அமெரிக்காவின் உருக்கு வரி பன்னாட்டு நிதியம் எச்சரிக்கைஅமெரிக்காவின் உருக்கு வரி பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை ... ஆன்­லைனில் பி.எப்., பணம் கோரும் வழி ஆன்­லைனில் பி.எப்., பணம் கோரும் வழி ...
கார், இருசக்கர வாகன விற்பனை சூடு பிடித்தது வாகன உதிரி பாகங்கள் துறையின் வருவாய் மேலும் உயரும்: ‘இக்ரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:18

மும்பை:அனைத்து வாக­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து உள்­ள­தால், வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் வரு­வாய் வளர்ச்சி மதிப்­பீட்டை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ மேலும் உயர்த்தி உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

இந்­தி­யா­வில், அனைத்து வகை வாக­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து உள்­ள­தால், அதை சார்ந்­துள்ள வாகன உதிரி பாகங்­கள் துறை வளர்ச்­சி­யும், ஏறு­மு­கத்­தில் உள்­ளது.வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் மொத்த விற்­று­மு­த­லில், 48 சத­வீத நிறு­வ­னங்­கள், 26 சத­வீத பங்­க­ளிப்பை வைத்­துள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், நடப்பு, 2017 – -18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., காலாண்­டில், 18.5 சத­வீத வரு­வாய் வளர்ச்­சியை கண்­டுள்ளன.

ஏற்றுமதி

உள்­நாட்­டில், பய­ணி­யர் வாக­னங்­கள், வர்த்­தக வாக­னங்­கள், டிராக்­டர் மற்­றும் இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை அமோ­க­மாக உள்­ளது. இத­னால், வாக­னங்­க­ளுக்­கான, உதிரி பாகங்­கள் விற்­ப­னை­யும் நன்கு உள்­ளது.இதன் கார­ண­மாக, நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – டிச., வரை­யி­லான, ஒன்­பது மாதங்­களில், வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் வரு­வாய் வளர்ச்சி, ஏற்­க­னவே மதிப்­பி­டப்­பட்ட, 9 – - 11 சத­வீ­தத்­தில் இருந்து, 12.3 சத­வீ­த­மாக அதி­க­ரித்து உள்­ளது.இவ்­வ­ளர்ச்சி, நடப்பு, ஜன., – மார்ச் காலாண்­டில், மேலும் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதன் கார­ண­மாக, முழு நிதி­யாண்­டிற்­கான, வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் வரு­வாய் வளர்ச்சி, முந்­தைய மதிப்­பீ­டான, 9 – -11 சத­வீ­தத்­தில் இருந்து, 13 – -15 சத­வீ­த­மாக உயர்த்தி நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.உள்­நாட்­டில், குறிப்­பாக, பய­ணி­யர் வாக­னங்­கள் மற்­றும் இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை அதி­க­ரித்து வரு­கிறது. இந்த இரு பிரி­வு­களும், வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், மூன்­றில் இரு பங்­கு­டன், வளர்ச்­சிக்கு முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கு­கின்றன.

எனி­னும், உள்­நாட்­டில் பய­ணி­யர் வாக­னங்­க­ளுக்­கான தேவை உயர்ந்த அள­விற்கு, அவற்­றின் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யி­லான ஏற்­று­மதி, முந்­தைய இரு காலாண்­டு­களில் உய­ர­வில்லை. வரும் காலாண்­டு­களில், இந்த தொய்வு சரி­யா­கும்.

தேவை அதிகரிப்பு

அவ்­வாறு இல்­லை­யென்­றா­லும், அதை ஈடு செய்­யும் அள­விற்கு, உள்­நாட்டு வாகன விற்­பனை வளர்ச்சி இருக்­கும். வர்த்­தக வாக­னங்­கள் மற்­றும் டிராக்­டர் பிரி­வு­களும், இத்­து­றை­யின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்கு உதவி வரு­கின்றன.அடிப்­படை கட்­ட­மைப்பு துறை சார்ந்த பணி­கள் வேக­மெ­டுத்து உள்­ள­தால், கட்­டு­மா­னம், சுரங்­கம் ஆகிய துறை­களில் பயன்­படும், ‘டிப்­பர்’ லாரி­கள் உள்­ளிட்ட கன­ரக வாக­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. இது­வும், வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் ஏற்­றத்­திற்கு துணை புரி­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)