ஏற்றுமதி ரூ.22 லட்சம் கோடியை தாண்டும்:மத்திய வர்த்தக துறை நம்பிக்கைஏற்றுமதி ரூ.22 லட்சம் கோடியை தாண்டும்:மத்திய வர்த்தக துறை நம்பிக்கை ... நிதி ஒதுக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்புக்கு அதிகாரம் 15வது நிதி குழுவுடன் பரிசீலிக்க மத்திய அரசு திட்டம் நிதி ஒதுக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்புக்கு அதிகாரம் 15வது நிதி குழுவுடன் ... ...
நிதி ஒதுக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்புக்கு அதிகாரம் 15வது நிதி குழுவுடன் பரிசீலிக்க மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
00:13

புதுடில்லி:‘‘மாநில வளர்ச்­சிக்­கான நிதி ஒதுக்­கும் அதி­கா­ரத்தை, ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு வழங்­கு­வது தொடர்­பாக, ௧5வது நிதிக் குழு­வு­டன் பரி­சீ­லிக்­கப்­படும்,’’ என, நிடி ஆயோக் துணை தலை­வர், ராஜீவ் குமார் தெரி­வித்­துள்­ளார்.
கடந்த, 1950, மார்ச், 15ல், அப்­போ­தைய பிர­த­மர், நேரு தலை­மை­யில், தேசிய திட்­டக் குழு துவக்­கப்­பட்­டது.இக்­குழு, நாட்­டின் பொரு­ளா­தா­ரம், உற்­பத்தி ஆகி­ய­வற்றை உயர்த்­து­வ­தற்­கான, ஐந்­தாண்டு திட்­டங்­களை வகுத்து, அவற்­றுக்கு, மத்­திய, மாநில அர­சு­களின் செல­வி­னங்­களை முடிவு செய்­வ­தில், முக்­கிய பங்கு வகித்­தது.
இரு பிரிவுகள்
இந்­நி­லை­யில், மத்­திய அரசு, 2015, ஜன., 1ல், திட்­டக் குழு­வுக்கு பதி­லாக, மாநில வளர்ச்­சிக்­கான கொள்கை திட்­டங்­களை உரு­வாக்­கித் தரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யது.இது, மத்­திய அரசு திட்­டங்­கள், சமூக பாது­காப்பு தொடர்­பாக, மாநில அர­சு­களின் விருப்­பத்­திற்­கேற்ப செயல்­ப­டுத்­தும் திட்­டங்­கள் என, இரு பிரி­வு­களின் கீழ், கொள்­கை­களை வகுத்து தரும் பணியை மேற்­கொண்டு வரு­கிறது.
இந்த அமைப்­பிற்கு, திட்­டக் குழு­விற்கு இருந்­தது போன்ற, மாநி­லங்­க­ளுக்கு ஏற்ப, வளர்ச்சி திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யும் அதி­கா­ரம் இல்லை.அத­னால், ‘கூடு­தல் அதி­கா­ரங்­க­ளு­டன், ‘நிடி­ ஆ­யோக் 2.0’ அமைப்பை உரு­வாக்­க­லாம்’ என, மத்­திய நிதிக் குழு முன்­னாள் தலை­வர், விஜய் கேல்­கர், சமீ­பத்­தில் யோசனை தெரி­வித்­தி­ருந்­தார்.
புதிய நிடி­ஆ­யோக் அமைப்­பிற்கு, நிதி ஒதுக்­கும் அதி­கா­ரம் வழங்­கி­னால், பின்­தங்­கிய மாநி­லங்­கள் வளர்ச்சி காண வழி ஏற்­படும். பிராந்­திய அள­வில், வளர்ச்சி அடைந்த மாநி­லங்­க­ளுக்­கும், முன்­னேறி வரும் மாநி­லங்­க­ளுக்­கும் இடை­யி­லான, ஏற்­றத் தாழ்வு குறை­யும் என, கேல்­கர் கூறி­யி­ருந்­தார்.
சரியான தருணம்
இது குறித்து, நிடி ஆயோக் துணை தலை­வர், ராஜீவ் குமார் கூறி­ய­தா­வது:நிதித் துறை செய­லர், நிதிக் குழு தலை­வர் என, நீண்ட கால அனு­ப­வம் உள்ள, விஜய் கேல்­கர் தெரி­வித்த கருத்து பரி­சீ­லிக்­கப்­படும்.வளர்ச்சி திட்­டங்­க­ளுக்­காக, மாநில அர­சு­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டி­யது அவ­சி­யம்­ தான்.
இது, மாநில அர­சு­கள் இடை­யே­யான கூட்­டு­றவை மேம்­ப­டுத்­தும் என்­ப­து­டன், கூட்­டாட்சி தத்­து­வத்­தில், போட்­டித் தன்­மையை அதி­க­ரித்து, நாட்­டின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்­கும் வழி வகுக்­கும்.தேசிய அள­வில் முழு­மை­யான நிதி வளத்தை மேம்­ப­டுத்­து­வது மட்­டு­மின்றி, மாநி­லங்­கள் இடையே, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு, உரிய நிதி ஒதுக்­கீடு செய்து, சம வளர்ச்சி காண்­ப­தற்­கான முயற்­சிக்கு உகந்த தரு­ணம் இது, என கரு­து­கி­றேன்.
இத­னால், தற்­போது, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களில் பல­வீ­ன­மாக உள்ள மாநி­லங்­கள் கூட, முன்­னே­றிய மாநி­லங்­க­ளு­டன் சேர்ந்து வளர்ச்சி காண முடி­யும்.விஜய் கேல்­க­ரின் யோசனை குறித்து, 15வது நிதிக் குழு கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்டு, உரிய முடிவு எடுக்­கப்­படும் இவ்­வாறு அவர் கூறி­னார்.

மத்­திய அரசு, திட்­டக் குழுவை கலைத்து, நிடி ஆயோக் மூலம், ஏரா­ள­மான திட்­டங்­களை துவக்­கி­யது. எனி­னும், அத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான, நிதி ஒதுக்­கும் அதி­கா­ரம், மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் அல்­லது சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்­க­ளி­டம் தான் உள்­ளது. அத­னால், நிடி ஆயோக்­கிற்கு, நிதி ஒதுக்­கும் அதி­கா­ரம் வழங்க வேண்­டும் என்­பது சரியே.யோகிந்­தர் அலக், முன்­னாள் மத்­திய அமைச்­சர், பொரு­ளா­தார வல்­லு­னர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)