பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... வங்­கி­யில் வட்­டியை மட்­டும் பார்த்­தால் போதுமா? வங்­கி­யில் வட்­டியை மட்­டும் பார்த்­தால் போதுமா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
00:11

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் பெரிய மாற்­றங்­கள் இல்­லா­மல், சர்­வ­தேச சந்­தை­யில், 56 – 59 டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­க­மா­னது. தொடர்ந்து, மூன்று மாதங்­கள் அதா­வது, செப்., – நவ., வரை, ஒரு பேரல், 13 டாலர் உயர்ந்து, 59.03 என்ற இரு ஆண்டு உச்­சத்தை எட்­டி­யது.

டிச., மாதத்தை பொறுத்­த­வரை, இரு வாரங்­க­ளாக, சந்­தை­யில் எண்­ணெய் விலை, ஒரு பேரல், 60 டாலர் என்ற நிலைக்கு கீழாக வர்த்­த­க­மா­கி­யது. நவ., 30ல் நடை­பெற்ற, ‘ஒபெக்’ நாடு­களின் கூட்­டத்­தில், உறுப்பு நாடு­கள், தங்­க­ளது உற்­பத்தி குறைப்பை, சரி­யாக அமல்­ப­டுத்­தும் என, அறி­வித்­தன. மேலும், 2018 மார்ச் மாதத்­தோடு முடி­வ­டைய உள்ள உற்­பத்தி குறைப்பு, அதா­வது தின­சரி, 1.80 மில்­லி­யன் பேரல்­கள் குறைப்பை, மீண்­டும் ஒரு ஒன்­பது மாதத்­திற்கு அதா­வது, 2018 டிசம்­பர் வரை நீட்­டிப்­பது என­வும் முடி­வெ­டுத்து அறி­வித்­தன.

ஆனால், இம்­மு­டிவை எதிர்­நோக்கி, அது அம­லா­வ­தற்கு முன்­, மேற்­கூ­றிய மூன்று மாதங்­களில், விலை உயர ஆரம்­பித்து விட்டது. இத­னால், இந்த கூட்­டத்­திற்கு பின், பெரிய அள­வில் விலை மாற்­றம் எது­வு­மில்லை. உற்­பத்தி குறைப்பு அளவை உயர்த்­து­வது அல்­லது கால அளவை நீட்­டிப்­பது, எதேச்­சை­யாக நிகழ்ந்­த­தெ­னில், விலை­யில் மாற்­றம் ஏற்­பட வாய்ப்பு இருக்­கிறது. ஆனால், எதிர்­பார்த்த மாதிரி தான் கூட்­டத்­தில் அறி­விப்பு வெளி­யா­னது. மேலும், பெருகி வரும், அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் உற்­பத்தி, விலை­யேற்­றத்தை கட்டுக்­குள் கொண்டு வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட சூறா­வளி காற்­றால், பல எண்­ணெய் ஆழ்­கு­ழாய்­கள் மற்­றும் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­கள், அக்., – நவ., மாதங்­களில், சரி­வர இயங்­க­வில்லை. அதன் தாக்­கம் குறைந்த பின், இயல்பு நிலைக்கு திரும்­பி­யது. இத­னால், உற்­பத்தி அதி­க­ரித்­தது. ஐ.இ.ஏ., புள்ளி விப­ரப்­படி, 2018 மத்­தி­யி­லி­ருந்து, அமெ­ரிக்க உற்­பத்தி, ரஷ்ய நாட்­டின் உற்­பத்தி அளவை எட்­டும் என, தெரிய வந்­துள்­ளது. தற்­போது, தின­சரி, 9.78 மில்­லி­யன் பேரல் உற்­பத்­தித் திறன் கொண்­ட­தாக, அமெ­ரிக்கா இருக்­கிறது. 747 ஆழ்­கு­ழாய் கிண­று­கள் உள்ளன. வரும் நாட்­களில், 60 டாலர் நல்ல ரெசிஸ்­டென்ட் ஆகும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,641 3,585 3,698 3,770என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 56.50 54.50 60.00 62.00

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம் சரி­வில் ஆரம்­பித்­தா­லும், வார இறு­தி­யில் ஏற்­றம் கண்டு, உயர்ந்து வர்த்­த­கம் முடி­வுற்­றது. முந்­தைய வாரங்­களின் சரி­வில் இருந்து மீண்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ், அதன் சரி­வில் இருந்து மீண்­ட­தும் தங்­கம், வெள்ளி விலை சரிய கார­ண­மா­கி­யது. அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்ட முன்­னேற்­ற­மும், அரசு பணி­யில் புதி­தாக வேலைக்கு சேர்ந்­த­வர்­கள் எண்­ணிக்கை உயர்­வும், டிச., 13ல், அமெ­ரிக்க ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகி­தத்தை எதிர்­பார்த்த மாதிரி உயர்த்­தி­ய­தும், தங்­கத்­தின் விலை­யில் தாக்­கத்தை ஏற்­படுத்­தி­யது. இருப்­பி­னும், வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் என்ற எதிர்­பார்ப்­பில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, இரு மாதங்­க­ளாக குறைய ஆரம்­பித்­தன.

வட்டி விகித கூட்­டத்­தில், அடுத்த ஆண்டு, வட்டி விகி­தம் எத்­தனை முறை உயர்த்­தப்­படும் என்ற எதிர்­பார்ப்பு தான், தற்­போது உள்ளது. அது சரி­வர தெளி­வா­காத நிலை­யில், தங்­கம் விலை சரி­வில் இருந்து, கடந்த வார இறு­தி­யில் மீண்­டது. நீண்ட நாட்­க­ளாக, அமெ­ரிக்க அதி­பர் கொண்டு வந்த புதிய வரி சீர்­தி­ருத்த கூட்­டத்­தில், விவா­தம் நடை­பெற்று வரு­கிறது. இது, பொரு­ளா­தா­ரத்­துக்கு எந்த அள­வில் உத­வும் என்­ப­தில், சந்­தே­கம் நில­வு­கிறது. இத­னால், டாலர் இண்­டெக்­சில் தற்­கா­லிக வீழ்ச்சி ஏற்­பட்­ட­தன் கார­ண­மாக, தங்­கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த வார இறு­தி­யில் உயர்ந்து வர்த்த­க­மா­கி­யது.

மேலும், உயர்ந்து வரும் வட்டி விகி­த­மும், விலைக்கு சவா­லாக உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆப­ரண தங்­கம் நுகர்­வில், இந்­தியா பெரும்­பங்கு வகிக்­கிறது. நவம்­ப­ரில், இந்­தி­யா­வின் தங்­கம் இறக்­கு­மதி, 26 சத­வீ­தம் குறைந்து, 3.26 மில்­லி­யன் டால­ராக இருந்­தது. இருப்­பி­னும், தங்க நகை­கள் மற்­றும் நவ­ரத்­தின கற்­கள் ஏற்­று­ம­தி­யா­னது, 21.85 சத­வீ­தம் உயர்ந்­தி­ருந்­தது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,180 28,000 28,400 28,590காம்எக்ஸ் (டாலர்) 1,250 1,238 1,262 1,275


வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 36,910 36,400 37,250 37,610காம்எக்ஸ் (டாலர்) 15.40 14.70 16.25 17.00


செம்பு:
செம்பு விலை, கடந்த வார ஆரம்­பத்­தில் துவங்கி, ஐந்து நாட்­க­ளி­லும் உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது. சர்­வ­தேச சந்­தை­யி­லும், லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்ச் மற்­றும் சீன பொருள் வாணிப சந்­தை­யி­லும் விலை­யேற்­றம் காணப்­பட்­டது.

கடந்த வாரம் வெளி வந்த, சீன நாட்­டின் தொழில் துறை வளர்ச்சி விகி­தம், அக்., மாதத்தை காட்­டி­லும், நவ., மாதம், 6.1 ஆக இருந்­தது. இதன்­பின், தொழிற்­சாலை மூலப்­பொ­ருள் தேவை அதி­க­ரித்­த­தால், அனைத்து கனி­மங்­களும் விலை உயர துவங்­கின. லண்­டன் எக்ஸ்­சேஞ்­சில், செம்பு, 1 டன், 7,000 டால­ருக்­கும், சீன சந்­தை­யில், 15 ஆயி­ரம் யுவான் என்ற உச்­சத்­தி­லும் வர்த்­த­க­மா­கி­யது. பெரு நாட்­டில் ஏற்­பட்ட, செம்பு சுரங்க தொழி­லா­ளர் வேலை நிறுத்­தம், அதன் உற்­பத்­தியை பாதிப்­புக்கு உள்­ளாக்­கி­யது. இது­வும், விலைக்கு சாத­க­மாக அமைந்­தது. வரும் நாட்­க­ளி­லும், இந்­நிலை தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 441.50 435.00 448.20 455.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)