அமெரிக்க புகைச்சலும், இந்திய அமைதியும்! அமெரிக்க புகைச்சலும், இந்திய அமைதியும்! ... கமாடிட்டி சந்தை  கமாடிட்டி சந்தை ...
பண்­டிகை கால, ‘ஷாப்­பிங்’கை திட்­ட­மி­டு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
00:12

பண்­டிகை காலம் துவங்­கி­யுள்ள நிலை­யில், வர்த்­தக நிறு­வ­னங்­கள் தள்­ளு­படி சலு­கை­கள் மூலம் கவர்ந்­தி­ழுக்­க­லாம். பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, பல பொருட்­களை வாங்­க­வும், பரி­ச­ளிக்­க­வும் நீங்­கள் திட்­ட­மிட்­டி­ருக்­க­லாம். ஆனால், சரி­யாக திட்­ட­மி­டா­விட்­டால் பட்­ஜெட்
அதி­க­மாகி, சிக்­கலை ஏற்­ப­டுத்­த­லாம். இதை தவிர்க்க, பண்­டிகை கால,‘ஷாப்­பிங்’ செய்­யும் போது மன­தில் கொள்ள வேண்­டி­யவை:


திட்­ட­மி­டுங்­கள்

பட்­ஜெட் போட்டு செலவு செய்­வது சிறந்­தது என்­பதை நீங்­கள் அறிந்­தி­ருக்­க­லாம். ஷாப்­பிங்­கிற்­கும் இது பொருந்­தும். பண்­டிகைகால ஷாப்­பிங்­கிற்­கும் பட்­ஜெட் தேவை. நீங்­கள் வாங்க விரும்­பும் பொருட்­களை பட்­டி­ய­லிட்டு, அதற்கு தேவை­யான தொகையை ஒதுக்க வேண்­டும். மாதாந்­திர பட்­ஜெட்டைபதம் பார்க்­காத வகை­யில், இந்த பட்­ஜெட் அமை­வது சிறந்­தது.


துாண்­டு­தல் ஷாப்­பிங்


பண்­டிகை காலத்­தின் போது, தள்­ளு­படி சலு­கை­கள் மூலம் குறைந்த விலை­யில் பொருட்­களை வாங்­க­லாம். ஆனால், அதற்கு முன் அந்த பொருள் தேவை­யா­னதா என்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும். முக்­கி­ய­மாக செலவு அதி­க­மான பொருட்­கள் விஷ­யத்­தில், இந்த கேள்வி அவ­சி­யம். தள்­ளு­ப­டி­யால் துாண்­டப்­பட்டு மட்­டும் பொருட்­களை வாங்கக் கூடாது.


கிரெ­டிட் கார்டு கவ­னம்


கிரெ­டிட் கார்டு கையில் இருந்­தால், பின்­னர் செலுத்­திக்­ கொள்­ள­லாம் என்ற, மன நிலை­யில் பொருட்­களை வாங்­கத்­தோன்­றும். பண்­டிகை காலத்­தில் இது, இன்­னும் தீவி­ர­மாக இருக்­க­லாம். கிரெ­டிட் கார்டு மூலம் வாங்­கு­வது சுல­ப­மாக இருந்­தா­லும், அது சுமை­யாக மாறி­வி­டும் வாய்ப்­புள்­ளதை உணர்ந்து, தேவை­யான பொருட்­க­ளுக்கு மட்­டுமே, கார்டை நாட வேண்­டும்.-


போனஸ் செலவு


பல ஊழி­யர்­க­ளுக்கு பண்­டிகை கால போனஸ் கிடைக்­கும் வாய்ப்­புள்­ளது. போனஸ் தொகை உற்­சா­கம் அளித்­தா­லும், அதை பயன்­ப­டுத்­து­வ­தில் புத்­தி­சா­லித்­த­னம் தேவை. இதில், கணி­ச­மான பகு­தியை சேமிப்பு, முத­லீட்­டிற்கு ஒதுக்­கிய பின், எஞ்­சிய தொகை­யையே செல­விட வேண்­டும். கடன்­கள் இருந்­தால், அவற்றை அடைக்க முன்­னு­ரிமை தர வேண்­டும்.


விலை ஒப்­பீடு


பொருட்­களை வாங்­கும் போது, அதிக சலுகை பெற,ஆன்­லைன் ஷாப்­பிங்கை பரி­சீ­லிக்­க­லாம். பல நிறு­வ­னங்­கள் சலு­கை­களை அறி­விப்­ப­தால், எங்கு சிறந்த விலைகிடைக்­கிறது என, பார்க்க வேண்­டும். அதிக விலை கொண்ட பொருட்­களை வாங்­கும் முன், அவற்­றுக்­கான விலையை ஒப்­பிட்டு பார்த்து தீர்­மா­னிக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)