பதிவு செய்த நாள்
01 ஜூலை2011
10:57
துபாய் : கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெட்புளூ ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் இரு விமான நிறுவனங்களின் சேவையை பெறுவதோடு மட்டுமல்லாமல், ஒன்-ஸ்டாப் டிக்கெட்டிங் மற்றும் பேக்கேஜ் செக்கிங் வசதியையும் பெறமுடியும். கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஹாஸ்டன், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி நகரங்களிலிருந்து தோஹா சர்வதேச விமானநிலையத்திற்கு தினசரி விமான சேவையினை வழங்கி வருகிறது. இந்த சேவைக்கு போயிங் 777 விமானங்கள் பயன்படுத்தப்படுத்தி வருகிறது. கத்தார் ஏர்வேஸ் உடனான கைகோர்ப்பிற்கு பிறகு, ஜெட்புளூ ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள 12 நகரங்களை சேர்த்து, ஆசிய பசிபிக், ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சேவையை விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|