சரிவில் முடிந்தது வர்த்தகம்சரிவில் முடிந்தது வர்த்தகம் ... தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் 'ஈவிட்'  அமைப்பு கருத்தரங்கம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் 'ஈவிட்' அமைப்பு கருத்தரங்கம் ...
நிறுவன செய்திகள்:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2011
00:14

பயோகான் நிறுவனம்90 சதவீத டிவிடெண்டு அறிவிப்பு பயோகான் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில் 100.81 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 25.04 சதவீதம் (80.62 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் வருவாய் 658.21 கோடி ரூபாயிலிருந்து, 703.23 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 30 சதவீத இடைக்கால டிவிடெண்டையும், 60 சதவீத இறுதி டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது. ஆக, சென்ற நிதியாண்டிற்கு இந்நிறுவனம் வழங்கும் டிவிடெண்டு 90 Œதவீதமாகும். இதன்படி 5 ரூபா# முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு, 4.50 ரூபாய் டிவிடெண்டு வழங்கப்படும். * * * அவந்திஸ் பார்மாநிகர லாபம் 40 சதவீதம் உயர்வு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அவந்திஸ் பார்மா நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 50.60 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 40.16 சதவீதம் ( 36.10 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் நிகர விற்பனை, 251.40 கோடியிலிருந்து, 276.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இந்நிறுவனம், சென்ற டிசம்பருடன் முடிவடைந்த முழு நிதியாண்டிற்கு, பங்கு ஒன்றிற்கு 23 ரூபாயை இறுதி டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது. இத்துடன் பங்கு ஒன்றிற்கு, சிறப்பு ஒரு முறை டிவிடெண்டாக 28 ரூபாய் வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. * * * ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிகர லாபம் ரூ.54 கோடி உயர்வு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டு வரும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 53.83 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 11.55 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நிறுவனத்தின் நிகர லாபம், மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 221.90 கோடி ரூபாயிலிருந்து, 318.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. * * * தாபர் நிறுவனம்வருவா# ரூ.1,108 @காடி நுகர்பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் தாபர் நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 147.04 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை விட, 8.5 சதவீதம் (135.47 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் விற்பனை வருவா#, 84.58 கோடி ரூபாயிலிருந்து, 1108.22 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 65 சதவீத இறுதி டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. வழங்கப்பட்ட 50 சதவீத இடைக்கால டிவிடெண்டையும் சேர்த்தால், சென்ற நிதியாண்டிற்கு இந்நிறுவனம் வழங்கும் டிவிடெண்டு 115 Œதவீதமாகும். * * * அம்புஜா சிமென்ட்ஸ்நிகர லாபம் ரூ.407 கோடி அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், சிமென்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 407 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 12 சதவீதம் (462 கோடி ரூபாய்) குறைவு. இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் விற்பனை வருவா# 11 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,990 கோடி ரூபாயிலிருந்து 2,207 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. * * * விப்ரோ நிறுவனம்200 சதவீத டிவிடெண்டு விப்@ரா நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 200 சதவீத டிவிடெண்டு வழங்க உள்ளது. இதன்படி, இரண்டு ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு நான்கு ரூபாய் டிவிடெண்டு வழங்கப்படும். இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 1,375.40 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 13.77 சதவீதம் (1,208.90 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் விற்பனை வருவாய் 18.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,016.10 கோடி ரூபாயிலிருந்து 8,302.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விப்ரோ நிறுவனம், சென்ற முழு நிதியாண்டில், 5,297.70 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 15.34 சதவீதம் (4,593.10 கோடி ரூபாய்) உயர்வாகும். இதே ஆண்டுகளில், விற்பனை வருவாய் 27 ஆயிரத்து 157 கோடியிலிருந்து, 31 ஆயிரத்து 99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. விப்ரோ குழுமத்தைச் சேர்ந்த, விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்டு லைட்டிங் நிறுவனம், சென்ற முழு நிதியாண்டில், 2,726 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)