பதிவு செய்த நாள்
29 மார்2016
07:08
புதுடில்லி : ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த, யோகோஹமா ரப்பர் நிறுவனம், வர்த்தக வாகனங்களுக்கான டயர்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், நெதர்லாந்தைச் சேர்ந்த, ஏ.டி.ஜி., எனப்படும், அலையன்ஸ் டயர் குழுமத்தை, 117 கோடி டாலருக்கு வாங்குகிறது.இது தொடர்பான நடைமுறைகள், வரும், ஜூலை 1ம் தேதிக்குள் முடிவடையும் என, யோகோஹமா ரப்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏ.டி.ஜி., குழுமம், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 120 நாடுகளில், ‘ரேடியல், பயஸ்’ வகை டயர்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, விவசாயம், தொழில், கட்டுமான துறைகளிலும், வனப்பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் வாகனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான டயர்களை தயாரிக்கிறது. இது, இப்பிரிவில் இதுவரை கால் பதிக்காத, யோகோஹமா ரப்பர் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|