பதிவு செய்த நாள்
23 ஜன2022
01:15
புதுடில்லி: ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், இதுவரை இல்லாத வகையில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மொத்த வருவாயாக 57 ஆயிரத்து 714 கோடி ரூபாயை ஈட்டி உள்ளது.
மேலும், இக்காலாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 3,822 கோடி ரூபாயை பெற்றுள்ளது.ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் துவங்கியதிலிருந்து, அதன் வருவாய், இந்த காலாண்டில் தான், முதன் முறையாக 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிறுவனத்தின் நிகர லாபம், இக்காலாண்டில் 2,259 கோடி ரூபாயாக உள்ளது.
கொரோனா பாதிப்புகள் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, இக்காலாண்டில் விற்பனை அதிகரித்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து முகேஷ் அம்பானி, கூறுகையில், “பண்டிகை காலத்தை ஒட்டி இக்காலாண்டில் சில்லரை வணிக செயல்பாடுகள் அதிகரித்து உள்ளன.
‘‘நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னணியில் வணிகம் மேம்பட்டு உள்ளது’’ என்றார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 41 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரத்து, 549 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோல், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் நிகர லாபம் 10 சதவீதம் அதிகரித்து, 3,615 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|