புதிய ஆலையை துவக்கியது, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் புதிய ஆலையை துவக்கியது, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் ...  ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கைந­ழு­வு­கி­றதா கார் கனவு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2018
00:47

கார் விற்­பனை, இரு­சக்­கர வாகன விற்­பனை இரண்டு மாதங்­களில் கடு­மை­யா­க சரிந்­துள்­ளது.
ஏன் இந்­தச் சரிவு? இதனை எப்­ப­டி புரிந்­து ­கொள்­வது?

ஒரு மனி­தர் இரு­சக்­கர வாக­னத்­தையோ, நான்கு சக்­கர வாக­னத்­தையோ வைத்­தி­ருப்­பது, பல செய்­தி­க­ளைச் சொல்­லும். தேவை கருதி, ஒரு­வர் வாக­னம் வைத்­தி­ருப்­பது இயல்­பா­னது. ஆனால், அதற்­கான நிதி எங்­கி­ருந்து வரு­கிறது, எப்­படி வரு­கிறது என்­ப­தில் தான், பொரு­ளா­தா­ரம் அடங்­கி­யி­ருக்­கிறது.

மொத்த பணத்­தை­யும் கொடுத்து, கார் வாங்­கு­ப­வர்­கள் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. ஒரு­சில பணக்­கா­ரர்­கள் வேண்­டு­மா­னால், தங்­கள் நிறு­வ­னத்­தின் பெய­ரால் முன்­ப­ணம் கொடுத்து கார் வாங்­க­லாம்.பெரும்­பா­லோர், வங்கிக் கடன் அல்­லது வங்­கி­சாரா நிதி நிறு­வ­னக் கட­னில் தான் கார் வாங்­கு­கின்­ற­னர். டூ -– வீலர் வாங்­கு­ப­வர்­க­ளுக்­கும், இது பொருந்­தும்.

கையில் முழு மூல­த­னம் இல்­லா­மல், மாதத் தவணை கட்­டிக்­கொண்டு, வாக­னம் வாங்­கு­வ­தற்கு துணிச்­சல் வேண்­டும். அதா­வது, நிரந்­தர வேலை இருக்­க­ வேண்­டும். வரு­வா­யில் மிச்­சம் பிடிக்க வாய்ப்பு இருக்­க­வேண்­டும். அல்­லது ஈட்­டும் வரு­வா­யில் ஒரு பகு­தியை, மாதத் தவ­ணை­யாக கட்­டு­வ­தற்கு ஒதுக்­கக்­கூ­டிய அள­வுக்­கே­னும் வரு­வாய் இருக்­க­ வேண்­டும்.
இதற்கு மேல், அந்த வாக­னத்­துக்கு பெட்­ரோல் அல்­லது டீசல் ஊற்றி, பரா­ம­ரிப்­புச் செல­வு­களை ஏற்­றுக்­கொண்டு, பார்க்­கிங் கட்­ட­ணம் கட்டி வைத்­துக் ­கொள்ள வேண்­டும். இது, மாதா­மா­தம் தொட­ரும் செலவு. இதனை மேற்­கொள்­வ­தற்­கும், போது­மான அளவு வரு­வாய் இருக்க வேண்­டும்.

இப்­ப­டி­யெல்­லாம் செய்து, பெரு­மை­மிகு கார் ஓனர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்­தி­யா­வில் பெருகி வரு­கிறது. இதுவே சுபிட்­சத்­தின் அடை­யா­ள­மாக, வளர்ச்­சி­யின் சின்­ன­மா­க புரிந்­து­கொள்­ளப்­ப­டு­கிறது. இதன்­மூ­லம், பல்­வேறு நிலை­களில் நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும் வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கு­வ­தால், வளர்ச்­சிக் குறி­யீடு­களில், கார் விற்­ப­னை­யும் ஓர் அங்­க­மாக இருக்­கிறது.

இந்­தி­யா­வில் பண­மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்­ட தரு­ணங்­களில், எதிர்க்­கட்­சி­கள், கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தன.தொழில் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறப்­பட்­டது. இதற்கு மறுப்பு வாத­மாக முன்­வைக்­கப்­பட்ட விஷ­யம், இரு­சக்­கர, நான்கு சக்­கர வாக­னங்­க­ளின் தொடர் விற்­பனை வளர்ச்­சி­ தான்.

இந்த நிலை, கடந்த இரண்டு மாதங்­களில் திடீ­ரென மாறி­யுள்­ள­து ­தான், கவ­லை­ ரே­கையை
ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.பண்­டி­கை காலங்­க­ளில்­தான் வாகன விற்­பனை அதி­க­ரிக்­கும். முக­வர்­கள், கூடு­தல் எண்­ணிக்­கை­யில் வாக­னங்­களை தரு­வித்து வைத்­தி­ருப்­பர்­. கூடு­தல் சலு­கை­க­ளை­யும், கவர்ச்­சி­க­ர­மான பரி­சு­க­ளை­யும், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வாரி வழங்­கு­வர்­.

செப்­டம்­ப­ரில் தொடங்­கிய இந்த ஆண்­டுக்­கான பண்­டி­கை ­கா­லம், அவ்­வ­ளவு சுரத்­தாக இல்லை. செப்­டம்­பர் மாதத்­தில் விற்­ப­னை­யில், 5.5 சத­வீத சரிவு ஏற்­பட்­டது.இது, கடந்த மூன்று மாதங்­களில் இல்­லாத சரிவு. பின்­னர் அக்­டோ­ப­ரி­லும் இதே நிலைமை.மாருதி சுசூகி நிறு­வ­னம், அக்­டோ­ப­ரில் 1.46 லட்சம் கார்­களை விற்­பனை செய்­தது. அதற்கு முந்­தைய மாதத்­தோடு ஒப்­பி­டும்­போது, விற்­பனை, 0.2 சத­வீ­தம் மட்­டுமே உயர்ந்­துள்­ளது.


இதே­போல், பிற கார் நிறு­வ­னங்­க­ளின் விற்­பனை எண்­ணிக்­கை­யும், பெரும் நம்­பிக்­கை­யைத் தரு­வ­தாக இல்லை.விற்­பனை ஒரு அள­வு­கோல் என்­றால், வாக­னப் பதிவு இன்­னொரு அள­வு­கோல். மத்­திய அரசு, வாக­னப் பதி­வு­க­ளுக்கு என்று, ‘வாஹன்’ என்­றொரு வலைத்­த­ளத்தை
வைத்­தி­ருக்­கிறது.அதி­லி­ருந்து, திரட்­டப்­பட்ட தக­வல், இன்­னும் ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கிறது.


செம்­டம்­பர் மாதத்­தோடு ஒப்­பி­டும்­போது, அக்­டோ­பர் மாதத்­தில் இந்­தி­யா­வில் நடை­பெற்ற வாக­னப் பதி­வு­கள், 17 சத­வீ­தம் குறைவு. சென்ற ஆண்டு, இதே மாதத்­தோடு ஒப்­பி­டும்­போது, வாக­னப் பதி­வு­கள், 35 சத­வீ­தம் வரை குறைவு.தசரா மற்­றும் துர்கா பூஜை சம­யத்­தில் ­தான்,
வாக­னப் பதிவு அதி­க­ரிக்­கும். ஆனால், இம்­முறை சரிந்­துள்­ளது. அதில், முன்­ன­ணி­யில் இருப்­பது குஜ­ராத். அங்கே, 85 சத­வீ­தம் சரிவு.


அதைத் தொடர்ந்து மேற்கு வங்­கத்­தில், 37; உத்­த­ரப் பிர­தே­சத்­தில், 23; ஹரி­யா­னாவில், 22; மஹா­ராஷ்­டி­ராவில், 13 சத­வீதம் சரிவு. புதிய பதி­வு­கள் உயர்ந்த ஒரே பகுதி புதுடில்லி மட்­டுமே. 2.7 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.முதற்­கா­ர­ணம், பெட்­ரோல், டீசல் விலை உயர்வு. நாடெங்­கி­லும் மக்­கள் விலை உயர்­வை கண்டு அஞ்­சு­கி­ன்றனர். அத­னால், வாக­னங்­கள் வாங்­கு­வதை ஒத்­திப் போட்­டி­ருக்­கி­ன்றனர்.


இரண்­டா­வது முக்­கிய கார­ணம், வாக­ன காப்­பீட்­டுத் தொகை உயர்ந்­தது. இரு­சக்­கர வாகன விலை­யில், 10 சத­வீ­தம் வரை, காப்­பீட்­டுத் தொகை உயர்ந்­துள்­ளது. கார் காப்­பீட்­டிலோ, கட்­ட­ணம் இரு­ம­டங்­கா­கி­யுள்­ளது. இது வாக­னம் வாங்­கும் செல­வைக் கடு­மை­யாக உயர்த்­தி­யுள்­ளது.கேர­ளத்­தில் பெரு­மழை ஏற்­பட்­ட­தால், அங்கே விற்­பனை சரிவு.


மேற்கு வங்­கத்­திலோ, ஓட்­டு­னர் உரி­மம் இல்­லா­த­வர்­க­ளுக்கு இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­யக்­கூ­டாது என்ற தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், அங்கே இரு­சக்­கர வாகன விற்­பனை குறைந்­துள்­ளது.மொத்­தத்­தில், இரு­சக்­கர வாகன பதி­வில், 20 முதல், 25 சத­வீத சரி­வும், கார் பதி­வில், 10 முதல், 17 சத­வீத சரி­வும் காணப்­ப­டு­கிறது.

வாகன விற்­ப­னை­யில் பல இடங்­களில் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. பொது­வாக, விற்­பனை முக­வர்­கள், 5 முதல், 15 நாள் வரை­யான ஸ்டாக்­கைத்­தான் கையி­ருப்பு வைத்­தி­ருப்­பர்­.
ஆனால், தொடர்ச்­சி­யாக, சில மாதங்­க­ளாக, பல முக­வர்­கள், 45 நாள் வரை­யி­லான ஸ்டாக்கை வைத்­தி­ருக்­கின்றனர். இது முக­வர்­கள் மத்­தி­யில், பெரும் நிதி அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது.

ஓலா, ஊபர் போன்ற நிறு­வ­னங்­க­ளோடு சேர்ந்து கார்­களை சர­ச­ர­வென்று விற்ற காலம் ஒன்று உண்டு. இப்­போது, அங்­கே­யும் தேக்­கம். புதிய கார்­களை வாங்க அங்­கே­யும் தயக்­கம்.
இவை­யெல்­லாம் உணர்த்­து­வது ஒன்­று ­தான். பொரு­ளா­தா­ர சுழற்­சி­யில் எங்கோ சிக்­கல். மக்­கள் துணிந்து புதிய பைக்­கு­க­ளையோ, கார்­க­ளையோ வாங்­கத் தயங்­கு­கி­ன்றனர்.


தேவை­யைத் தாண்டி, கையில் உபரி காசு புரண்டு, மன­த­ள­வில் சுபிட்­ச­மாக உண­ரும்­போது தான், இத்­த­கைய ஆடம்­ப­ரச் செல­வு­க­ளைச் செய்ய மக்­கள் முன்­வ­ரு­வர்­. நடுத்­தர மக்­க­ளின் கார் கனவு கைநழு­வு­கி­றதோ என்ற அச்­சம் எழா­மல் இல்லை.

ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)