிகுந்த நாடு சீனா­வா­கும். கடந்த சில மாதங்­க­ளாக இந்­நாட்­டுக்­கும், அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே நடந்து வந்த வர்த்­தக மோதல் கார­ண­மாக, இரு நாடு­களும் போட்டி போட்டு இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு அதி­கப்­ப­டி­யான வரி­களை விதித்து வரு­கின்றன.இத­னால், சீன ஏற்­று­மதி பாதிக்­கும் என்ற அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, சீனா­வின், ஜி.டி.பி., குறை­யும் என்ற கண்­ணோட்­டத்­தில், கச்சா எண்­ணெய் விலை சரிந்து வரு­கிறது.

உல­கின் கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில் மிகப் பெரிய நாடாக, முத­லில் சவுதி அரே­பி­யா­வும், இரண்­டா­வ­தாக ரஷ்­யா­வும் உள்ளன. கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற, ஒபெக் பொதுக் கூட்­டத்­தில், தின­சரி உற்­பத்­தியை, 1 லட்­சம் பேரல் உயர்த்­து­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதன் பின்­னரே விலை சரிவு நிகழ்ந்­தது.கடந்த புதன் கிழமை அன்று வெளி­வந்த, அமெ­ரிக்கா எண்­ணெய் இருப்பு விப­ரம், எதிர்­பார்த்­த­தை­விட, 6.8 மில்­லி­யன் பேரல் அதி­க­ரித்­தி­ருந்­தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்­டி­லும், இது உச்ச நிலை­யா­கும். மேலும், அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் அமெ­ரிக்க ஆழ்­கு­ழாய் கிண­று­களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த வாரத்­தில், தின­சரி எண்­ணெய் உற்­பத்தி, 1 லட்­சம் பேரல் அதி­க­ரித்து, மொத்த உற்­பத்தி, தின­சரி, 10.9 மில்­லி­யன் பேரல் என்ற நிலை­யில் உற்­பத்தி பெருகி வரு­கிறது.அதி­க­ரித்து வரும் உற்­பத்தி மற்­றும் தேவை குறை­வால் ஏற்­பட்­டுள்ள இருப்பு அதி­க­ரிப்பு போன்­ற­வற்­றால், விலை ஏற்­றம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்டு, விலை சரிந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,565 4,440 4,635 4,750என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 64.55 63.10 65.90 67.35


தங்கம், வெள்ளி:
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம், 3 சத­வீ­தம் சரிந்து வர்த்­த­கம் ஆனது. 2017ம் ஆண்டு மே மாதத்­திற்கு பின் ஏற்­பட்ட மிகப்­பெரிய, தொடர்ச்­சி­யான சரிவு இது­வே­யா­கும்.பிளாட்­டி­னம் மற்­றும் பலே­டி­யம் போன்ற ஆப­ரண கனி­மங்­களின் விலை­யும் சரிந்து வரு­கிறது. அமெ­ரிக்க டாலர் மதிப்பு, சர்­வ­தேச சந்­தை­யில், 13 மாதங்­களில் உச்­சியை தொட்­ட­தன் விளை­வாக, இந்த சரிவு நிகழ்ந்து வரு­கிறது.அமெ­ரிக்கா-- – துருக்கி ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக, துருக்கி நாண­ய­மான லிரா, கடு­மை­யான சரிவை சந்­தித்­தது. இதன் கார­ண­மாக, டால­ரின் மதிப்பு உயர்ந்­தது.

மேலும், கடந்த சில மாதங்­க­ளாக நிலவி வரும், அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான மோதல்­களும், அத­னால் ஏற்­பட்ட வர்த்­த­கத் தடை­கள் கார­ண­மா­க­வும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரிந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.தங்­கம் விலையை காட்­டி­லும், வெள்­ளி­யின் விலை சரிவு சற்று அதி­க­மாக காணப்­பட்­டது. தற்­போ­தைய வெள்ளி விலை சரிவு, 2014ம் ஆண்டு பிப்­ர­வ­ரிக்கு பின் ஏற்­பட்ட மிகப்­பெரிய சரி­வா­கும்.

ஐரோப்­பிய பார்­லி­மென்­டில், கடந்த செவ்­வாய் அன்று நடை­பெற்ற கூட்­டத்­தில், வங்­கி­கள் தங்­கம் வர்த்­த­கத்­தில் ஈடு­பட அனு­ம­தித்து, வர்த்­தக கொள்­கை­களை தளர்த்தி அறி­விக்­கப்­பட்­டது.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, கடந்த வாரம், வர­லாறு காணாத வீழ்ச்சி அடைந்­தது. ஒரு அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு, 70 ரூபாயை கடந்து வர்த்­த­கம் ஆகிறது. இதன் கார­ண­மாக, சர்­வ­தேச சந்­தை­யில் தங்­கத்­தின் விலை குறைந்­தா­லும், உள்­நாட்டு சந்­தை­யில் தங்­கத்­தின் விலை குறை­யா­மல், மாறாக சிறி­த­ளவு அதி­க­மா­கி­யது குறிப்­பி­டத்­தக்­கது.கடந்த சில மாதங்­க­ளா­கவே, சர்­வ­தேச சந்­தை­யில் விலை குறைந்­தும், நம் நாட்­டின் நாண­யத்­தின் மதிப்பு குறை­வால், உள்­நாட்டு சந்­தை­யில் விலை குறை­யா­மல் இருந்து வரு­கிறது.


தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,170 28,800 29,530 29,810காம்எக்ஸ் (டாலர்) 1,165 1,140 1,200 1,218


வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 36,680 36,300 36,900 37,420காம்எக்ஸ் (டாலர்) 14.60 14.35 14.85 15.00


செம்பு:
கடந்த சில வாரங்­க­ளா­கவே, செம்பு விலை குறைந்து வரு­கிறது. அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­தது, இதற்கு கார­ணம் ஆகும். மேலும், தற்­போது நிலவி வரும் சீனா – அமெ­ரிக்கா இடை­யே­யான வர்த்­தக மோதல்­களும், அத­னால் ஏற்­பட்­டுள்ள ஏற்­று­மதி பாதிப்பு கார­ண­மா­க­வும் தொழிற்­சாலை கனி­மங்­க­ளான செம்பு, இரும்பு, துத்­த­நா­கம், கார்­பன் போன்ற அனைத்து தொழிற்­சாலை மூல­த­னப் பொருட்களின் விலை­யும் சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது.

மேலும், லண்­டன் பொருள் வணிக சந்­தை­யில், தொழிற்­சா­லை­களின் குறி­யீட்டு எண், 2015ம் ஆண்­டுக்கு பின், முதன்­மு­றை­யாக, 3 சத­வீ­தத்­துக்கு மேல் சரிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.செம்பு சுரங்­கத் தொழி­லா­ளர்­கள் வேலை நிறுத்­தத்­தில் சுமு­க­மான பேச்சு நடை­பெ­றும் என்ற சூழ­லும், வேலை­நி­றுத்­தம் கைவி­டப்­பட்டு இயல்பு நிலைக்கு திரும்­பும் என்ற எதிர்­பார்ப்­பும், விலை சரி­வுக்கு கார­ண­மாக அமைந்­தன.

உல­க­ள­வில், செம்பு, அதிக அள­வில் தொழிற்­சா­லைக்கு பயன்­ப­டுத்­தும் நாடு சீனா­வா­கும். அந்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­வைத்து, கமா­டிட்டி பொருட்­களின் விலை மதிப்பு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. தற்­போ­தைய சூழ­லில், நாட்­டின், ஜி.டி.பி., வளர்ச்சி குறை­யும் என்ற அச்­சம் கார­ண­மா­க­வும் விலை சரிந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 407.20 403.50 410.00 414.30

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)