குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி குறைந்ததுகுறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ... ... ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு ...
அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
07:09

கடந்த வாரம், டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, 70 ரூபாய்க்கு மேல் சரிந்த போது, பல்­வேறு கார­ணங்­கள் சொல்­லப்­பட்­டன. வழக்­க­மாக உள்­நாட்­டுப் பிரச்­னை­களே முன்­வைக்­கப்­பட்ட நிலை­யில், இம்­முறை புதிய பெயர் ஒன்று உச்­ச­ரிக்­கப்­பட்­டது. அது, துருக்கி... துருக்கி, ‘லிரா­’வுக்­கும், இந்திய ரூபாய்க்­கும் என்ன சம்­பந்­தம்?

முத­லில் துருக்­கி­யை­யும், அதன் அர­சி­யல் பொரு­ளா­தா­ரத்­தை­யும் புரிந்­து­கொண்­டால் தான் பிரச்­னை­யின் ஆழம் புரியும். ஆசியா மற்­றும் ஐரோப்பா கண்­டங்­க­ளுக்கு இடையே இருக்­கும் நாடு, துருக்கி; அதன் அதி­பர், எர்­து­வான்; அதன் நாண­யம், லிரா.எர்­து­வான், அமெ­ரிக்க தாரா­ள­மய பொரு­ளா­தா­ரத்தை விரும்­பா­த­வர். அது­வும், 2008 பொரு­ளா­தார தளர்ச்­சிக்­குப் பின், முற்­றி­லும் மாறி­விட்­டார். தமது நாட்­டில் அனைத்து வச­தி­க­ளை­யும் அரசே செய்ய வேண்­டும் என்ற எண்­ணத்­தில் இருப்­ப­வர். உயர உய­ர­மான கட்­ட­டங்­களை நாடெங்­கும் எழுப்­பத் துவங்­கி­னார். அத­னால் ஏற்­பட்ட பொரு­ளா­தா­ரச் சரிவு தான், துருக்­கியை இப்­போது சிக்­க­லில் ஆழ்த்­தி­உள்­ளது.

துருக்­கி­யின் நடப்­புக் கணக்கு பற்­றாக்­குறை ஏக­மாக எகி­றி­விட்­டது. பண­வீக்­கமோ, 15.6 சத­வீ­தம். எர்­து­வா­னின் தவ­றான பொரு­ளா­தார அணு­கு­மு­றை­யால், அந்த நாட்­டில் ஏகப்­பட்ட சிக்­கல்.

போர் ஆயு­த­ம் :
இதன் தொடர்ச்­சி­யாக துருக்­கி­யின் நாண­ய­மான, லிரா பட­ப­ட­வென சரிந்­து­விட்­டது. கடந்த ஜன­வரி முதல், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான லிரா­வின் மதிப்பு, 40 சத­வீத அளவுக்கு சரிந்­து­விட்­டது. உள்­நாட்­டில் கடும் பொரு­ளா­தார நெருக்­கடி. வட்டி விகி­தத்தை உயர்த்த வேண்­டிய நிலை. ஆனால், எர்­து­வானோ, எது­வும் செய்ய மாட்­டேன் என்கி­றார். சொல்­லப் போனால், அந்த நாட்­டில் இயங்­கும் வங்­கி­கள் எல்­லாம் அன்னிய முத­லீட்­டி­லேயே இயங்­கு­கின்றன. எந்த வள­ரும் நாடு­க­ளோடு ஒப்­பிட்­டா­லும், துருக்­கி­யின் கடன் அளவு மிக மிக அதி­கமே.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வோடு துருக்­கிக்கு நல்ல உற­வும் இல்லை; அதி­பர் டொனால்டு டிரம்­பும் சும்மா இல்லை. துருக்­கி­யில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத்­தின் மீது வரி விதித்­தார். அது, ஏற்­க­னவே பாதிப்­பைச் சந்­தித்­துக் கொண்­டி­ருந்த துருக்­கிக்கு மேலும் ஓர் அடி.இந்­நி­லை­யில், ஒரு பாதிரி­யாரை துருக்கி அரசு கைது செய்து வைத்­துள்­ளது. அமெ­ரிக்கா பாதி­ரி­யா­ரான ஆண்ட்ரூ பரன்­சன் என்­ப­வர், துருக்­கி­யில் இருக்­கும் ஓர் அர­சி­யல் குழு­வு­டன் தொடர்­பில் இருந்­தார் என்று துருக்கி அரசு கைது செய்து, இரண்டு ஆண்­டு ­க­ளாக விசா­ரித்து வரு­கிறது. அவரை விடு­தலை செய்ய முடி­யாது என்று அந்­நாட்டு நீதி­மன்றமும் தெரி­வித்து விட்­டது.

வெகுண்­டெ­ழுந்­து­விட்­டார் டிரம்ப். உடனே, உருக்கு மற்றும் அலு­மி­னி­யம் மீதான வரியை இரட்­டிப்­பாக்­கு­கி­றேன் என, தடா­ல­டி­யாக அறி­வித்­தார்; எர்­து­வா­னும் சும்மா இல்லை. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்கு­மதி செய்­யப்­படும் கார்­கள், பானங்­கள், புகை­யிலை மீதான வரியை உயர்த்தி பதி­லடி கொடுத்­தார்.இது­நாள் வரை போர் என்றால், அது ஆயு­தங்­க­ளோடு நடை­பெற்­றுக்­கொண்டு இருந்­தது. முதல்­மு­றை­யாக தற்­போது அமெ­ரிக்கா, ‘வர்த்த­கத்தை’யே ஒரு போர் ஆயு­த­மாக மாற்­றி­விட்­டது. வரி­களை உயர்த்தி, அடுத்த நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தை நசுக்­கு­வது புது அணு­கு­முறை.

இதற்­கெல்­லாம் நான் அஞ்­ச­மாட்­டேன், என் மக்­கள் என்­னோடு இருக்­கின்­ற­னர் என்று வீர வச­னம் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார் எர்­து­வான். இதன் பாதிப்பை அவ­ரது நாடு அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கிறது.ஒரே நாளில் அமெ­ரிக்க டால­ருக்கு இணை­யான துருக்­கி­யின் லிரா, 16 சத­வீ­தம் வரை சரிந்­தது. அமெ­ரிக்­கா­வோடு மோதல் என்­ற­வு­ட­னேயே, சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களும், நாண­யங்­களும் வீழ்ச்­சி­யைச் சந்­திக்­கத் துவங்­கின.இங்­கி­ருந்து தான் நம்­மு­டைய ரூபாய் மதிப்பு வீழ்ச்­சி­யும் துவங்­கு­கிறது.துருக்­கி­யோடு வர்த்­தக உறவு பூண்­டுள்ள தெற்­கா­சிய நாடு­களில் இந்­தி­யா­வும் ஒன்று. சீனா, தென் கொரியா, ஜப்­பான், மலே­ஷியா, வியட்­னாம் ஆகி­யவை பிற நாடு­கள்.

பல பொருட்­களை இந்­தி­யா­வி­ட­மி­ருந்து இறக்­கு­மதி செய்து கொள்­கிறது துருக்கி. லிரா மதிப்பு வீழ்ச்சி அடை­யும் போது, பொருட்­களின் விலை உயர்ந்­து­வி­டும். அத­னால், வர்த்­தக பற்­றாக்­குறை துருக்­கிக்கு ஏற்­ப­ட­லாம். இரு தரப்பு வர்த்­த­க­மும் இத­னால் வீழ்ச்­சி­யைச் சந்­திக்­க­லாம்.இதை விட முக்­கி­ய­மாக, லிரா­வின் வீழ்ச்சி என்­பது, அந்த நாட்­டு­டன் மட்­டும் நின்­று­வி­டாது. அது, வர்த்­தக தொடர்பு கொண்­டுள்ள இதர ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் பர­வ­லாம். சீட்­டுக்­கட்டு சரி­வது போல் நாணய மதிப்பு வீழ்ச்சி பர­வ­லா­க­லாம்.

மேலும், இத்­த­கைய வீழ்ச்சி கார­ண­மாக, பல வள­ரும் நாடு­களில் முத­லீடு செய்­துள்ள பெரிய முத­லீட்டு பண்­டு­கள், வங்­கி­கள், தனி­ந­பர்­கள் தங்­க­ளது முத­லீ­டு­க­ளைத் திரும்ப எடுத்­துக்­கொண்டு போய்­வி­ட­லாம். இத­னால், அங்கே பொருளா­தா­ரச் சரி­வுக்கு வாய்ப்பு ஏற்­பட்­டு­வி­ட­லாம். லிரா மதிப்பு வீழ்ச்­சி­யால், ரூபாய் சரிவு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், நாம் வெளி­நாட்­டில் இருந்து வாங்­கும் கச்சா எண்­ணெய்க்கு கொடுக்­கும் தொகை உயர்ந்­து­வி­டும். இத­னால் தான், சென்ற வாரம் பெட்­ரோல் விலை தமி­ழ­கத்­தில், 80 ரூபா­யை­யும் கடந்­தது. இத்­த­னைக்­கும் கச்சா எண்­ணெய் விலை ஓர­ள­வுக்கு குறைந்­தி­ருந்­தும், பெட்­ரோல், டீசல் விலை அதி­க­ரித்­த­தற்கு இதுவே கார­ணம்.

அணு­கு­மு­றை­ ;
உல­கமே தற்­போது வேறொரு யதார்த்த நிலைக்கு மாறிக்­கொண்டு இருக்­கிறது. ‘கத்­தி­யின்றி ரத்­த­மின்றி யுத்­த­மொன்று வரு­குது’ என்ற, நாமக்­கல் கவி­ஞர், ‘சத்­தி­யா­கி­ர­கத்தை’ முன்­வைத்­துப் பாடி­னார். ஆனால் இன்று, அதே பாடல் டிரம்­புக்­கும், உலக பொரு­ளா­தா­ரத்­துக்­கும் வெகு­வா­கப் பொருந்­து­கிறது.அவர், கத்­தி­யின்றி ரத்­த­மின்றி, வர்த்­த­கத்­தையே கூர் ஆயு­த­மா­கப் பயன்­ப­டுத்தி, நாடு­களை அச்­சங்­கொள்ள வைக்­கி­றார். தற்­காப்­பு­வா­தம் என்ற பெய­ரில், ‘அமெ­ரிக்­காவே முதல்’ என்ற கோஷத்­தின் அடிப்­ப­டை­யில் செயல்­பட்டு வரு­ப­வர் டிரம்ப்.

அத­னால், அமெ­ரிக்கா மட்­டும் சுபிட்­ச­மாக வாழ்ந்­து­விட முடி­யும் என்று கரு­தி­னால், அது பிழை­யான அணு­கு­மு­றை­யா­கவே ஆகும்.ஏனெ­னில், தாரா­ள­ம­ய­மாக்­கல், திறந்த பொரு­ளா­தா­ரம் என்ற பாதையை வகுத்­துக் கொடுத்­ததே அமெ­ரிக்கா தான்! அது, இப்­போது யு-டர்ன் அடித்து, தான், தனக்கு என்று பாது­காப்­பு­வா­தத்­துக்­குள் புகும்­போது, இதர நாடு­கள் அனைத்­தும் திண்­டா­டு­கின்றன. சர்­வ­தேச பொரு­ளா­தார வலைப்­பின்­னலே சிக்­க­லா­கிறது. அனை­வ­ருக்­கும் வளர்ச்சி என்ற பரந்த மனப்­பான்மை ஒன்றே, இன்­றைய கால­கட்­டத்­தின் தேவை. சுருங்­கிப் போவ­தால், வலி­களே மிகும். இதை யார் அமெ­ரிக்­கா­வுக்­குச் சொல்­வது?

– ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)