பதிவு செய்த நாள்
23 ஜன2022
01:06
புதுடில்லி:சரிவுக்கு மேல் சரிவை சந்தித்து வருகிறது, வோடபோன் ஐடியா நிறுவனம். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் நஷ்டம் 7,231 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம் 7,231 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 4,532 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது.செயல்பாட்டு வருவாயும், கிட்டத்தட்ட 10.8 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.
இந்நிறுவனம், தொலைபேசி கட்டணத்தை அதிகரித்தது, இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கின்றனர், சந்தை நிபுணர்கள். கடந்த நவம்பரில், இந்நிறுவனம் அனைத்து வகையான திட்டங்களுக்குமான கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது.
இதையடுத்து, 2020 டிசம்பர் காலாண்டில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26.98 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 24.72 கோடியாக சரிவைக் கண்டு உள்ளது.இருப்பினும், ‘4ஜி’ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, இக்காலாண்டில் 80 லட்சம் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அண்மையில், இந்நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக, பங்குகளை அரசுக்கு வழங்க முன்வந்தது. ஆனால், அரசு தரப்பில் இத்திட்டம் அடியோடு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|