இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ... திவால் சட்டத்தில் கடன் தீர்வு திட்டம் இணைப்பு? திவால் சட்டத்தில் கடன் தீர்வு திட்டம் இணைப்பு? ...
வாடகை ஸ்கூட்டர் சேவையில் வோகோ – ஓலா கைகோர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
23:24

புதுடில்லி : வலைதள சந்தை நிறுவனமான, ‘ஓலா’ வாடகை கார் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வாடகை ஸ்கூட்டர் சேவையை வழங்கி வரும், பெங்களூரைச் சேர்ந்த, ‘வோகோ’ நிறுவனத்தில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இத்தொகை, வோகா நிறுவனம், மேலும் ஒரு லட்சம் ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட உதவும். இதன் மூலம், விரைவில், ஓலாவின், 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக, வாடகை ஸ்கூட்டர் சேவையும் கிடைக்கும். அவர்கள், ‘ஓலா ஆப்’ மூலம், இச்சேவையை பெறலாம்.வோகோ நிறுவனம், பெங்களூரு மற்றும் ஐதராபாதில், வாடகை ஸ்கூட்டர் சேவையை மேற்கொண்டு வருகிறது. அந்நகரங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், வோகா வாடகை ஸ்கூட்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

விரைவில் மேலும் பல நகரங்களுக்கு, வாடகை ஸ்கூட்டர் சேவையை நீட்டிக்க, வோகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, ஓலாவின் முதலீடு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில், ‘மா உலா’ நிறுவனம், வாடகை ஸ்கூட்டர் சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)