பதிவு செய்த நாள்
04 ஏப்2018
00:42
புதுடில்லி:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, மார்ச்சில், முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை கண்டுள்ளது.
இது குறித்து நிக்கி – மார்கிட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:கடந்த மார்ச்சில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி இந்தியா எம். பி.எம்.ஐ.,’ குறியீடு, 51 புள்ளிகளாக குறைந்துள்ளது.இது, 2017 அக்டோபருக்கு பின், காணப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியாகும். அம்மாதம், குறியீடு, 50.3 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியை குறிக்கும். அதன் அடிப்படையில், தொடர்ந்து எட்டு மாதங்களாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.இது, மிதமான வளர்ச்சி என்றாலும், முதன் முறையாக, மார்ச்சில், புதிய ‘ஆர்டர்கள்’ மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
ஏற்றுமதியில் ஓரளவு புதிய ‘ஆர்டர்’கள் அதிகரித்த போதிலும், சர்வதேச வர்த்தகப் பிரச்னைகள், அன்னிய வாடிக்கையாளர்களுக்கான விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.நுகர்வோர் சாதனங்கள் மற்றும் இடைநிலைப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதால், தயாரிப்பு நிறுவனங்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.
மார்ச்சில், மூலப்பொருட்கள் விலையும், விற்பனை விலையும், சிறிதளவு உயர்ந்துள்ளதால், பணவீக்கத்தின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது.கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், நுகர்வோர், பொருட்கள் வாங்க செலவிடுவது, எதிர்பார்த்ததை விட, குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், கடந்த நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|