பதிவு செய்த நாள்
04 ஏப்2019
13:26
மும்பை : கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் நடந்தது. நடப்பு நிதியாண்டின் முதல்கூட்டம் இது.
இந்தக்கூட்டத்தில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்களுக்கான வட்டி வகிதமான ரெப்போ வட்டி, 6.25 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் மூன்று மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் 2019 - 20ம் ஆண்டுக்கான நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 7.4 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|