மே 23ல் பி.எஸ்.என்.எல்., மறுஇணைப்பு மேளாமே 23ல் பி.எஸ்.என்.எல்., மறுஇணைப்பு மேளா ... லட்சுமி விலாஸ் பேங்க் 25 சதவீத டிவிடெண்டு லட்சுமி விலாஸ் பேங்க் 25 சதவீத டிவிடெண்டு ...
மின்னணு சாதனங்கள் வர்த்தகத்தில் மிளிரும் ரிச்சி தெரு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2011
01:44

சென்னையில், ஜவுளி மற்றும் தங்க நகை வர்த்தகத்திற்கு தி.நகர், மீன் வியாபாரத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை, பழைய பைக் விற்பனைக்கு பெல்ஸ் சாலை, பழைய மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு புதுப்பேட்டை போன்று மின்சாரம், மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் விற்பனைக்கு ரிச்சி தெரு புகழ் பெற்று விளங்குகிறது.சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் அண்ணா சிலைக்கு எதிரே ரிச்சி தெரு அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளாக, மின்னணு சாதனங்களும் அவற்றின் உதிரிபாகங்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.இந்தியாவில், 1970 களின் தொடக்கத்தில் வால்வு பொருத்தப்பட்ட ரேடியோக்களின் புழக்கம் அதிகரித்து காணப்பட்டது. இத்தகைய ரேடியோக்கள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மையமாக ரிச்சி தெரு விளங்கியது.1975ம் ஆண்டில் வால்வு பொருத்திய, கருப்பு வெள்ளை 'டிவி' க்கள் வெளிவரத் தொடங்கின. இதையடுத்து டிரான்சிஸ்டர், 'டிவி', அவற்றுக்குத் தேவையான கெபாசிட்டர், ஆன்டெனா, ஸ்டெபிலைசர், ஸ்டேண்டு, 'டிவி' கவர் போன்றவற்றை விற்பனை செய்யும் மையமாகவும் ரிச்சி தெரு வளர்ச்சி பெற்றது. பின்னர், 80'களில், பலதரப்பட்ட ஆடியோ, வீடியோ சாதனங்கள், மின்னணு உதிரிபாகங்களை விற்பனை செய்யும் முனையமாக பரிணாமம் பெற்றது. பின்னர், 'கலர் டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள் என ஒவ்வொரு புதிய வரவிற்கும் வரவேற்பு நல்கும் இடமாக ரிச்சி தெரு தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறது.50 ஆண்டுகளுக்கு முன், ஐந்து முதல் 10 கடைகளைக் கொண்ட இந்த பகுதியில், தற்போது 100க்கும் மேற்பட்ட வர்த்தக வளாகங்களும், அவை அனைத்திலுமாக, 3,000க்கும் மேற்பட்ட கடைகளும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு கடையும் குறைந்தது, 5 முதல் 6 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இதன் மூலம், நேரடியாக ரிச்சி தெருவை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இது தவிர, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளில் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து வருகின்றனர். இங்குள்ள கடைகளில், ரேடியோ,'டிவி', வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ், ஹார்ட் டிஸ்க், பிரின்டர், மோடம், 'விசிடி' 'டிவிடி' பென் டிரைவ், மொபைல் போன் உட்பட வேறு எங்கும் கிடக்காத மின்னணு சாதனங்களும், உதிரிபாகங்களும் கிடைக்கின்றன. இதனால் நண்பகல் முதல் இரவு வரை ரிச்சி தெரு, மக்கள் வெள்ளத்தில் மிதப்பதை காணலாம்.இங்கு, மின்னணு சாதனங்கள் மட்டுமின்றி, மின்சார சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. இதுதவிர, இந்தியாவில் அறிமுகமாகும் எந்த ஒரு மின்சார சாதனத்தையும் ஓரிரு நாட்களிலேயே இப்பகுதியில் வாங்கலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வர்த்தகர்கள், இங்கிருந்து உதிரி பாகங்களை மொத்த விலையில் வாங்கிச் சென்று, தங்கள் பகுதிகளில் கூடுதல் லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.சீனா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள், உபகரணங்கள், உதிரி பாகங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு ரிச்சி தெருவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, டில்லி, மும்பை நகரங்களில் இருந்தும் பொருள்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் இண்டர்காம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கடையில் குறிப்பிட்ட பொருள் இல்லையென்றால், அவை, வேறு ஒரு கடையில் இருந்து தருவிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் ஒருவர், பல்வேறு பொருள்களை வாங்க, கடை, கடையாக ஏறி இறங்கி அலைய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகர்களின் நெருக்கடியால் திணறி வரும் ரிச்சி தெருவில், சிறு வியாபாரிகள் ஆங்காங்கே பாதையை அடைத்து கடை போடுவதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அகில இந்திய ரேடியோ மற்றும் மின்னணு சாதனங்கள் கூட்டமைப்பின் தலைவர் வி. சங்கர் கூறியதாவது:ரிச்சி தெருவில், சிலர் பாதையை அடைத்து கொண்டு தரமில்லாத பொருள்களை விற்பனை செய்கின்றனர். இதை தடுத்தால், மக்கள் நெருக்கடி இல்லாமல் வந்து செல்ல முடியும். இதுதவிர, பார்க்கிங் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இங்கு, மிகப் பழமையான மின் கம்பங்களும், அவற்றில் தொங்கும் கேபிள் உள்ளிட்ட இதர ஒயர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு சங்கர் கூறினார்.மொத்தத்தில், மின்னணு சாதனங்கள் வர்த்தகத்தில், ரிச்சி தெரு, அதன் பெயருக்கேற்ப, 'ரிச்' ஆக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. ரிச்சி தெரு, நரசிங்கபுரம் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகளில், தினமும் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது.இதில், சில்லறை வர்த்தகம் 80 சதவீத அளவிற்கும், மொத்த வர்த்தகம் 20 சதவீத அளவிற்கும் உள்ளது.மொத்த வர்த்தகத்தில் கம்ப்யூட்டர், மின்னணு உதிரி பாகங்கள் மொபைல் போன் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீ. அரிகரசுதன்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)