‘ஜிம் – 2’ கையேட்டில் 12 துறைகளுக்கு முன்னுரிமை‘ஜிம் – 2’ கையேட்டில் 12 துறைகளுக்கு முன்னுரிமை ... சிறப்பாக செயல்படும் ‘சாகர்மாலா’ திட்டங்கள் சிறப்பாக செயல்படும் ‘சாகர்மாலா’ திட்டங்கள் ...
பங்கு வெளியீட்டில் மூன்று நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
23:45

புது­டில்லி : கோல்­கட்­டாவை சேர்ந்த, பிர­பல பிஸ்­கட் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, அன்­மோல் இண்­டஸ்ட்­ரீஸ், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்­டிக்­கொள்ள, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ அனு­மதி வழங்கி உள்­ளது.

அன்­மோல் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 750 கோடி ரூபாயை திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னம், வரு­வாய் அடிப்­ப­டை­யில், நாட்­டின் நான்­கா­வது பெரிய பிஸ்­கட் நிறு­வ­ன­மா­கும். மேலும், கேக் விற்­ப­னை­யில் வரு­வாய் ஈட்­டும் நிறு­வ­னங்­களில், ஐந்­தா­வது பெரிய நிறு­வனமு­மா­கும். இந்­தி­யா­வின் வடக்கு மற்­றும் கிழக்கு மாநி­லங்­களில் வலு­வாக இருக்­கும் நிலை­யில், தற்­போது, தெற்கு மற்­றும் மேற்கு மாநி­லங்­க­ளி­லும், காலுான்ற திட்­ட­மி­டு­கிறது. கடந்த, 2016 -– -17 நிதி­யாண்­டில், இந்­நி­று­வ­னத்­தின் நிகர வரு­மா­னம் 1,240 கோடி ரூபாய் ஆகும். நிகர லாபம், 72 கோடி ரூபாய்.

பிளேர் ரைட்­டிங்:
எழு­து­பொ­ருட்­கள் நிறு­வ­ன­மான, பிளேர் ரைட்­டிங் இண்­டஸ்ட்­ரீஸ், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கேட்டு, செபி­யி­டம் விண்­ணப்­பித்­து உள்­ளது. இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூல­மாக, 450 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதில், 330 கோடி ரூபாய்க்கு புதிய பங்­கு­களை வெளி­யிட உள்­ளது.

பங்­கு­ வெ­ளி­யீட்­டின் மூல­மாக திரட்­டப்­படும் நிதி­யில், 132.88 கோடி ரூபாயை இயந்­தி­ரங்­கள் வாங்­க­வும்; 69.51 கோடி ரூபா­யில் குஜ­ராத்­தில், புதிய ஆலைக்­கான கட்­ட­டங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கா­க­வும்; 15 கோடி ரூபாயை கடன்­களை அடைக்­க­வும்; மீதியை மூல­தன செல­வு­க­ளுக்­கா­க­வும் செல­விட முடிவு செய்­துள்­ளது. இந்­நி­று­வன பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஆக்­சிஸ் கேப்­பிட்­டல் மற்­றும் எடல்­வைஸ் பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­கின்றன.

ஆனந்த் ரதி
நிதிச் சேவை­கள் வழங்­கும் நிறு­வ­ன­மான, ஆனந்த் ரதி வெல்த் சர்­வீ­சஸ் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக செபி­யி­டம் விண்­ணப்­பித்­து உள்­ளது. இந்­நி­று­வ­னம், 425 கோடி ரூபாயை, பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்ட உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இதில், 125 கோடி ரூபாய்க்கு புதிய பங்­கு­ களும், 300 கோடி ரூபாய்க்கு நிறு­வ­னர்­களின் பங்­கு­களும் வெளி­யி­டப்­பட உள்ளன.

ஈக்­யு­ரஸ் கேப்­பிட்­டல் மற்­றும் ஜெப்­ரீஸ் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­கள், இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை மேற்­கொள்­கின்றன. திரட்­டப்­படும் தொகை, மென்­பொ­ருள் மற்­றும் தொழில்­நுட்­பங்­க­ளுக்­கா­க­வும், மும்பை அலு­வ­ல­கத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டுத்­தப்­படும் என, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)